உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும்; எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

தமிழகத்தின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும்; எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: தமிழகத்தில் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் என தி.மு.க., எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 18) தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:* கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ., அரசின் வஞ்சகத்தை பார்லியில் எடுத்துரைத்து, தமிழகத்துக்கான கல்வி, நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.* தமிழகத்தின் நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமைக்காக பார்லி.,யில் தி.மு.க., எம்.பி.,க்கள் குரல் எழுப்ப வலியுறுத்தி தீர்மானம்.* கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பது உள்ளிட்ட பிரச்னைகளை பார்லியில் எடுத்துரைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஒருமித்த குரலாக.....!

இந்த எம்.பி.,க்கள் கூட்டம் குறித்து சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய பா.ஜ., அரசின் 11 ஆண்டுகள் என்பது, மக்களின் உரிமைகளை நசுக்குவது, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, எங்கும், எதிலும் ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பது, மதவாதத்தை வளர்ப்பது, முக்கியமாக, மக்களாட்சியின் குரலாக ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள் மழைக்கால கூட்டத்தொடரில் இந்திய மக்களின் உள்ளுணர்வுகளையும், தமிழகத்தின் ஒருமித்த குரலையும் எடுத்து வைத்து, நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமை, கூட்டாட்சி உரிமை ஆகியவற்றைப் பாதுகாத்திட அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

xyzabc
ஜூலை 19, 2025 15:29

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் தொந்தரவு, லஞ்சம், மாடல் ஆட்சியாரின் சொத்து குவியல் என இப்படி எத்தனையோ பிரச்னைகள். மக்கள் ஏமாற கூடாது.


பேசும் தமிழன்
ஜூலை 19, 2025 08:01

அவர்கள் எங்கே குரல் கொடுக்கிறார்கள்.... பாராளுமன்ற கேண்டீனில் போய் அமர்ந்து கொண்டு இட்லி வடை சாம்பார் சாப்பிட்டு விட்டு வருகிறார்கள்.... கேட்டால் வெளிநடப்பு.... உள்நடப்பு என்று கதை விடுகிறார்கள்.


Padmasridharan
ஜூலை 19, 2025 06:18

ஒழுங்கா நடக்கவேண்டிய காவலர்கள் ஒழுங்கில்லாம அந்த காக்கி உடைகளையும், பூட்ஷையும் தவறாக பயன்படுத்தி மக்களிடம் அதிகார பிச்சையெடுப்பதை இந்நாட்டிலே முதலில் மாற்ற வேண்டும் சாமி. பழைய குற்றவாளிகளை என்கவுன்டரில் தள்ளினாலும் புது குற்றங்களுக்கு வித்திடுகின்றனர்.


கௌதம்
ஜூலை 18, 2025 23:29

கண்டிப்பாக ஒலிக்கும்... புதுசா பல ஐட்டங்கள் பார்லிமென்ட் கேண்டீன்ல அறிமுகம் பன்னிருக்காங்க... அங்க ஏப்பம் விடும் சத்தம் நல்லா ஒலிக்கும்


S Srinivasan
ஜூலை 18, 2025 22:02

40MPs ஆல ஒன்னும் செய்ய முடியாது


V RAMASWAMY
ஜூலை 18, 2025 19:52

பாவ பரிகாரங்கள் செய்ய காத்திருக்கும் வாக்காளர்களின் ஓலங்கள் ஆரம்பித்து விட்டனவே, கேட்கவில்லை? ,


Parthasarathy Badrinarayanan
ஜூலை 18, 2025 19:43

வேஸ்ட்


S.Srinivasan
ஜூலை 18, 2025 19:37

தமிழகத்தின் 39 மக்களவை உறுப்பினர்களும் கையாலாகாதவர்கள். இவர்களுக்கு லோக்சபா கேண்டினில் உணவளிப்பது பாவம். இந்த திருடர்கள் அனைவரும் திகார் சிறையில் களி உண்டு இருப்பதுதான் இந்த நாட்டிற்கு சாலச்சிறந்தது


அருண், சென்னை
ஜூலை 18, 2025 19:29

காசு பத்தல... காசு பத்தல-ன்னு ஒலிக்கணும்... எந்த மாநிலமும் எங்களோடு போட்டிபோடக்கூடாது... எங்கள் மாநிலத்தில் உழைக்க ஒரு கூட்டமும், திமுக அடிமைகளும் ரொம்பவே ஜாஸ்தி... தெலுங்கானவோ, கர்நாடகவோ, மேற்கு வங்கமோ போட்டி போடக்கூடாது...நாங்கதான் அராஜகத்தில் முதன்மை..


sankaranarayanan
ஜூலை 18, 2025 18:58

தமிழகத்தின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை உண்மைதான் மக்களின் குரல் அவர் சென்ற இடங்களிளெல்லாமே ஒலிக்கின்றது எல்லா வரிகளையும் உயர்த்திவிட்டு பேருந்து கட்டணம் உயர்வு கரண்டு கட்டணம் உயர்வு பத்திரம் பதிவு கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு இப்படி எல்லா பொருள்களின் விலைகளை உயர்த்திவிட்டு யாரோ எப்போதோ செய்தாற்போல ஒன்றுமே தெரியாதவர் போல இப்போது மக்களை சந்திக்க வெட்கமில்லை இனி யாருமே பார்க்கமாட்டார்கள் தேர்தலின்போது பார்த்துக்கொள்வார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை