உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர் குழந்தைகள் கல்வி முன்பணம் உயர்வு

அரசு ஊழியர் குழந்தைகள் கல்வி முன்பணம் உயர்வு

சென்னை:அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி கற்க, அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி முன்பணம், 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அரசு பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க, அரசு சார்பில், 'கல்வி முன்பணம்' வழங்கப்படுகிறது. இதுவரை தொழிற்கல்வி பயில அதிகபட்சமாக 50,000 ரூபாய்; கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்க, 25,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.இனி, தொழிற்கல்விக்கு 1 லட்சம் ரூபாய்; கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்க, 50,000 ரூபாய் வழங்கப்படும் என, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதை செயல்படுத்த, தமிழக நிதித்துறை சார்பில், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டு முதல் இது செயல்பாட்டிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ