உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.டி., ஒரு விசாரணை அமைப்பு தான்.. விருப்பம்போல் செயல்பட முடியாது: டாஸ்மாக்

ஈ.டி., ஒரு விசாரணை அமைப்பு தான்.. விருப்பம்போல் செயல்பட முடியாது: டாஸ்மாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'அமலாக்கத் துறை என்பது ஒரு விசாரணை அமைப்புதான்; தங்கள் விருப்பத்துக்கு செயல்படக் கூடாது' என, 'டாஸ்மாக்' தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்குகள் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில், இரண்டாம் நாளாக நேற்று நடந்தது. டாஸ்மாக் நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி வாதாடியதாவது: திட்டமிடப்பட்ட குற்றங்கள் எதுவும் இல்லாத நிலையில், எதற்காக சோதனை என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை. சோதனை மற்றும் பறிமுதல் செய்வதற்கான காரணங்களை, பாதிக்கப்பட்ட நபரிடம் தெரிவிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது; அதையும் பின்பற்றவில்லை.அமலாக்கத் துறை என்பது காவல் துறை அல்ல; அவர்கள் எந்த வளாகத்திலும் சோதனை நடத்தி, வழக்கு தொடர முடியாது. டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களை, நள்ளிரவு வரை காவலில் வைத்திருந்ததன் வாயிலாக, அமலாக்கத் துறை, அவர்களின் தனியுரிமையை மீறியுள்ளது.மேலும், 60 மணி நேரம் வரை விசாரணை நடத்தியுள்ளது. அதிகாரிகள், ஊழியர்களின் மொபைல் போன், 'ஹார்டு டிஸ்க்' தரவுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. ஒரு சில அதிகாரிகளை துாங்க விடாமல் செய்தது, மனித உரிமை மீறல். இதுபோன்ற தனியுரிமை மீறலுக்கான எந்த காரணமும், அமலாக்கத் துறையால் வெளியிடப்படவில்லை. இந்த வழக்கில் தங்களிடம் என்ன ஆவணங்கள் உள்ளன என்பதை, அமலாக்கத் துறை தெரிவிக்க வேண்டும்.அமலாக்கத் துறை நீதியின் பாதுகாவலர் இல்லை; ஒரு விசாரணை அமைப்புதான். சட்டத்தை மதிக்காமல், தங்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட முடியாது. சோதனையின்போது ரகசியம் எனக் கூறி, எந்த விபரங்ளையும் தர மறுத்தவர்கள், சோதனை முடிந்த பின் அறிக்கை வெளியிட்டதன் நோக்கம் என்ன? இவ்வாறு அவர் வாதாடினார்.டாஸ்மாக் தரப்பு வாதம் முடியாததால், விசாரணை வரும் 15க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

RAMESH
ஏப் 10, 2025 20:30

பாட்டிலுக்கு பத்து ரூபா வசூல் செய்யும் உரிமையை கடவுள் கொடுத்தாரா.... பத்து ரூபா வசூல் செய்து பிழைக்கும் நபர்களை கோர்ட் தண்டிக்குமா.....


c.mohanraj raj
ஏப் 10, 2025 15:46

டாஸ்மாக் மட்டும் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டதோ


SUBRAMANIAN P
ஏப் 10, 2025 15:07

அரசும், முதல் அமைச்சரும், தன்னிச்சையா விருப்பம் போல செயல்பட முடியாது.. மக்களிடம் ஒவ்வொண்ணும் கேட்டுத்தான் செயல்படனும். இது சரியா?


KRISHNAN R
ஏப் 10, 2025 14:37

டாஸ்மாக் விருப்பம் போல செயல் படலாம்


Sridhar
ஏப் 10, 2025 13:57

என்ன ஒரு கேவலமான நிலை தமிழகத்துக்கு இதே போல் ஒவ்வொரு குற்றவாளிகளும் போலீஸ் எங்களை விசாரிக்கக் கூடாது, ஜெயிலில் போடக்கூடாது, நீதிமன்றத்துக்கு அலைக்கழிக்கக் கூடாது னு சொல்லிகிட்டே போகலாமே? கோர்ட்டும் இத ஒரு வழக்குன்னு எடுத்து விசாரிக்குது பாருங்க ஆமா, அதுதான், மேற்கொண்டு விசாரணைகளுக்கு ஒன்னும் தடை இல்லைனு சொல்லிட்டாங்களே, ED ஏன் இன்னும் கோர்ட்டிலேயே நிக்குறாங்க? கிடைச்ச விவரங்களை வைத்து யார்யார் குற்றவாளிகளோ, அவங்கள பிடிச்சு உள்ள வைக்கவேண்டியது தானே? இந்த கேசு மூலமா திருட்டு கும்பலோட நோக்கமே, இந்த விசாரணையை நிறுத்தறதோட இல்லாம, அரெஸ்ட் கிரெஸ்ட் பண்ணாம தப்பிக்கிறதுதானே? அதை உடனே முறியடிச்சி, வைக்கவேண்டியவங்கள உள்ள வச்சா, ஆடுற ஆட்டம் தன்னால அடங்குமில்ல?


Iyer
ஏப் 10, 2025 13:17

RAID வரும் முன் எங்களுக்கு முன் அறிவிப்பு தரவேண்டும். ஊழல் பணத்தையும், ஆவணங்களையும் மறைக்க அவகாசம் தரவேண்டாமா? எங்களை நாங்களே தற்காத்துக்கொள்வைத்து எங்களது அடிப்படை உரிமை


சத்யநாராயணன்
ஏப் 10, 2025 13:14

இவர்களின் பதவி காலம் முடியும் வரை தள்ளிக் கொண்டே போய்விடுவார்கள் எலக்சனும் வரும் பதுக்கி வைத்த பணத்தை எல்லாம் செலவு செய்து ஜெயித்தும் விடுவார்கள் நீதிமன்றங்களின் துணையுடன் மீண்டும் நல்லாட்சி மலர்ந்து விடும் இந்த கேசும் தள்ளுபடி செய்யப்படும் இதுதான் இதுவரை யாம் பெற்ற அனுபவ பாடம்


ஆரூர் ரங்
ஏப் 10, 2025 11:54

ED வெறும் விசாரணை அமைப்பு மட்டுமே. அப்படியா?


பேசும் தமிழன்
ஏப் 10, 2025 11:21

டாஸ்மாக் மூலம் ஊழல் செய்து கொள்ளை அடிப்பது எங்கள் உரிமை என்று கூற வருகிறீர்களா ???


sribalajitraders
ஏப் 10, 2025 10:05

அப்படியா இவ்ளோ நாளா ED ன்னா அது பிஜேபி யோட துணை அமைப்புன்னுதான் நினைச்சிட்டு இருந்தோம்


புதிய வீடியோ