உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!

நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!

சென்னை: தமிழகத்தில் வெவ்வேறு ஊர்களில் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி, வி.ஏ.ஓ.,க்கள் இருவர் என மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலர் கைது தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் திருவேங்கடம் தாலுகா செவல்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்துள்ளார். அவர் அந்த பள்ளியில் பணிபுரிந்த காலங்களுக்கு பணி அனுபவ சான்று கேட்டு பள்ளியின் தாளாளரான நாகராஜ் என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். பணி அனுபவ சான்றிதழை தாளாளர் நாகராஜன் தயார் செய்துவிட்டு, தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்ளார். இதையடுத்து தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தாளாளர், லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து, பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ. 60,000 லஞ்சம் வாங்கிய மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரை, 52, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.கிராம நிர்வாக அலுவலர் கைதுபெரம்பலுார் மாவட்டம் குன்னம் அருகே, பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெரியம்மாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி, 35, விவசாயி. அவரது நிலத்துக்கு கூட்டுப்பட்டா உள்ளது. அவரது நிலத்துக்கு தனி பட்டா வழங்க வி.ஏ.ஓ.,விடம் மனு அளித்தார். அதற்கு 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று வி.ஏ.ஓ., அன்பழகன் கேட்டார்.அப்படி லஞ்சம் வாங்கிய அன்பழகனை, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஹேம சித்ரா தலைமையிலான போலீசார், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.தவணை முறையில் லஞ்சம்!ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழக்கொடுமலூர் வி.ஏ.ஓ., சரவணன், பட்டா பெயர் மாறுதல் செய்வதற்கு 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். நேற்று GPay மூலம் ஆயிரம் ரூபாய் பெற்ற நிலையில் இன்று நேரடியாக 2,000 ரூபாய் பெற்றார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Mayakannan Kannan
மே 18, 2025 08:23

இதைவிட வேறு தொழில் செய்யலாம்


Gajageswari
மே 15, 2025 05:36

தினமும் 50 பேர் பிடிக்க டார்கெட் வைக்க வேண்டும்


பல்லவி
மே 15, 2025 03:57

படங்கள் மாவட்டம் வாரியாக வெளியாக வேண்டும் பேருந்து நிலையங்களில் உள்ள திரைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்


selvam selvamvathi
மே 14, 2025 21:33

இவரு வெறும் அம்பு தான் DEO ஸோ ஆபீஸ் ல பெரிய பெரிய லஞ்ச பெருச்சாளி இருக்கு


V GOPALAN
மே 14, 2025 19:28

How about 50 percent share to MLA Minister and their boss


Ranganathan Parthasarathi
மே 14, 2025 17:29

லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.


Kuppan
மே 14, 2025 12:28

தினமலருக்கு எனது வேண்டுகோள்...லஞ்சம் வாங்கியவர்களின் படத்தை நம் நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிதாக பிரசுரித்து அசிங்கப் படுத்த வேண்டும். அப்போது தான் லஞ்சம் வாங்க பயப்படுவார்கள்.


NIyayanidhi
மே 14, 2025 09:00

தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி. தலைவன் சிறை செல்வது எப்போது?


Anantharaman Srinivasan
மே 13, 2025 22:27

இதுபோல் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொள்ளும் பேர்வழிகள் தனக்கு மேலுள்ள அதிகாரிகனையும் மந்திரிகளையும் காட்டிக்கொடுக்கணும்.


சிந்தனை
மே 13, 2025 22:08

லஞ்சம் வாங்கியவரிடம் உள்ள சொத்துக்களை , அவரைப் பற்றி தகவல் கொடுத்து புகார் சொன்னவருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்


சமீபத்திய செய்தி