உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கட்டண உயர்வு: அமைச்சர் விளக்கம்

மின் கட்டண உயர்வு: அமைச்சர் விளக்கம்

சென்னை : தமிழகத்தில், வரும் ஜூலை முதல் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், 'வீடுகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும்' என, மின் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. கடந்த 2022ல் மின் வாரியம், 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் இருந்தது.

அதிருப்தி

அதனால், மின் வாரியம் கேட்டுக்கொண்டபடி, அந்தாண்டு செப்டம்பர் 10 முதல் மின் கட்டணத்தை ஆணையம் உயர்த்தியது. இதுதொடர்பான ஆணையில், அந்த நிதியாண்டு முதல், 2026 - 27 வரை, ஆண்டுதோறும் ஜூலையில் மின் கட்டணத்தை உயர்த்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன், கட்டணத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 6 சதவீதம் அல்லது அந்தாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க விகிதம், இந்த இரண்டில் எந்த சதவீதம் குறைவோ, அந்தளவுக்கு உயர்த்தப்பட வேண்டும். கடந்த 2023ல், 2.18 சதவீதமும், 2024ல், 4.83 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில், 2023ல் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் பணவீக்க விகிதம், 3.16 சதவீதமாக இருப்பதாக, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதையடுத்து, ஆணையம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வரும் ஜூலை முதல் மின் கட்டணம், 3.16 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரும் நிலையில், மின் கட்டண உயர்வால் மக்கள் அதிருப்தி அடைந்து, தேர்தலில் அது எதிரொலிக்கும் என கூறப்பட்டது. இதனால், 'வீடுகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை; இலவச மின்சார சலுகைகள் தொடரும்' என, மின் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சில தினங்களாக மின் கட்டண உயர்வு குறித்து, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்சமயம், மின் கட்டண உயர்வு குறித்து, எவ்வித ஆணையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை.எனினும் ஆணையம், மின் கட்டணம் தொடர்பான ஆணை வழங்கும் போது, வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக்கூடாது எனவும், தற்போதுள்ள இலவச மின்சார சலுகைகள் தொடர வேண்டும் எனவும், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். எனவே, வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. இலவச மின்சார சலுகைகள் தொடரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொழில்கள் முடங்கும்

இதுகுறித்து, தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாச்சலம் கூறியதாவது:வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று, அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், தொழிற்சாலை, வணிகம் உட்பட மற்ற பிரிவுகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புஉள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட மின் பயன்பாட்டு கட்டணம், மின்சார நிலை கட்டணம் உயர்வால், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தும் நுாற்பாலைகள் பெரிதும் பாதித்துள்ளன. எனவே, எந்த பிரிவுக்கும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்றும், அப்படி உயர்த்தினால் செலவை அரசு ஏற்கும் என்றும் அறிவிக்க வேண்டும். அப்படி செய்யாமல், மின் கட்டணத்தை உயர்த்தினால் தொழில்கள் முடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் மீதுள்ள கருணையால் அல்ல

தமிழக வரலாற்றில், மூன்று ஆண்டுகளில் நான்கு முறை, 45,000 கோடி ரூபாய்க்கு, மின் கட்டணத்தை உயர்த்திய மனிதநேயமற்ற அரசு தான் தி.மு.க., அரசு. வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது என அறிவித்திருப்பது, மக்களின் மீதுள்ள கருணையால் அல்ல. சட்டசபை தேர்தல் வருவதால், மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகம்.மின் கட்டணம் செலுத்த முடியாமல், ஏராளமான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இரக்கமே இல்லாமல், மீண்டும் ஒருமுறை மின்சார கட்டணத்தை உயர்த்த துடிப்பது சரியல்ல.- அன்புமணி,தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Narayanan
மே 21, 2025 15:51

மின்சார வாரியத்தின் கொள்ளை 1. மின்கட்டண உயர்வு . 2. மின் தூக்கி லிப்ட் , 3. அடுக்கு மாடி சுற்றுசுவர் விளக்கின் பயன்பாட்டுக்கு தனி விலை .4 நிலுவை கட்டணம் 5. தண்ணீர் மோட்டாருக்கு தனி கட்டணம்.இப்படி பலவிதத்திலும் அடிக்கின்ற கொள்ளை போதாது என்று இப்போ வீட்டிற்கு உயர்வு இல்லை என்று சொல்லுபோதே வேறு விதத்தில் மின்கட்டணம் கூட்டப்போவது உண்மைதானே ?


RAVINDRAN.G
மே 21, 2025 12:24

மின்சார வாரியம் ஒவ்வொருவரிடமும் டெபாசிட் வாங்குகிறதே ? அந்த தொகை எல்லாம் எங்கே போகிறது? யாரும் மின்சாரம் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை. ஆகவே அதை எல்லாம் ஏப்பம் விட்டிருப்பார்கள். எந்த அரசு வந்தாலும் மாற்று நடவடிக்கை அதாவது சூரிய ஒளி மின்சாரம் கவனம் செலுத்துவது எடுக்கப்போவதில்லை. சும்மா கட்டணம் உயர்வு என்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை. சொந்த வீடு உள்ளவர்கள் வீட்டிலேயே சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும்.இதுவே தன்னிறைவு அடைவதற்கு ஒரே வழி


theruvasagan
மே 21, 2025 10:43

2026ல் கிடைக்கப் போகிற ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் இப்போதிருந்தே தங்களிடமிருந்து ஆயிரக் கணக்கில் உருவப்படுவது தெரியாமல் திரியும் டாஸ்மாக் நாட்டு குடிமக்களுக்கு ஜே.


SUBBU,MADURAI
மே 21, 2025 13:01

மின்கட்டணத்தை உயர்த்தவில்லை மாற்றியமைத்திருக்கிறோம் நீங்க எங்கெங்க எப்படியெடிப்படி பேச்சை மாத்துவீங்கன்னு எங்களுக்கு தெரியாதா?


Svs Yaadum oore
மே 21, 2025 08:38

தமிழ் நாட்டில் மின் தேவைக்கான மின் உற்பத்தி 30 சதம் கூட இங்கு கிடையாது ...எல்லாம் வெளி மாநிலங்களிருந்து மின்சாரம் வாங்குவது...இந்த லட்சணத்தில் இது முன்னேறிய மாநிலமாம் .. ....வெளியில் மின்சாரம் வாங்கி அதில் பெரிய கொள்ளை ..ஒரு யூனிட் மின்சாரம் 14.36 ரூபாய் என்று வாங்குவது .. மின் வாரியத்தின் 2 லட்சம் கோடி கடன் அதற்கு வட்டி எவன் கட்டுவான் ??...இதென்ன இவனுங்க அப்பன் வீட்டு பணமா ??....


Svs Yaadum oore
மே 21, 2025 08:28

2023-2024 ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் 14.36 ரூபாய் என்று வாங்கி 13000 கோடிகள் மின் வாரியம் செலவு செய்துள்ளது ...பல ஆயிரம் கோடிகள் கொள்ளை ....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம்?? .


Svs Yaadum oore
மே 21, 2025 08:26

வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படாது .... ஆனால் , தொழிற்சாலை, வணிகம் உட்பட மற்ற பிரிவுகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாம் ....இதற்கு காரணம் கேட்டால் ஒன்றிய அரசு ஒன்றிய அரசு உதய் மின் திட்டம் என்று கூவுவானுங்க ......தமிழ் நாடு மின்மிகை மாநிலம் முன்னேறிய மாநிலம் என்று மாறி விட்டதாம் ....ஆனால் மொத்த மின் தேவையில் 70 சதம் மின்சாரம் மத்திய அரசு நிறுவனம் தனியார் நிறுவனத்திடமிருந்து வாங்குவது ..இங்கு மின் உற்பத்தி செய்ய திறனற்ற விடியல் அரசு ..2023-2024 ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் 14.36 ரூபாய் என்று வாங்கி 13000 கோடிகள் மின் வாரியம் செலவு செய்துள்ளது ....இந்த ஊழலுக்கு காரணம் யார் ....எவன் அப்பன் வீடு பணத்தை இப்படி கொள்ளை ...


Palanisamy Sekar
மே 21, 2025 05:22

மின்கட்டணம் செய்தியே மக்களுக்கு ஷாக் அடிக்கும் அளவுக்கு இருப்பதால் நிச்சயம் போராட்டங்கள் தொடரக்கூடும் என்கிற பயத்தில் கம்முன்னு இருக்கின்றார்கள். இங்கேயும் ஒருலட்சத்து நாற்பதாயிரம் கோடி கடன் என்றால்.. இதுவரை உயர்த்திய மின்கட்டணங்களை என்னதான் செய்தார்களோ தெரியவில்லை. எங்கும் எதிலும் ஊழல் என்பதுபோல இதிலுமா என்கிற செய்தியால் ஷாக்தான் ஊழலுக்காகவே இந்த ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்.


Kasimani Baskaran
மே 21, 2025 04:11

உயர்த்தாமல் இருப்பதே சாதனை என்று சொல்லுமளவுக்கு பொதுமக்களை பக்குவப்படுத்தி மூளைச்சலவை செய்து வைத்து இருக்கிறார்கள். பெட்ரோல் விலை மட்டுமே அதிகம் என்று நம்பும் உடன்பிறப்புக்களும் கூட உண்டு.


Mani . V
மே 21, 2025 04:09

இந்த பைத்தியங்களுடன் ஒரே ரோதனையா இருக்கு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கையையாய் விட்டு கொலையாய் கொல்கிறார்கள். டாப் டு பாட்டம் சேம்.


உ.பி
மே 21, 2025 03:07

மாடல் ஆட்சிக்கு எல்லாரும் ஒட்டு போடுங்க. 2026 ஜூலையில் இர‌ண்டு மடங்காக உயர்த்திப்பாங்க


புதிய வீடியோ