உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி

இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா,' என்று ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை; ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி - பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, 'சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது' என்று பெருமை பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியல் இடுகிறேன்.1 மே 2022 - ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.9 செப்டம்பர் 2023 - ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.29 நவம்பர் 2024 - திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.13 மார்ச் 2025 - திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.14 ஏப்ரல் 2025 - ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை 'தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்' என்பதற்கு இந்த தி.மு.க., அரசுக்கு வெட்கமாக இல்லையா?தமிழக மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம்.இந்த கொலை, கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

thehindu
மே 02, 2025 17:04

இதுதான்கேள்வி கேட்கும் லச்சணமா?


Barakat Ali
மே 02, 2025 14:26

திமுக என்ன சொல்லுதுன்னா உங்க ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை இருந்துச்சி ன்னு... பதிலுக்கு நீங்க கேட்கணும் அப்புறம் என்னதுக்கு விடியல் ன்னு சொல்லி ஏமாத்தி ஆட்சியைப் புடிச்சீங்க ன்னு .....


ராமகிருஷ்ணன்
மே 02, 2025 13:02

நீங்கள் ஆட்சியில் இருந்த போது தினம்தினம் புதுசா புதுசா குற்றச்சாட்டுகளை அள்ளி அள்ளி வீசி மக்களை மடையர்களாக்கி சிந்திக்க விடாமல் செய்த திமுகவுக்கு நீங்கள் சிறப்பான பதிலடிகள் தரணும். இதெல்லாம் போதாது.


Svs Yaadum oore
மே 02, 2025 12:39

இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் பணியை முறையாக செய்ய வேண்டுமாம் ....அதெல்லாம் விடியல் ஆட்சியில் நடக்காது ....எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத ஆட்சி 200 சீட்டுகள் வெற்றி என்று மாய கனவு ...எல்லாம் மதம் மாற்றிகள் வோட்டு போதும் என்ற நினைப்பு


V Venkatachalam
மே 02, 2025 13:22

இப்போ ஸ்லோகனை மாத்தியாச்சு. இரண்டு தினங்கள் முன்பு தான் மாண்புமிகு சுடாலின் சொன்னார். 200 என்ன 234 ஐயும் வெல்வோம். அதாவது கொள்ளையடித்த பணத்தை இன்னும் கொஞ்சம் அள்ளி விட தயாராயிட்டாங்கன்னு நாம புரிஞ்சுக்கணும்.


M.Malini
மே 02, 2025 12:39

உங்களுக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி கொள்லாததால் வந்த வினை. இப்போது குள்ளநரி கூட்டம் ஆட்டம் போடுது. அம்மா ஆட்சி போல இனி தமிழ் நாடு மலராது.


Kadaparai Mani
மே 02, 2025 14:50

EPS government was far better than stalin government


Svs Yaadum oore
மே 02, 2025 12:32

அரசுக்கு வெட்கமாக இல்லையா?? என்று கேள்வி .....அதெல்லாம் விடியலுக்கு சுத்தமாக எதுவும் கிடையாது ......இந்த ஆட்சி மதம் மாற்றிகள் பிடியில் ....மதம் மாற்றிகள் எழுதி கொடுத்ததை துண்டு சீட்டில் படிப்பது மட்டும்தான் வேலை ..


Anantharaman Srinivasan
மே 02, 2025 12:31

என் தவறால் உன் ஆட்சி. உன் தவறால் என் ஆட்சி. மொத்தத்தில் மக்கள் அவதி.


Murthy
மே 02, 2025 11:57

திருடர்கள் ஆட்சிசெய்தால் கொள்ளையர்களுக்கு கொண்டாட்டம்தான் . ....


Oviya Vijay
மே 02, 2025 11:56

நீங்க சொல்றதப் பார்த்தா... நீங்க ஒருவேளை ஆட்சியில இருந்தீங்கன்னா உங்களையே பல லட்சக்கணக்கா குளோனிங் செஞ்சு ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் காவலுக்கு வைப்பீங்க போலயே... பலே... பலே...


kamal 00
மே 02, 2025 11:39

மட்டய எடுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை