உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவு சாம்பல் கொடுத்து ஏமாற்றிய சுடுகாடு ஊழியர்கள் தப்பியோட்டம்

கழிவு சாம்பல் கொடுத்து ஏமாற்றிய சுடுகாடு ஊழியர்கள் தப்பியோட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார்: வேலுார் மாநகராட்சிக்குட்பட்ட, அம்மனாங்குட்டை மயானத்தில், சடலத்தை எரிக்க கட்டணமாக, 3,500 ரூபாயை மாநகராட்சி நிர்ணயித்த நிலையில், 4,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இங்கு ஊழியராக ராஜேஷ் பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் அப்பகுதி சிந்து, 36, என்ற பெண், மூதாட்டி பார்வதி, 90, ஆகியோரது சடலங்களை எரிக்க, அன்று மாலை அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டன. அப்போது, ராஜேஷ், சடலத்தை வைத்து விட்டு செல்லுமாறும், ஒரு மணி நேரம் கழித்து, அஸ்தியை பெற்று செல்லுமாறும் கூறினார். ஆனால், சடலத்தை எரிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், சந்தேகமடைந்த உறவினர்கள், அவரிடம் தகராறு செய்தனர்.அவர், 'நீண்ட நாட்களாக எரிவாயு இல்லாததால், சடலம் எரிப்பதில்லை' என, அதிர்ச்சி தகவலை கூறி விட்டு, இரு சடலத்தையும் அப்படியே போட்டு விட்டு தப்பியோடினார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சடலத்தை எடுத்து சென்று புதைத்தனர். பொதுமக்கள், 100க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.மயானத்தில் நீண்ட நாட்களாக சடலத்தை எரிக்காமல், புதைத்து விட்டு, கழிவுகளை எரிக்கும் சாம்பலை உறவினர்களிடம் கொடுத்து, சடலத்தின் அஸ்தி என ஏமாற்றி வந்தது தெரிந்தது.வேலுார் தெற்கு போலீசார் மற்றும் வேலுார் மாநகராட்சி அலுவலர் முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Chandran Subramaniam
ஏப் 30, 2025 21:18

பணம் கொடுத்தால் உயிருடன் இருக்கும் நபர்களுக்கும் சாம்பல் கிடைக்கும்


Chandran Subramaniam
ஏப் 30, 2025 21:11

எல்லாம் நடக்கும் எதிர்க்கலாம் ஆனால் இலவசமாக ஓட்டு போடவேண்டும் இனி வரும் காலங்களில் உயிருடன் இருக்கும் நபர்களுக்கும் சாம்பல் கிடைக்கும் அஸ்தி கரைக்க ராமேஸ்வரம் செல்ல ஒரு கூட்டம் உள்ளது


Balakrishnan karuppannan
ஏப் 30, 2025 16:22

கருவறை முதல் கல்லறை வரை லஞ்சம். அதிலும் பொய்... பித்தலாட்டம்.... எங்கே போகும் இந்த பாதை.. யாரோ யாரோ அறிவார்...


Mecca Shivan
ஏப் 30, 2025 16:21

விடியல் ஆட்சியின் உச்சகட்ட சாதனை ..செத்தால் கூட மரியாதையை கிடைக்காது


Iniyan
ஏப் 30, 2025 10:04

விடியா அப்பா ஆட்சியின் அவலம்.


RAVINDRAN.G
ஏப் 30, 2025 10:02

இப்படியெல்லாமா ஏமாற்றுவார்கள். புதுசு புதுசா யோசிக்கறாங்க


கல்யாணராமன் மறைமலை நகர்
ஏப் 30, 2025 07:48

இறந்த உடலை எரிக்காதது மட்டுமல்ல கழிவு சாம்பலைக் கொடுத்து ஏமாற்றியும்உள்ளனர் என்பது மிகப் பெரிய கொடுமை. எரிப்பது என்பது இந்து மதத்தில் மட்டும் உள்ள பழக்கம். இந்த இந்து விரோத அரசு அதிலும் துரோகம் செய்கிறது.


c.mohanraj raj
ஏப் 30, 2025 07:07

இது இதுதான் திராவிட மாடல்


அப்பாவி
ஏப் 30, 2025 07:02

திருட்டு திராவிடனுங்க எல்லா லெவலிலும் நீக்கமற நிறைஞ்சிருக்கானுங்க


durai
ஏப் 30, 2025 06:45

No comment


சமீபத்திய செய்தி