உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனித உடலில் உள்ள மின்சாரமே பட்டாசு ஆலை விபத்திற்கு காரணம்: புறப்பட்டார் புது விஞ்ஞானி கணேசன்

மனித உடலில் உள்ள மின்சாரமே பட்டாசு ஆலை விபத்திற்கு காரணம்: புறப்பட்டார் புது விஞ்ஞானி கணேசன்

சென்னை: ''மனித உடலில் இருக்கும் மின்சாரமே பட்டாசு ஆலை விபத்திற்கு காரணம்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:ம.தி.மு.க., - ரகுராமன்: உயிரை பணயம் வைத்து நேரடியாகவும், மறைமுகமாகவும், எட்டு லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில், 1,200 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில், சாத்துார், சிவகாசியில் அதிக ஆலைகள் உள்ளன.பட்டாசு ஆலைகளில் ஏதேனும் விபத்து ஏற்படும் போது, ஆலை உரிமையாளர்களை கைது செய்கின்றனர். இதனால், விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே, உரிமையாளர்களுக்கு பதிலாக, ஆலையின் மேலாளரை கைது செய்ய வேண்டும். பட்டாசு ஆலை ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், பல ஆலைகளை பல மாதங்களுக்கு மூடி விடுகின்றனர். இதனால், பாதிப்பு ஏற்படுகிறது. அமைச்சர் கணேசன்: பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளில், 10 பேர், 20 பேர் என உயிரிழப்பது வழக்கமாக இருக்கிறது. பட்டாசு ஆலைகளுக்கு நேரில் சென்று, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் குறைகளை கேட்ட ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டுமே.ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே போன்ற கோடைக் காலங்களில், பட்டாசு ஆலைகளில் அதிக விபத்துகள் நடக்கின்றன. 1,500க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், மூன்று லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் வாழ்வாதாரமான பட்டாசு தொழிலின் துயரங்களை நேரில் கண்ட முதல்வர் ஸ்டாலின்; தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.விபத்தில் இறந்தவர்களின் குழந்தைகளின் கல்விச்செலவையும், 18 வயது நிறைவடையும் வரை, அவர்களின் பராமரிப்பு செலவையும், தமிழக அரசே ஏற்கும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.காற்றில் தண்ணீரில் இருப்பது போல, மனித உடலிலும் மின்சாரம் உள்ளது. மனித உடலில் உள்ள மின்சாரம், பட்டாசு தயாரிக்க உள்ள ரசாயனங்களில் கலக்கும்போது, தீ பற்றி விபத்து ஏற்படுகிறது. அதனால், ஒவ்வொரு பட்டாசு ஆலையிலும் துத்தநாக கல் வைத்து இருப்பர். அதில், கையை வைக்கும்போது, மனித உடலில் உள்ள மின்சாரம், 'டைவர்ட்' ஆகிறது. விபத்துகளை தடுப்பதற்காகவே, பட்டாசு ஆலைகளில் ஆய்வுகள் அதிகமாக நடத்தப்படுகின்றன. ஆலை உரிமையாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அரசு பார்த்துக் கொள்ளும்.இவ்வாறு விவாதம் நடந்தது.கடந்த 2017 அ.தி.மு.க., ஆட்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லுார் ராஜு, வைகை அணையில் உள்ள நீர், சூரிய வெப்பத்தால் ஆவியாகி வீணாவதை தடுக்க, அணையில் தெர்மோகோல்களை மிதக்க விட்டார். அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியாகி, சாதாரண மக்களிடமும் பேசுபொருளானது. அதனால் இன்று வரை, செல்லுார் ராஜுவை, 'தெர்மோகோல் விஞ்ஞானி' என, கிண்டல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், 'மனித உடலில் இருக்கும் மின்சாரமே பட்டாசு ஆலை விபத்திற்கு காரணம்' என, அமைச்சர் கணேசன் கூறியிருப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Nagarajan S
ஏப் 24, 2025 20:51

விஞ்ஞானி அமைச்சர் மின்சார கணேசன் என்று இனி கூறலாமோ?


Chandrasekaran Balasubramaniam
ஏப் 24, 2025 13:48

இன்று முதல் கரண்ட் கணேசன் என்றழைக்கப்படுவார்.


SIVA
ஏப் 23, 2025 21:16

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் , அப்பா இனி சூரிய மின் சக்தி தேவை இல்லை , இது தெரியாமல் இத்தனை வருடம் கரண்ட் பில் கட்டி இருக்கேன் , அத எல்லாம் refund பண்ணுவாங்களா , காசா இல்ல செக்கா...


Karunakaran
ஏப் 23, 2025 20:15

மனித உடலில் உள்ள மின்சாரத்தை நீக்கி விட்டு செல்வதற்காக பட்டாசு ஆலைகளில் மருந்து மிக்ஸிங் அறை முன்புறம் காப்பர் ப்ளட் ப்பொருத்தி உள்ளனர்.ஈரப்பதம், மருந்து விகிதாசாரம், வெப்பநிலை போன்று விபத்து ஏற்பட பல காரணிகள் உள்ளன.


reman ravi namakkal
ஏப் 23, 2025 19:41

மனித உடலில் மின்சாரம் இருப்பது உண்மைதான் அது எனக்கே அனுபவத்தில் உள்ளது.


என்றும் இந்தியன்
ஏப் 23, 2025 17:05

திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு அமைச்சர் ஆக முதல் தகுதி உளறலில் Ph.D. பட்டம் வாங்கியிருக்கவேண்டும் ஆனால் படிப்பு 11வது வரை தான் இருக்கவேண்டும் என்று கீழேயே உள்ள அமைச்சர் முதல் முதலமைச்சர் வரை இது தான் முக்கிய அடிப்படை தகுதி திமுக சட்டம் சொல்கின்றது


Mecca Shivan
ஏப் 23, 2025 16:56

மனித உடலில் மின்சாரம் இருக்கும் என்பது உண்மைதான் .. அதனால்தான் நுண்ணிய மின்பொருட்கள் தயாரிக்கும் அல்லது பழுதுபார்க்கும் இடத்தில உடலில் இருக்கும் மின்சாரத்தால் அவைகள் பழுதாகாமல் இருக்க தரைவழி கடத்தி வைத்து அதன்மேல் நின்று வேலை பார்ப்பார்கள் .. ஆனால் வெடிகள் வெடிக்கும் அளவிற்கு அவை கடத்தப்படுமா என்பது தெரியவில்லை IIT நிபுணர்களை வைத்து ஆராய்ந்து வெடித்தொழிற்சாலையிலும் மின்கடத்தி பாய்கள் மீது தொழிலாளர்கள் அமர்ந்து வேலை செய்யுமாறு ஏற்பாடுசெய்யலாம் .. தெர்மோகோல் முறையில் நீராவி மூலம் நீரை குறைவதை தடுப்பதும் செயல்முறை சாத்தியமே . ஆனால் அதற்க்கு அவர்கள் உபயோகப்படுத்திருக்கவேண்டியது கணம்வைத்த தெர்மோகோல் அல்லது ரப்பர் பந்துகளை ..


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 23, 2025 13:45

கேக்காக, நாம நடந்து போகையிலே அணிலு நம்ம மேல வுளுந்தா என்ன ஆகும்னு இப்போ போன் போட்டு கேக்காக. கரண்ட் கட் ஆகுமா ஆகாதா? தனபாலு அண்ணாச்சிக்கு டவுட்டு வந்துட்டாம்.


Ramaswamy Jayaraman
ஏப் 23, 2025 13:33

மனித உடலில் இருந்து மின்சாரம் தயாரிக்க புதிய திட்டம் தயார் செய்யலாம். அதற்காக 10000கோடி நிதி ஒதுக்கலாம்.


MUTHU
ஏப் 23, 2025 13:15

பொதுவாக பெரிய மின் கோபுரங்கள் செல்லும் பகுதிக்கு கீழ் குடியிருந்தால் அதில் உண்டாகும் static மின்சாரம் மனித உடலுக்கு தீங்கு உண்டாக்கும். அதாவது மனிதனின் static மின்சாரம் சிதைக்கப்பட்டு விடும். அதன் விளைவாய் ரத்தப்புற்று போன்ற நோய்கள் உண்டாகும். இயங்கும் பொருட்கள் அனைத்திற்கும் ஒரு static மின்சாரம் உண்டாகும். அதனை கம்ப்யூட்டர் சிப்ஸ் மதர் போர்டு போன்ற உபகரணங்களுடன் வேலை செய்யும் பொழுது தற்காலிக நீக்கம் செய்து கொள்வார்கள்.


முக்கிய வீடியோ