உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளில் போலி சான்றிதழ் கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிகளில் போலி சான்றிதழ் கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமின்றி, அரசு பள்ளிகளிலும் போலி சான்றிதழ்கள் அளித்து, பலர் ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியில் சேர்ந்துள்ளனர் என்ற, புகார் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட வாரியாக, அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் கல்வி, பட்டம், பட்டய படிப்பு சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய வேண்டும். அதுகுறித்த அறிக்கையை, வரும் டிசம்பர், 31க்குள் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்கக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை