உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஜி மந்திரி வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்க துறை ரெய்டு

மாஜி மந்திரி வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்க துறை ரெய்டு

கட்டுமான நிறுவனத்திடம் 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஜெயலலிதா ஆட்சியில் தொழில், வனம், நகர்ப்புற வளர்ச்சி போன்ற துறைகளின் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது சென்னை பெருங்களத்துாரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, சி.எம்.டி.ஏ., எனப்படும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் அனுமதி கேட்ட நிறுவனத்திடம் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என லஞ்ச ஒழிப்பு துறையில், அறப்போர் இயக்கம் புகார் கொடுத்தது. போலீசார் விசாரித்து, வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, உறவினர் பன்னீர்செல்வம், கட்டுமான நிறுவனம் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.கடந்த செப்டம்பரில் வைத்திலிங்கம் மற்றும் உறவினர் வீடுகளில் நடத்திய சோதனையில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது உறுதியானதால், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். சம்பந்தப்பட்ட நிறுவனம், அதன் இணை நிறுவனத்திற்கு 28 கோடி ரூபாய் கடன் கொடுத்திருப்பது தெரிய வந்தது. இணை நிறுவனத்தின் இயக்குனர்கள் வைத்திலிங்கத்தின் மகன்கள் மற்றும் உறவினர் என கண்டறிந்தனர். பணம் கைமாற்ற உருவாக்கப்பட்டதே இணைநிறுவனம் என்பதும், வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை என்பதும் ஊர்ஜிதமானது. வாங்கிய பணத்தில், அமைச்சரின் மகன்கள் திருச்சி மாவட்டத்தில் வாங்கிய நிலங்கள், மனைகள் அடையாளம் காணப்பட்டன. அதையடுத்து, சென்னை அசோக் நகரில் ஒரே கட்டடத்தில் செயல்படும் வைத்திலிங்கம் குடும்பத்தினரின் 6 நிறுவனங்களில், நேற்று அமலாக்க அதிகாரிகள் சோதனை செய்தனர். தி.நகரில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகம், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் குழும நிதி அதிகாரி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், தெலுங்கன் குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டிலும் சோதனை செய்தனர். அப்போது வைத்திலிங்கம் அங்குதான் இருந்தார். ஒரத்தநாடு அருகே, பேய்க்கரம்பன் கோட்டையில் உள்ள வைத்திலிங்கத்தின் மைத்துனர் பன்னீர்செல்வத்தின் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, சோதனையில் ஈடுபட்டனர்.

சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில்...

சென்னை எழும்பூரில் உள்ள, சி.எம்.டி.ஏ., அலுவலகத்திலும் சோதனை நடந்தது. வைத்திலிங்கம் அமைச்சராக இருந்தபோது பணியில் இருந்த அதிகாரிகள் யார்; கோப்புகளில் கையெழுத்திட்டவர்கள் யார் என்ற விபரங்களை சேகரித்தனர். சேப்பாக்கத்தில், எம்.எல்.ஏ., விடுதியில் உள்ள வைத்திலிங்கத்தின் அறையிலும் சோதனை செய்தனர்.தஞ்சாவூரில் உள்ள பிரபு வீட்டிற்கு நான்கு அதிகாரிகள் வந்தனர். பிரபுவின் மனைவி, மகன், மாமியார் ஆகிய மூவரை அதிகாரிகள் அழைத்து செல்ல முயன்றபோது, பிரபுவின் ஆதரவாளர்கள், 'பெண்களை எங்கே அழைத்து செல்கிறீர்கள்?' என கேட்டு வாக்குவாதம் செய்தனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் பிரபு மனைவி மற்றும் உறவினர்களை, பேய்கரம்பன்கோட்டையில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஆதரவாளர்கள் இரு கார்களில் தொடர்ந்து சென்றனர்.கோவையிலும் வைத்திலிங்கத்தின் உறவினர் வீடுகளில் சோதனை நடந்தது. நிறைய தகவல்கள் சேகரிக்க முடிந்தது என அதிகாரிகள் கூறினர். சோதனைகளின் விபரங்களை வெளியிடவில்லை. - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

வைகுண்டேஸ்வரன்
அக் 24, 2024 14:38

அவர் திராவிடம் பற்றி சும்மா பேசவில்லை. எதிராக பதிவிட்டார். அந்த பதிவை வலுப்படுத்தத் தான் நான் இந்து என்று பதிவிடுவது இன்னும் வலுவான வாதமாக இருக்குமல்லவா? அதனால் அப்படி சொன்னேன். திராவிடத்தை விட இந்து மதத்தின் பரிமாணம் பெரிதல்லவா? அதனால் தான் அப்படி பதிவிட்டேன். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? 1. வைத்திலிங்கம் இந்து இல்லியா? 2. திராவிடர்கள் இந்துக்கள் இல்லையா?


Mettai* Tamil
அக் 24, 2024 15:14

அவர் திராவிட சித்தாந்தம் கரைகிறது என்று சொல்கிறார் . நீங்கள் உடனே அவர் ஹிந்து மதம் என்று குழப்ப வேண்டாம் . அவர் எந்த மதமாகவே இருக்கட்டும் . திராவிடம் னாலும் தமிழன் னாலும் இந்துக்கள் தான் என்று சொல்ல வரீங்க .....மற்றவங்க மொழி, சித்தாந்தம் என்று பிரிவினை இல்லாம, தன் மத அடிப்படையில் தீவிர முக்கியத்துவம் கொடுப்பாங்க ன்னு சொல்றீங்க ........


Ram pollachi
அக் 24, 2024 14:26

கோவையில் பிரபலமான மருத்துவமனை இரண்டு ஏக்கர் காலி நிலத்தை நூறு கோடிக்கு வாங்கியதாக தகவல் வருகிறது அதில் எத்தனை கோடிக்கு கட்டிடங்கள் அமைப்பார்களோ? மருத்துவம், கல்வி துறையில் கருப்பு விளையாடுது அமுல் பேபி வேடிக்கை பார்க்குது....


SRISIBI A
அக் 24, 2024 13:03

உன்கட்சியில் எல்லா குற்றமும் எதிர் கட்சி மீது மட்டுமே


Srinivasan Ramabhadran
அக் 24, 2024 10:41

அமலாக்கத்துறை ரெய்டு எல்லாம் ஓகே .எந்த ஒரு வழக்கும் விரைவில் சிறந்த முறையில் நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டனை பெற்றால் தான் இந்த ரெய்டுகளுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். இல்லை என்றால் இதனால் ஒரு பயனும் இல்லை.


வைகுண்டேஸ்வரன்
அக் 24, 2024 09:32

இந்து மதம் காற்றில் கரைகிறது இந்துக்கள் மானம் கப்பலேறுகிறது என்று கூடச் சொல்லலாமே காசிமணி சார். வைத்திலிங்கம் இந்து தானே??


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 24, 2024 10:27

அவர் திராவிடம் பற்றிக் கூறும்போது பதிலுக்கு இந்து மதம் பற்றி பேசுகிறீர்கள் ..... அதாவது 1. திராவிடத்துக்கு எதிரானது ஹிந்து மதம் 2. உங்கள் பெயர் மட்டுமே இந்து பெயர் .....


ராமகிருஷ்ணன்
அக் 24, 2024 13:44

இந்துகளை விட மற்ற மதங்களில் களவாணிகள் அதிகம். இந்துக்களுக்கு செய்த பாவங்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும். மற்ற மதங்களில் தண்ணியை தெளிச்சு மன்னித்து விடுவார்கள். அடுத்த பாவம் செய்ய கிளம்பி விடுவார்கள்.


RAMAKRISHNAN NATESAN
அக் 24, 2024 14:25

அடுத்த பாவம் செய்ய கிளம்பி விடுவார்கள்... ராமகிருஷ்ணன் ஜி .. எனக்கு ஒரு சந்தேகம்.. அதென்ன ஒரு மதத்து கடவுள் தண்டிக்கிறார் ... வேறு மதத்து கடவுள் மன்னித்துவிடுகிறார்?? மன்னிக்கிற கடவுள் அருளிய மதத்தை பின்பற்றவே எனக்கும் விருப்பம்.. ஆனால் எனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்பதை கடவுள் எனக்கு எப்படி தெரிவிப்பார் ????


வைகுண்டேஸ்வரன்
அக் 24, 2024 09:32

திராவிடம் கரையவில்லை இந்து மதம் காற்றில் கரைகிறது இந்துக்கள் மானம் கப்பலேறுகிறது என்று கூடச் சொல்லலாமே காசிமணி சார். வைத்திலிங்கம் இந்து தானே??


RAJ
அக் 24, 2024 08:26

அப்போ கர்ரெண்டு மந்திரிஸ் கையெல்லாம் சுத்தமாயிட்டுனு சொல்றிங்களா அய்யா..


Kasimani Baskaran
அக் 24, 2024 07:02

திராவிடம் சிறிது சிறிதாக காற்றில் கரைகிறது.


Mani . V
அக் 24, 2024 05:44

இப்ப பதவியில் உள்ள மந்திரிகள் அனைவரும் யோக்கிய சிகாமணிகள்தானுங்களே ஆபீசர்?


தாமரை மலர்கிறது
அக் 24, 2024 02:03

வைத்திலிங்கம் பிஜேபியில் விரைவில் இணைவார் என்று தெரிகிறது.


முக்கிய வீடியோ