உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2வது நாளாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சல்லடை

2வது நாளாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சல்லடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, எழும்பூர் சி.எம்.டி., வளாகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாளக இன்றும் (மார்ச் 07) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் தலைமை அலுவலகம், சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையின் நான்காவது மாடியில் உள்ளது. மதுபான கொள்முதல் விவகாரத்தில், சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், அவரது நண்பர் ஜெயமுருகன் நிறுவனங்கள் மற்றும் 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.இந்நிலையில் டாஸ்மாக் அலுவலகத்தில் இன்றும் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள எஸ்.என்.ஜே. டாஸ்மாக் ஒப்பந்ததாரர் தலைமை அலுவலகம், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலகங்களில், புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் மதுபான ஆலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்ற அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Iyer
மார் 08, 2025 05:06

பள்ளி கல்லூரிகளில் = யோகா, பிராணாயாமம், சூரிய நமஸ்காரம், தியானம், போன்ற நெறிமுறை பாடங்களை கற்பித்தால் = மோதி, யோகி , போன்ற நல்ல அரசியல் தலைவர்கள் உருவாகுவது நிச்சயம். இல்லாவிட்டால் லாலு, முலாயம், கருணாநிதி, ஸ்டாலின், சரத் பவார், பப்பு போன்ற ஊழல் பேர்வழிகள் தான் நம்மை ஆளுவார்கள்


Iyer
மார் 08, 2025 05:01

அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் - குற்றப்பத்திரிகை தாக்கப்பட்டவுடன் ஜாமீன்ல் வெளிவராதபடி குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யவேண்டும்.


Iyer
மார் 08, 2025 04:59

அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளுக்கு தனி சிறப்பு நீதி மன்றங்கள் அமைத்து - தேதிகள் தள்ளிப்போடாமல் - தொடர் நீதி விசாரணை நடத்தவேண்டும்.


Gopalan
மார் 07, 2025 18:35

திமுக எம்பி சீட்களை பிஜேபிக்கு பார்லிமெண்டில் சப்போர்ட் செய்தால் ரெய்டு விலக்குவார்களா என்று ஆலோசனை அறிவாலயத்தில் நடத்துவார்களா??


MARUTHU PANDIAR
மார் 07, 2025 15:20

முன்ன நாங்க புறங்கையை மட்டும் தான் நக்கினோம், நக்கி நக்கி கை புண்ணாயிட்டு இல்ல?, அது தான் ஜாடியோட வாயில இப்பல்லாம் ஒரேடியா கவுத்துக்குறோம் .


Guna Gkrv
மார் 07, 2025 15:11

ஒன்னும் கிடைக்கவில்லை போல் இரண்டு நாளாக தேடியும் ஒன்றும் இல்லையா அப்புறம் எதுக்கு தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் கிளம்பி போங்கள் ,


Sampath Kumar
மார் 07, 2025 14:09

இதை வைத்து கொண்டு பிஜேபி காரன் ஆட்டம் காட்டுகிறான் கொஞ்சம் பொறு நிலைமை மாறும் இதை துறை உனக்கு எதிராக திரும்பும்


MARUTHU PANDIAR
மார் 07, 2025 15:16

ஓஹோ, சூரியன் மேற்கே உதிக்கப் போகுது இல்,ல , சரி உதிக்கட்டும் .இந்த புள்ளிகள் எல்லாம் பரிசுத்தர்களாக மாறிடுவாங்க .


vijai hindu
மார் 07, 2025 18:56

200 ரூபாய் பிரியாணி


Sridhar
மார் 07, 2025 13:19

பாட்டிலுக்கு பத்துனு நினைச்சிட்டிருந்த நம்மள மேலும் வியக்க வச்சிருக்கு திருட்டு கும்பல். நாங்க என்ன அவ்வளவு சாதாரணமான ஆளுங்களா, சும்மா பத்து ரூபா திருட்டோடே போகறதுக்கு? டாஸ்மாக் மொத்த வியாபாரத்துல பாதிக்கு மேல வரியே கட்டாதபடி தீமுகா ஆலையிலிருந்து நேரா விற்பனை எப்புடி? ஒரு பாட்டிலுக்கு பத்துங்கறதெல்லாம் பழையகதை. இப்போ நாங்க ஒரு பாட்டிலுக்கு 150 ரூபா அடிக்கறோமுல்ல?? அடேங்கப்பா பயங்கரமான ஆளுங்களா இருக்கானுங்க ஆனா ஒன்னு, மோடி அரசு இவனுகள பிடிச்சு உள்ள வைக்கும்னு நினைக்கறீங்க? ஹஹ்ம்ம்னு. ஏற்கனவே இருக்கற கேஸுங்க எல்லாம் என்னவாச்சுனு தெரியல.


Perumal Pillai
மார் 07, 2025 12:31

சும்மா பூச்சாண்டி காட்டுவார்கள். ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் .பல தடவை பார்த்து விட்டோம். திருடரை பிடிக்க முதுகு எலும்பு வேண்டும் .அது பிஜேபி- க்கு கிடையாது.


sankaranarayanan
மார் 07, 2025 11:49

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சல்லடை போட்டு தேடு செய்கிறார்கள் திருடர்களை பிடிக்க போலீசு வலை வீசி பிடிக்கிறார்கள் என்ன வலை யாருக்கு தெறியும் அரசியல் தலைவர்களுக்கு நான்கு அடுக்கு அல்லது ஐந்து அடுக்கு என்ன பித்தளை அடுக்கா அல்லது எவர் சிலவர் அடுக்க என்றே தெரியவில்லை = பாது காப்பு என்று கூறும் பசப்பு வார்த்தைகளை இனி நிறுத்திக்கொண்டால் நண்டாரவே இருக்கும் இவைகளுக்கு உண்டான ஆதார வார்த்தைகளையே சொல்லலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை