உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் இணைப்பு வழங்காமலே மின் கட்டணம்

மின் இணைப்பு வழங்காமலே மின் கட்டணம்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் மின் இணைப்பு வழங்காத கட்டடத்திற்கு மின் கட்டணத்தை இரண்டு முறை வசூலித்துள்ளதால் பயனீட்டாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.சாயல்குடி அருகே சண்முக குமாரபுரத்தை சேர்ந்தவர் மதன் ராஜா 35. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சண்முக குமாரபுரத்தில் புதிய ஓர்க் ஷாப் கடை கட்டியுள்ளார். கடைக்கு மின் இணைப்பு வேண்டி மின்வாரிய அலுவலகத்தில் ஓராண்டிற்கு முன்பு விண்ணப்பித்திருந்தார்.மார்ச் 28ல் அவரது அலைபேசிக்கு மின்மீட்டர் பொருத்தியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து சாயல்குடி மின்வாரிய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு மதன் ராஜா கேட்ட போது பொருத்தியதாக மெசேஜ் மட்டும் வரும். நாங்கள் ஒரு வாரத்தில் மின் மீட்டர் பொருத்தி விடுகிறோம் எனக் கூறினர். அதன்படி மீட்டர் பொருத்தப்பட்டது.அதே நேரம் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஏப்., 17ல் மின் கட்டணம் ரூ.328 செலுத்துமாறு மெசேஜ் வந்தது. இந்த தொகையை ஆன்லைனில் கட்டியுள்ளார். அதன் பின் ஜூன் மாத மின் கட்டணம் ரூ.940 வந்துள்ளது.இதுகுறித்து மெக்கானிக் மதன் ராஜா கூறியதாவது:இணைப்பிற்கான மின்கம்பம் கூட அருகில் இல்லை. மின்கம்பம் நட வேண்டி ரூ.35 ஆயிரம் கட்டணம் செலுத்தி உள்ளேன். அதுபோக மின்வாரிய ஊழியர்கள் பணி செய்வதாக கூறி தொகையும் பெற்றுச் சென்றுள்ளனர்.மின் இணைப்பே வழங்கப்படாத நிலையில் மின்கட்டணம் மட்டும் எப்படி வசூலிக்கிறார்கள். மின் மீட்டர் ரீடிங் இல்லாமல் எப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத்தினர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என தெரியவில்லை என வேதனை தெரிவித்தார்.மின்வாரிய உதவி பொறியாளர் கனகராஜ் கூறுகையில் மீட்டர் பொருத்தி விட்டாலே குறைந்தபட்ச கட்டணம் வசூலிப்போம் என்றார். மின் கம்பம் நடுவதற்கு இடம் தேர்வு செய்து கொடுத்தால் இணைப்பு வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Jawahar Chettiar
ஜூன் 19, 2025 09:04

மின் கட்டணம் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்


அப்பாவி
ஜூன் 14, 2025 15:41

இனிமே மின் இணைப்புக்கு விண்ணப்பம் குடுத்தாலே குறுஞ்செய்தி அனுப்பி கட்டணம் உருவ ஆரம்பிச்சுடுவாங்க.


D Natarajan
ஜூன் 14, 2025 12:49

விடியல் அரசில் இதெல்லாம் சர்வ சாதாரணம் . மேலும் அப்ப்ளிகேஷன் போட்டஉடனே பில் அனுப்பினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை .


Varadarajan Nagarajan
ஜூன் 14, 2025 12:48

மின்கம்பம் மற்றும் மின்கடத்திகள் இல்லாமல் நுகர்வோருக்கு மின் இணைப்பு கொடுக்கமுடியாது. மின்னிணைப்பு கொடுக்கும்போதுமட்டுமே மின் மீட்டர் பொருத்தப்படும். அதன்பிறகே மின்சார கட்டணம் வசூலிக்கமுடியும். இவர் முதல்முறையே மின் கட்டணம் செலுத்தாமல் மேலதிகாரியின் அல்லது நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து மின் இணைப்பு பெற்றிருக்கலாம். ஏன் அதை செய்யவில்லையென தெரியவில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 14, 2025 11:20

இந்தியாவில் சுவாசிக்கவும் கூட வரிவிதிக்கப்படும் .... வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது ....


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 14, 2025 10:47

மீட்டர் பொருத்தி விட்டாலே குறைந்தபட்ச கட்டணம் வசூலிப்போம், இதன்படி மனு கொடுத்த உடனேயே ஒரு டப்பாவை மாட்டிவிட்டு வசூல் வேட்டையை துவக்கி விடுவார்களாம். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சென்ற பின் நில அளவை செய்து கம்பங்கள் தயாரித்து நட்டு மின் கம்பிகள் தயாரித்து இழுத்துப் பொருத்தி இலஞ்சத்தில் அவர்களுக்கு வீடு கட்டிக் கொண்ட பின்னர் மனு கொடுத்தவருக்கு மின்சாரம் கொடுப்பதைப்பற்றி ஆலோசனை செய்வார்களாம். அதுவரை இளிச்சவாயர்கள் வாரியத்துக்கு கப்பம் கட்டிக்கொண்டிருக்கவேண்டுமாம். சூப்பர் மாடல். பாதிக்கப்பட்ட அன்பர் உடனடியாக வாரிய தலைவருக்கு தனிப்பார்வைக்கு என்று குறிப்பிட்டு ஒரு கடிதம் அனுப்பலாம். நல்லது நடக்க வாய்ப்புண்டு


Nagarajan D
ஜூன் 14, 2025 08:50

அதெப்படி டா கம்பமே நடாம மீட்டர் பொருத்துனீங்க... அரசு ஊழியர்கள் எல்லோரும் திருடனுங்க.. விட்டால் நிலாவில் மின் இணைப்பு தருகிறோம் ஒரு அமௌன்ட் எங்களுக்கு ஒதுக்குனீங்கனா என்று சொல்லுவானுங்க இந்த கேடுகெட்ட அரசு ஊழியனுங்க...


Kasimani Baskaran
ஜூன் 14, 2025 08:12

மகா வன்முறையாக இருக்கிறதே... மின் இணைப்பு கொடுக்கவில்லை. மீட்டர் இணைக்கவில்லை. பிறகு எப்படி குறைந்தபட்ச தொகை வசூலிக்க முடியும். மீட்டர் இல்லாமல் இணைப்பு கொடுத்ததை நுகர்வோர் மீட்டரை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்திருக்க வேண்டும். இதை டெக்கினிக்கலாக அணுகவில்லை என்றால் நீதிமன்றத்தால் கூட தீர்க்க முடியாது.


D Natarajan
ஜூன் 14, 2025 07:46

விடியல், திராவிடியன் மாடெல்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 14, 2025 07:38

வீடே இல்லாத வெறும் நிலத்திற்க்கு மின்கட்டணம் வசூலித்த கதை தெரியாதா ?


முக்கிய வீடியோ