மேலும் செய்திகள்
எந்த நோய் பாதிப்பு வந்தாலும் தடுப்போம்
04-Oct-2024
சென்னை:மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க, மாநில பணிக்குழுவின் முதல் கூட்டம், சென்னையில் நடந்தது. மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் பிரசவத்தின் போது, ஒரு லட்சம் பேரில், 54 என்ற வகையில் மகப்பேறு இறப்பு விகிதம் உள்ளது. தேசிய அளவில் இது குறைவு என்றாலும், மாநில அளவில், கேரளா 19; மஹாராஷ்டிரா 33; தெலுங்கானா 43; ஆந்திரா 45; ஜார்க் கண்ட் 130; குஜராத் 57 என, மகப்பேறு இறப்பு விகிதம் உள்ளது. தமிழகத்தில், மகப்பேறு இறப்பு காரணங்களை கண்டறிய, 2004ம் ஆண்டு முதல் தணிக்கை செய்யப்படுகிறது. அதில், பிரசவத்திற்கு பிந்தைய ரத்தப் போக்கால் 20; கர்ப்பகால உயர் ரத்த அழுத்தத்தால் 19; ரத்தத்தில் கிருமித்தொற்று 10; இதய நோயால் 9; கருக்கலைப்பால் 4; பிற நோய்களால் 38 சதவீதம் பேர் இறந்தது தெரியவந்துள்ளது. மேலும், 74.25 சதவீத மகப்பேறு இறப்புகள், பிரசவத்திற்கு பிந்ைதய காலகட்டத்தில் நடந்துள்ளன. மேலும், 72 சதவீத இறப்புகள் கிராமங்களிலும், 28 சதவீதம் நகரங்களிலும் நடந்துள்ளன. தஞ்சாவூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, தேனி, நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில், ஒரு லட்சம் பிரசவங்களில், 55க்கும் மேல் உயிரிழப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அம்மாவட்டங்களில் மகப்பேறு இறப்பு விகித விபரங்களை, பணிக்குழு ஆய்வு செய்தது. தமிழகத்தில் ஆண்டுக்கு, ஒன்பது லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 80,000 வரை பிரசவங்கள் நடக்கின்றன.எனவே, அனைத்து பிரசவங்களும், அதிக ஆபத்து நிறந்தவையாக இருக்கலாம் என்ற வகையில், அனைத்து வசதிகள் இருக்கக்கூடிய இடங்களில் மட்டுமே, பிரசவம் திட்டமிட வேண்டும். தேசிய சுகாதார இயக்க அலுவலகத்தில், அவசர கால கட்டுப்பாட்டு அறை துவக்கப்படும். இதில், மகப்பேறு இறப்புகளை குறைக்க, ஏழு டாக்டர்கள், வல்லுனர்களை கொண்ட பிரத்யேக குழு, 24 மணி நேரமும் செயல்படும்.இதுபோன்ற நடவடிக்கைகள் வாயிலாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில், இறப்பு விகித அளவை, 10க்கும் கீழ் குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
04-Oct-2024