உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்; மின் வணிக ஆய்வாளர் கைது

மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்; மின் வணிக ஆய்வாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாராபுரம் மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். சிவசுப்ரமணியம் என்பவர் தனது மனைவி பெயரில் இருந்த தற்காலிக மின் இணைப்பை மாற்றக் கோரி, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதனை செய்து கொடுக்க வடக்கு வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், 56, ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனைக் கொடுக்க விரும்பாத சிவசுப்ரமணியம் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில், சிவசுப்ரமணியம் ரூ.3 ஆயிரம் லஞ்சப் பணத்தை மின்வாரிய அதிகாரி ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அதிகாரி ஜெயக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரது அலுவலகத்தில் கணக்கில் வராத 13 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ