உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானை பாகன் அடித்து கொலை? முதல்வர் அலுவலகத்தில் மனைவி மனு

யானை பாகன் அடித்து கொலை? முதல்வர் அலுவலகத்தில் மனைவி மனு

சென்னை,:டாப் சிலிப் பகுதியை சேர்ந்தவர் மங்சு. இவர், நேற்று முதல்வர் அலுவலகத்தில் அளித்த மனு:என் கணவர் ராஜ்குமார். டாப்சிலிப் கோழிகமுத்தி செட்டில் மெட்டில் உள்ள, யானைகள் முகாமில், தற்காலிகமாக 16 ஆண்டுகள், நிரந்தரமாக ஐந்து ஆண்டுகள், யானைப் பாகனாக பணிபுரிந்து வந்தார். கடந்த டிச.,2ம் தேதி அவருடன் வேலை பார்க்கும், யானைப் பாகன் சந்திரன் என்பவர், வனத்துறை அலுவலர் அழைத்து வர சொன்னார் எனக் கூறி, அழைத்து சென்றார்.மூன்று நாட்கள் கழித்து, மாயதுரை என்ற வனத்துறை அலுவலர், ராஜ்குமார் சேத்துமடை செக்போஸ்டில் இருக்கிறார் என, தகவல் சொன்னார். நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, எனது கணவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.அந்த இடத்திற்கு சந்திரனை அழைத்து வந்தனர். போலீஸ் அதிகாரியிடம் அவர் அளித்த வாய்வழி வாக்குமூலத்தில், விஜயன், அருண், வெங்கடேஷ் ஆகியோர் சேர்ந்து அடித்து கொன்றதாக தெரிவித்தார். அங்கிருந்த மக்கள், டாப்சிலிப்பில் இருந்து சென்றபோது, விஜயன், அருண், வெங்கடேஷ் ஆகியோர், என் கணவருடன் சென்றதாக தெரிவித்தனர். அவர்கள் மீது காவல் துறையினரும், வனத்துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சந்தேகமாக உள்ளது. அவரை கடத்தி கொலை செய்தவர்கள் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி