மேலும் செய்திகள்
தேர்தல் கமிஷன் செய்யும் சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
4 hour(s) ago | 24
தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி ராஜா உள்ளிட்ட மராட்டிய வம்சத்தின் 13வது தலைமுறையை சேர்ந்தவர் பாபாஜி ராஜா போன்ஸ்லே. இவரின் குடும்பத்தினர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை நிர்வகித்து வருகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கோவில்களின் அறங்காவலர்களாக உள்ளனர். அயோத்தி விழாவில் தஞ்சை மராட்டிய அரச குடும்ப பிரதிநிதியாக பங்கேற்றார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:நாங்கள் அங்கு சென்றது முதல் எங்களை வரவேற்பில் திக்குமுக்காட வைத்தனர். எங்களின் காலணிகளை கூட, கரசேவகர்கள் கைப்பட கழற்றினர். நாங்கள் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. குடிநீர், தேநீர், சாப்பாடு உள்ளிட்டவற்றை விருப்பம் அறிந்து உபசரித்தனர்.ராமரின் பிராண பிரதிஷ்டையின் போது, அங்கு முழுக்க ஒரு உணர்வுப்பூர்வமான நிலை உருவானது. எங்கும் ராம கோஷம் முழங்கியது. அந்த ஊர் மக்கள், ராமர் வந்து விட்டார், இனி ஊருக்கு நல்லது நடக்கும், ஊர் சுபிட்சம் பெறும் என்று நம்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago | 24