மேலும் செய்திகள்
லோக்சபாவில் புதிய வருமான வரி மசோதா... தாக்கல்!
14-Feb-2025
சென்னை:'நடப்பாண்டிற்கான வருமான வரி மசோதா பிரிவு கணக்காளர் வரையறையில், செலவு கணக்காளர்களை சேர்க்க வேண்டும்' என, இந்திய செலவு கணக்காளர் நிறுவனத்தின் தெற்கு தலைவர் விஷ்வநாத் பட் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 2025ம் ஆண்டிற்கான வருமான வரி மசோதாவிற்கு, நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். இந்த மசோதாவில், வருமான வரிச்சட்டத்தின் 'கணக்காளர்' வரையறைக்குள், செலவு கணக்காளர் பெயரையும் சேர்க்க வேண்டும். தென்மாநிலம் முழுதும், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.மசோதாவில் செலவு கணக்காளர் பெயர் சேர்க்கப்பட்டால், நாங்கள் வருமான வரி கணக்கீடு செய்யும் தகுதியை பெறுவோம். நாங்கள் அனைத்து விதங்களிலும், பட்டய கணக்காளர் போன்ற, பிற தொழில்முறை நிபுணர்கள் வரிசையில் சமமாக உள்ளோம். மத்திய அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று, மசோதாவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
14-Feb-2025