உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை; தமிழக அரசு பணி நியமனத்தில் நடந்த மெகா ஊழல் அம்பலம்!

தலைக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை; தமிழக அரசு பணி நியமனத்தில் நடந்த மெகா ஊழல் அம்பலம்!

நமது சிறப்பு நிருபர்

சென்னை: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த பணி நியமனத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை, லஞ்சம் கை மாறியுள்ளதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இது பற்றி விசாரணை நடத்தும்படி, தமிழக போலீசாருக்கு 232 பக்க அறிக்கையை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக கே.என்.நேரு பதவி வகிக்கிறார். இவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம் நிறுவனம் தொடர்புடைய வங்கி மோசடி குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சோதனைகள் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டன.இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை ஆராய்ந்தபோது அதிர்ச்சியளிக்கும் ஊழல் ஒன்று கண்டறியப்பட்டது.தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் இந்தாண்டு பணி நியமனங்கள் செய்யப்பட்டன. இதற்கென அண்ணா பல்கலை சார்பில் எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்தாண்டு ஆக.,6ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.இவ்வாறு நடந்த பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. பணி நியமனம் பெற்ற 2,538 பேரில் 150 பேர் ரூ.25 முதல் ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுத்து அரசு வேலை பெற்றுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளின் பெயர்கள் அடங்கிய ஆதாரங்களுடன் விசாரணை நடத்த கோரி 232 பக்க கடிதம் ஒன்றை தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை அனுப்பி உள்ளது.அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 காலியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டது. 1.12 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்து உள்ளது. அரசியல்வாதிகள் ஒரு காலியிடங்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை 150 பேரிடம் லஞ்சம் வசூலித்து இருக்கின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களிடமும், தேர்வுகளை நடத்திய அண்ணா பல்கலை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Abdul Rahim
அக் 30, 2025 14:08

உனக்கு 2 ரூவாதாண்


Padmasridharan
அக் 30, 2025 10:42

அண்ணா பலக்லைக்கழகம் சில தன்னலமிக்கவர்களால் நற்பெயரை இழக்கின்றது.


Venugopal S
அக் 30, 2025 06:57

தமிழக மக்கள் இப்போது எல்லாம் உஷாராகி விட்டனர்.இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எல்லாம் நம்புவதில்லை.அதிலும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அமலாக்கத்துறை மேல் இம்மியளவும் நம்பிக்கை இல்லை.


vivek
அக் 30, 2025 08:00

அட வீணா போன.....அதை தமிழக மக்கள் சொல்லட்டும்


Chandru
அக் 30, 2025 11:09

பினாமி ஆக இருப்பாரோ ?


தாமரை மலர்கிறது
அக் 29, 2025 21:08

தமிழகத்தில் லஞ்சத்தை லீகல் ஆக்கிவிடலாம் . ஏனனில் அரசே முன்னின்று லஞ்சம் வாங்கி கொண்டுதான் போஸ்டிங் போடுகிறது. லஞ்சம் கொடுத்து வந்தவர்கள், லஞ்சம் வாங்குவது இயல்பு தானே. பட்டாவை மாற்றி கொடுக்கணுமா, ரெண்டு லட்சம் கொடு என்று சர்வசாதாரணமாக லட்சக்கணக்கில் லஞ்சம் பேசுகிறார்கள். நூறு ஆயிரம் எல்லாம் அந்த காலம். தமிழகம் லஞ்சத்தில் வளர்ந்துவிட்டது. பத்து டீல் முடித்தால், ஒரு வீடு வாங்கி விடலாம் என்ற அளவிற்கு அரசு ஊழியர்கள் கெட்டுபோய்விட்டார்கள். அரசு ஊழியர்களை உடனடியாக பிடித்தவுடன் தூக்கு தண்டனை கொடுத்தால் தான் தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முடியும்.


நிக்கோல்தாம்சன்
அக் 29, 2025 18:37

தமிழக மக்களின் வரிப்பணத்தை எடுத்து ஏதாவது ஒரு திட்டம் செய்வதாக கணக்கு காட்டி கலைஞர் என்று பெயர் வைப்பார்கள் , ஆனால் இப்படி ஊழல் செய்யும் பணத்தை வைத்து எவ்வளவோ அணைகளை காட்டலாமே என்று கேட்டால் அது எங்க பணம் என்று துபாய்க்கு போயி இன்வெஸ்ட் பண்ணுவார்கள் , என்ன உலகமய்யா இது


D.Ambujavalli
அக் 29, 2025 18:29

திராவிட மாடலில் எத்தனை எத்தனை செ . பாலாஜிகளோ ? அப்படியே இவரைக் கைது செய்தாலும், இருக்கவே இருக்கு, காவேரி ஹாஸ்பிடல், pineapple கேசரியுடன் விருந்து, பிணை கிடைத்தது ‘தியாகி’ பட்டம் etc., etc., போங்கப்பா


Sudha
அக் 29, 2025 18:14

இந்நேரம் சுப்ரீம் கோர்ட் தடை வாங்கி இருப்பார்கள்


Rajah
அக் 29, 2025 17:32

தொண்டர்கள் தங்கள் தலைவர்கள் உத்தமர்கள் என்றுதான் வாதிடுவார்கள். விஜய்யின் தொண்டர்களையும் ரசிகர்களையும் தற்குறிகள் என்று விமர்சனம் செய்கின்றார்கள். அப்படியானால் குற்றவாளிகளை தலைவர்களாக போற்றும் தொண்டர்களை என்னவென்று அழைக்கலாம்? அதிமுக அரசில் 10 கோடி ஊழல் நடந்துள்ளது, ஆனால் திமுக அரசிலோ 2 கோடிதான் நடந்துள்ளது. ஆகவே அது குற்றமில்லை என்று வாதிட்டு குற்றத்தை மறைபவர்களும் இருக்கின்றார்கள். விஜய் கட்சியின் தொண்டர்களைக்கூட நல்வழிப் படுத்தி விடலாம். ஆனால் இப்படி ஊழலுக்கு நியாயம் கற்பிற்பவர்களை திருத்தவே முடியாது.


Rajasekar
அக் 29, 2025 16:47

திராவிட கும்பல்


Abdul Rahim
அக் 29, 2025 16:23

என்ன உருட்டு உருட்டினாலும் பாஜகவாலும் அதன் ஏவல் துறையாலும் அதன் அடிமை பத்திரிகைகளாலும் பாஜக அதிமுக கூட்டணியை வெற்றியுறச்செய்ய முடியாது இப்படியே அவதூறு செய்திக்கு பெயர் போனவர்கள் னு பெயரெடுக்கப்போகிறீர்கள்.


vivek
அக் 30, 2025 05:58

என்ன சொம்பு தூக்கினாலும் உங்க இருநூறு மட்டுமே


முக்கிய வீடியோ