உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சிப் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது; மனிதநேய மக்கள் கட்சி உள்பட 6 கட்சிகளுக்கு நோட்டீஸ்

கட்சிப் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது; மனிதநேய மக்கள் கட்சி உள்பட 6 கட்சிகளுக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்சிப் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை 26ம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி உள்பட 6 கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு, வருமான வரி விலக்கு, அங்கீகாரம், பொது தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை, நட்சத்திர பிரசார நியமனம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jltbe8ob&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பதிவு செய்யப்பட்ட கட்சிகள், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் வேட்பாளர்களை போட்டியிடச் செய்ய வேண்டும்.ஆனால், கோகுல மக்கள் கட்சி, இந்தியன் லவ்வர்ஸ் பார்டி, இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை கடந்த 6 ஆண்டுகளாக எந்த ஒரு தேர்தலிலும் வேட்பாளர்களை போட்டியிட நியமிக்கவில்லை. கட்சி பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தை தலைமை தேர்தல் அலுவலகத்தில் வரும் ஆக.,26ம் தேதி நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

metturaan
ஆக 26, 2025 11:25

இந்திய திரு நாட்டில் வாழ்ந்து கொண்டு வேறு எவருக்கோ விசுவாசிகளாக விளங்கும் கழிசடைகளை களையெடுத்து வட கொரியா போல் வலிமையான கட்டமைப்பை உருவாக்கினால் தான் வரும் தலைமுறைக்கு நாடு என்பதே இருக்கும்... இந்திய இறையாண்மைக்கு எதிராக எவர் நடந்தாலும் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்... ஊரூராய் திரியாமல் நாட்டின் முன்னேற்றம் மட்டும் பிரதானமாக ஆகும்... நாடு நலமாகும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 26, 2025 06:34

கடந்த மார்ச் மாதம் வெளியான செய்தி.... [வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் தி.மு.க., கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது.] தண்டனை நிறைவேற்றப்பட்டதா அல்லது மேல்முறையீட்டில் ..... போல இழுத்துக்கொண்டுள்ளதா


KR india
ஆக 25, 2025 22:08

தேர்தலில் உங்கள் கட்சி ஏன் போட்டியிட வில்லை ? ஏன் உங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்த வில்லை ? என்பதை காரணம் காட்டி, அதனடிப்படையில், உங்கள் கட்சிப்பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது ? இது போன்ற சொத்தை காரணங்கள், "துக்கடா" விஷயங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, புறந்தள்ளி விட்டு, இந்திய அளவில், தேர்தல் ஆணைய விதிகளில், கீழ்கண்ட ஷரத்து சேர்க்கப்பட்டு புதிய விதிமுறைகள் அடங்கிய சட்டம் இயற்றப் பட வேண்டும். உங்கள் கட்சிப் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்ற விதியை இன்னும் விரிவு படுத்த வேண்டும். ஏனெனில், பெரும் குற்றமிழைக்கும், சில குட்டி கட்சிகளின் தலைவர்கள், தாங்கள் செய்யும் தவறை உணர்வதும் கிடையாது. வருந்துவதும் கிடையாது. உதாரணத்திற்கு சில : 1 ஸ்ரீலங்கா-வில் நடந்த போரில், ஈழ தமிழர்கள் பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி, இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக "நாடு சிதறுண்டு விடும்" என்று நச்சு கருத்தை உதிர்த்த "கோயபல்ஸ்" அரசியல்வியாதி, ஒருவர் 2 இந்து மதத்திற்கு எதிராகவும், சனாதன தர்மத்திற்கு எதிராகவும், தொடர்ந்து அவதூறு கருத்துக்களை கூறி வரும் மற்றொரு அரசியல் வியாதி ஒருவர் 3 மத்திய, மாநில அரசுகளால், மாண்புமிகு நீதிமன்றங்களால், "தீவிரவாதிகள்" / "தீவிரவாதிகள் இயக்கம்" என்று வரையறுக்கப்பட்ட இயக்கத்தின் தலைவரை "Role Model"ஆக கொண்டாடும், மற்றொரு அரசியல் வியாதி. இவ்வாறு, நமது தேசத்திற்கு எதிராகவும், தெய்வத்திற்கு எதிராகவும், பொது மேடைகளில், மேற்கண்ட அரசியல்வியாதிகள் பேசுவதை ஆயிரக்கணக்கான, இளம் தலைமுறைகள் கேட்கின்றனர். நச்சு விதை, அவர்கள் உள்ளங்களில் விதைக்கப்படுகிறது. "தேசியம் மற்றும் தெய்வீகம்" எனது இரு கண்கள் என்று முழங்கிய, தென்னகத்தின் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கம் ஐயா அவர்களின், கோட்பாடுக்கு எதிராக களமாடும், அரசியல் கட்சிகளை முற்றிலும் தடை செய்ய, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டிற்கு எதிராகவும், இந்திய ஒருமைப்பாடு, தெய்வத்திற்கு சனாதன தர்மம் - இந்து மத சடங்கு முறை / Devotional Customs and Traditions க்கு, எதிராக பேசுபவர்களையும், தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஆக 25, 2025 21:42

திமுக தனது சின்னத்திலேயே போட்டியிடச் செய்து பாய் கட்சியையே அழித்துவிட்டது


V Venkatachalam
ஆக 25, 2025 22:03

திருட்டு தீய முகவினால் தானாக விளைந்த ஒரு நன்மை.


அப்பாவி
ஆக 25, 2025 21:32

எதுக்கு கஷ்டப் பட்டுக்கிட்டு.. ஒரே நேஷன். ஒரே பார்ட்டின்னு கொண்டாருங்க. தேர்தல் செலவு குறைஞ்சு ஜனநாயகம் செழிக்கும்.


V Venkatachalam
ஆக 25, 2025 22:01

ஜனநாயகம் ஜனநாயகமா இருக்கணூம்ன்னா திருட்டு தீய முக வை வெட்டி சாய்க்கணும். வேரோடு சேர்த்து கொளுத்தணும். அதே வேலையை முட்டு குடுக்குறவன்களுக்கும் செய்யணும்.


Vasan
ஆக 25, 2025 20:50

Include DMK, ADMK also in the list


GMM
ஆக 25, 2025 20:20

கட்சி பதிவாகும் முதல் தேர்தலில் தனித்து போட்டி குறைந்த வாக்கு கட்டாயம். இல்லாவிட்டால் கட்சி பதிவை நீக்க வேண்டும்.


rama adhavan
ஆக 25, 2025 22:57

கூட்டணி இன்றி தனியாகப் போட்டி இட்டால் மாநிலத்திற்கு 4 அல்லது 5 கட்சிகளே பட்டியலில் நிலைக்கும். மீதி கட்சிகளை கலைக்க நேரிடும்.


Thulasi K
ஆக 25, 2025 20:12

இந்தியன் லவ்வர்ஸ் பார்டி இந்த கட்சிக்கு தான் என் ஒட்டு


Mahendran Puru
ஆக 26, 2025 15:00

இந்த கட்சியின் பெயரை வாங்குவதற்கு வழி உண்டா?


சசிக்குமார் திருப்பூர்
ஆக 25, 2025 20:10

இவர்கள் எந்த வகையான தேர்தலில் போட்டியிட வேண்டும் .


Artist
ஆக 25, 2025 19:41

வைகோ கட்சி லிஸ்டில் காணோமே


சமீபத்திய செய்தி