உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுநீரில் இருந்து மின்சாரம், உரம் உற்பத்தி; பாலக்காடு ஐ.ஐ.டி., ஆராய்ச்சி குழு சாதனை

சிறுநீரில் இருந்து மின்சாரம், உரம் உற்பத்தி; பாலக்காடு ஐ.ஐ.டி., ஆராய்ச்சி குழு சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு : சிறுநீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர் பாலக்காடு ஐ.ஐ.டி., ஆராய்ச்சி குழுவினர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு அருகே உள்ளது ஐ.ஐ.டி., வளாகம். இங்கு, சிவில் இன்ஜினியரிங் துறை உதவிப் பேராசிரியர் பிரவீணாவின் தலைமையிலான திட்ட விஞ்ஞானி ஸ்ரீஜித், உதவி விஞ்ஞானி ரினு அன்னா, ஆராய்ச்சி மாணவர் சங்கீதா ஆகியோர் அடங்கிய ஆராய்ச்சி குழுவினர், சிறுநீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை சாத்தியமாக்கியுள்ளனர்.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் பிரவீணா கூறியதாவது:

ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான, உலகளாவிய முயற்சிகளுக்கு மத்தியில், நிலையான தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியில் உருவாக்கியுள்ளோம். 'மக்னீசியம் ஏர் ப்யூயல் செல்' பயன்படுத்தி, அணு மூலங்கள் பிரிக்கப்பட்ட சிறுநீரின் வினையூக்கி ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.இந்தத் தொழில்நுட்பம் வாயிலாக, சிறுநீரில் இருந்து மின்சாரம் மற்றும் கரிம உரங்களை ஒரே நேரத்தில் உற்பத்தி செய்யலாம். ஒவ்வொரு, 48 மணி நேரத்திற்கும், 5 லிட்டர் சிறுநீரில் இருந்து, 500 மில்லிவாட் (டெசிபல் - மில்லிவாட்) மின்சாரம், 7-12 மின்னழுத்தம் மற்றும் 10 கிராம் உரம் ஆகியவற்றை உருவாக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த மின்சாரத்தை பயன்படுத்தி, எல்.இ.டி., விளக்குகளை எரியவைக்கவும், மொபைல்போன்களை சார்ஜ் செய்யவும் முடியும். சிறுநீரின் அயனி வலிமை மற்றும் மின் வேதியியல் எதிர்வினை வாயிலாக, மின்சாரமும், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்து கூறுகளால் கரிம உரமும் உற்பத்தி செய்ய முடியும்.நீர்த்த (பழைய) சிறுநீரில் இருந்து மட்டுமே இந்த உற்பத்தி சாத்தியமாகும். மனித சிறுநீரில் இருந்தும், பசுவின் சிறுநீரில் இருந்தும் இதை உற்பத்தி செய்யலாம் என கண்டறிந்து உள்ளோம்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள, அறிவியல் சமபங்கு அதிகாரமளிக்கும் (science for equity empowerment) பிரிவு இந்தத் திட்ட வளர்ச்சிக்கு தேவையான நிதியுதவியை வழங்கியது.தற்போது, டெக்னாலஜி ரெடினெஸ் லெவல் 4ல் (டி.ஆர்.எல்), சாத்தியமான தொழில்நுட்பமாக பரிந்துரைத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vbs manian
பிப் 17, 2024 20:12

ஒரு முன்னாள் பிரதமர் நெடு நாள் வாழ்ந்தார். சொன்ன காரணம் எல்லோருக்கும் தெரியும். அமைச்சர் கத்காரியும் இந்த விஷயத்தில் விளைச்சல் கூடல் என்று சொல்கிறார். இப்போது இந்த செய்தி. அருவருப்பு என்பதை ஒதுக்கி வைத்து விட்டு பயனுள்ளதாய் பரிசிக்கலாம்.


Suppan
பிப் 17, 2024 14:45

கரூரில் உள்ள வாழை ஆராய்ச்சி நிறுவனம் மனித சிறுநீரை பாசனத்துக்கு (சிறுநீர்ப்பாசனம்?) உபயோகப்படுத்தி வெற்றி கண்டுள்ளார்கள். இதனால் யூரியா உபயோகமும் குறைந்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தன்னுடைய தோட்டத்தில் இந்த முறையை செயல் படுத்தி உள்ளார். இதை அவர் ஒரு கூட்டத்தில் பேசியபொழுது எதிர்க்கட்சிகள் கிண்டல்தான் செய்தனரே தவிர ஆக்கபூர்வமாக சிந்திக்கவில்லை. அவர்கள் சிறுமதி படைத்தவர்கள்தானே


RAJ
பிப் 17, 2024 08:22

Great. Congratulations


சிவா
பிப் 17, 2024 08:11

ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் போல் பிசு பிசுத்துப் போகாமல் இருந்தால் சரி !


RAMAKRISHNAN NATESAN
பிப் 17, 2024 07:58

சாத்தியக்கூறுகள் இருப்பதாக பல ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வந்தது .......


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 17, 2024 09:58

பத்தாண்டுகளுக்கு முன்பே வந்த செய்திதான். இதனால் தயாரிக்கப்படும் மின்சக்தி 500 மில்லி வாட் சில நொடிகளுக்கு கூட நமக்கு உதவாது. நமக்கு தேவை மெகா வாட் அளவில்


Suppan
பிப் 17, 2024 14:52

ஒரு மனிதன் ஒரு நாளில் சுமார் இரண்டு லிட்டர் வரை சிறுநீர் கழிக்கிறான். ஒரு கோடி மனிதர்களின் சிறுநீரை சேமித்து உப்யோகப்படுத்த முடியுமென்றால் ஒரு நாளில் இருபது மெகாவாட் வரை மின்சாரம் எடுக்க முடியும்.


Suppan
பிப் 17, 2024 14:54

கொல்கத்தாவில் ஒரு மருந்து கம்பெனி கர்ப்பிணிப்பெண்களின் சிறுநீரிலிருந்து ப்ரோடீன் ஊசிமருந்து (HCG) தயாரிக்கிறார்கள். இது புரோட்டீன் குறைபாடு உள்ள கர்பிணிப்பெண்களுக்கு செலுத்தப்படுகிறது.


குறும்புக்காரன்
பிப் 17, 2024 07:53

அருமை... ....... அய்யோ இனி திமுக உடன் பிறப்புகள் இதையும் ஆட்டைய போடுவாங்களே


மேலும் செய்திகள்









புதிய வீடியோ