உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு அகற்றணும்: தஞ்சாவூர் கலெக்டருக்கு ஐகோர்ட் கெடு

கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு அகற்றணும்: தஞ்சாவூர் கலெக்டருக்கு ஐகோர்ட் கெடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கும்பகோணம் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், அக்டோபர் 28ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்' என தஞ்சாவூர் கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட் கெடு விதித்துள்ளது.கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், கும்பகோணம் கோவில் குளங்கள், நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை.

அவமதிப்பு வழக்கு

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கறிஞர் ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ''கும்பகோணம் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், அக்டோபர் 28ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும்.

உத்தரவு

மாற்று இடம் வழங்கி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்ததில் இருந்து அவர் கலெக்டர் ஆக இருக்க தகுதியானவர் இல்லை என தெளிவாகிறது. கும்பகோணம் கோவில் குளங்கள், அதற்கு நீர் செல்லும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற வேண்டும்'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
ஆக 19, 2024 21:37

தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல் ஆக்கிரமிப்பாளர்கள் உடன்பருப்புக்களாக இருக்கவே வாய்ப்பு ......


Ramesh Sargam
ஆக 19, 2024 20:02

திமுக அரசு நீதிமன்றங்களின் கோரிக்கைக்கு, கட்டளைக்கு செவி மடுக்கும் அரசு அல்ல.


sridhar
ஆக 19, 2024 19:16

ஒரே ஒரு சர்ச் / மசூதி இடத்தை யாரவது ஆக்கிரமிப்பு பண்ணட்டும் , அப்போ தெரியும் நம் போலீஸ் , ஆட்சியரின் செயல் திறன் .


அப்பாவி
ஆக 19, 2024 18:19

சீக்கிரம் மாத்தல் வாங்கிட்டுப் போயிடுங்க. தி.திராவிடனுங்க கிட்டேயிருந்து எதையும்.மீட்க முடியாது.


P. VENKATESH RAJA
ஆக 19, 2024 15:46

அனைத்து ஊர்களிலுமே கோயில் குளங்கள் தூர் வாராமல் உள்ளது


Lion Drsekar
ஆக 19, 2024 14:55

ட்ராபிக் ராமசாமி பாவம், தன வாழ்க்கையைத் துலைத்து சமுதாயத்துக்காக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து , பல இன்னல்களை கடந்து, ஜனநாயக காலத்தில் ஒரு சுதந்திர தியாகியாக வாழ்ந்து பல வழக்குகளில் வென்றார், இன்று அவர் வென்ற வழக்குகள் நிலைப்பாடு ? அவர்காலத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே நிலைக்கு கொண்டுவந்துவிட்டது இலவசம், பிரியாணி, சாராயம் , வந்தே மாதரம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி