உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவேகானந்தர் பாறையில் காவிக்கொடி அகற்றும் முயற்சி தற்காலிக நிறுத்தம்

விவேகானந்தர் பாறையில் காவிக்கொடி அகற்றும் முயற்சி தற்காலிக நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில் : அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கையுடன் சேர்த்து கன்னியாகுமரி கடல் நடுவில் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் காவி கொடியை அகற்ற நடந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ctejm3by&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவின்படி தமிழகம் முழுதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள் உள்ளிட்ட கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது. கட்சிகள் தாங்களாகவே முன்வந்து கொடிக்கம்பங்களை அகற்றி வருகின்றன.கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் தினமும் காலை 6:00 மணிக்கு சைரன் ஒலியுடன் ஏற்றப்படும் காவிக்கொடி மாலை 6:00 மணிக்கு சைரன் ஒலியுடன் இறக்கப்படும். அரசியல் கொடி கம்பங்கள் முழுமையாக அகற்றப்படும் நிலையில் விவேகானந்தர் பாறையில் உள்ள கொடிக்கம்பத்தையும் அகற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் விவேகானந்தா கேந்திராவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.விவேகானந்தர் பாறையில் நினைவு மண்டபம் நிறுவியது முதல் 55 ஆண்டுகளாக இந்த கொடி பறந்து வரும் நிலையில் இதை அகற்ற கூடாது என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது.விவேகானந்தா கேந்திரா சார்பில் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் மூலம் மாவட்ட கலெக்டரிடம் இந்த கொடி கம்பத்தை அகற்றக் கூடாது என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டி பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த நோட்டீஸ் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கடல் நடுவில் அமைந்துள்ளதாலும், இதனால் போக்குவரத்து உள்ளிட்ட எந்த பிரச்சனை ஏற்படாது என்பதாலும் இந்த கொடி கம்பத்தை அகற்றக்கூடாது என்று பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

தத்வமசி
ஏப் 01, 2025 17:00

அடுத்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜா கோவில், வேளாங்கண்ணி மாதா ஆலயம், நாகூர் தர்கா இவைகளில் கொடி ஏற்றி திருவிழா நடத்தலாமா ? இல்லை அதற்கும் ஏதாவது ஒரு திட்டம் வைத்திருகிரீர்களா ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 01, 2025 15:13

விவேகானந்தர் அரசியல் கட்சி நடத்தினாரா என்னடா இது இந்த மதுரைக்கு வந்த சோதனை...


chinnamanibalan
ஏப் 01, 2025 12:22

போக்குவரத்துக்கு இடையூறாக பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளை அகற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதே தவிர, சமயம் சார்ந்த நிறுவனங்கள், கட்சி அலுவலகங்களில் பறக்கும் கொடிகளை அகற்ற கூறவில்லை. பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளை அகற்றுவது போல, வீதிகள் தோறும் நிறுவப்பட்டுள்ள தலைவர்கள் சிலைகளும் விரைவில் அகற்றப்பட வேண்டும்.


sridhar
ஏப் 01, 2025 11:11

அது அரசியல் கொடி அல்ல, அதனால் மக்களுக்கு எந்த இடையூறும் இல்லை .


M Ramachandran
ஏப் 01, 2025 10:58

விவேகனாந்தர் துறவி. துறவிகள் காவி ஆடைகள் தான் அணிவார்கள். இது கூட தெரியாமல் கருப்பர் கூட்டம் கூத்தடிக்குது. இந்த 2026 தேர்தலுடன் இந்த கும்பல் அட்ரஸ் தெரியாமல் முடங்கும். எல்லாவற்றிக்கும் அடுத்த ஆண்டு முடிவு கட்ட படும். உங்களுடன் ஒரு கூத்தாடி பையித்திய காரனை உங்களின் முக மூடி வேண்டுமானால் சேர்த்து கொள்ளுங்கள் .


MUTHU
ஏப் 02, 2025 10:17

பண்டைய இந்தியாவின் தனித்துவ அடையாளமே காவித்துணி தான். காவி அணிந்த துறவியின் முன் மாமன்னனும் மண்டியிட்டுள்ளான். பொருள் சார்ந்த வேண்டுதல்களுடன் போலிச்சாமியார்களை அனுமதித்ததின் விளைவே இன்றைய இந்தியாவின் இழிநிலை.


Nallavan
ஏப் 01, 2025 10:48

அடுத்தது கமலா ஆலயம்


RAAJ68
ஏப் 01, 2025 09:59

அது கட்சி கொடி இல்லை


S. Balakrishnan
ஏப் 01, 2025 09:58

ஆன்மீகத்தின் ஆசான் விவேகானந்தர். அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மாபெரும் சக்தியாக ஆன்மீகத்தையும் நாட்டுப் பற்றையும் வளர்த்தவர். மாபெரும் துறவி. காவி தான் அவருடைய அடையாளம். இதையெல்லாம் மறந்து தீர்மானம் நிறைவேற்றி அசிங்கப்படும் அரசியல்வாதிகள் திருந்த வேண்டும்.


Shekar
ஏப் 01, 2025 09:57

ரோட்டுல எவனாவது ஆரஞ்சு கலர்ல ஆரஞ்சு பழம் விற்றால் குண்டாஸ் பாயும் ஜாக்கிரதை, மிராண்டா, பண்டா விற்பவர்களும் ஜாக்கிரதை.


MUTHU
ஏப் 02, 2025 10:19

அதனால்..


rasaa
ஏப் 01, 2025 09:54

அப்படியே விவேகானந்தர் உடுத்தியிருக்கும் காவி உடையை நீக்கிவிடுங்கள். உங்கள் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை