உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

சென்னை: சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சுமார் 11 மணி நேரம் சோதனை நடத்தினர்.தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்து வருகிறார். இவரது வீடு திண்டுக்கல் அசோக் நகரில் உள்ளது. இவரது வீட்டில் காலை 6:45 மணி முதல் 4 அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் 8 சிஆர்பிஎப் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த காரும் சோதனைக்கு உள்ளானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8w1ldkh1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ . பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டிலும் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு 10 சிஆர்பிஎப் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு மாலைக்கு மேலும் சோதனை நீடிப்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.ஐ.பெரியசாமியின் மகனும், பழநி எம்.எல்.ஏ.வும், திண்டுக்கல் தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள செந்தில்குமார் வீடு, திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் உள்ளது. இவரின் வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அங்கு 8 சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று பேரின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் உள்ளே புகுந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதலே சோதனையில் ஈடுபட்டதால், திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்ட வரும் தகவல் அறிந்து தி.மு.க., கட்சி தொண்டர்கள் அவரின் வீட்டு முன்பு குவிந்தனர். அதேபோல் சென்னை, மதுரை, திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வத்தலக்குண்டு அருகே உள்ள அமைச்சர் பெரியசாமிக்கு சொந்தமான இருளப்பா மில்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற ஸ்பின்னிங் மில்லில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 7:00 மணி முதல் சோதனையிட்டனர். திண்டுக்கல் மற்றும் சென்னையில் சுமார் 11 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள் கிளம்பி சென்றனர்.இதனிடையே, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை எதிரொலியாக தலைமைச் செயலகத்தில் ஐ.பெரியசாமி அறைக்கு பூட்டு போடப்பட்டு உள்ளதுடன், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

venugopal s
ஆக 16, 2025 21:41

என்ன வழக்கம் போல் புஸ்வாணம் தானே?


vivek
ஆக 16, 2025 22:01

இப்போ புஸ்வாணம் அப்புறம் பின்னாடி பெரிய ராக்கெட் வரும் வேணு....அப்புறம் எரியுதே வெகுது சொல்லக்கூடாது ஓவிய வேணுகோபால்


Kudandhaiyaar
ஆக 16, 2025 19:01

முதலில் அமலாக்க துறையை நிரந்தரமாக நீக்க வேண்டும். செய்தி மட்டும் தான் வருகிறது. சோதனை போடுவது அவர்களின் சொந்த சுய லாபத்திற்காக செய்கிறார்களோ.தமிழகத்தில் இதுவரை வாரம் ஒரு முறை சோதனை நடக்கிறது. 5 வருடங்களில் யாரையாவது ஒருவரை கைது செய்ய முடிந்ததா . குறைந்தபட்சம் நிருபிக்கவாவது முடிந்ததா.


Thiagaraja boopathi.s
ஆக 16, 2025 17:02

மிகவும் குறைந்த இடங்களில் சோதனை நடத்தி பயன் இல்லை


VSMani
ஆக 16, 2025 16:26

காமராஜர் காலத்தில் அமைச்சர்கள் என்றால் வறுமை நிலையில் பேருந்தில் பயணம் செய்தும் சொந்தமாக ஒரு நல்ல வீடு கூட இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கமும் சிந்தையும் உடையவர்கள். இப்போதெல்ல்லாம் பல கோடிகளுக்கு சொந்தக்காரர்கள்தான் MLA, MP, அமைச்சகர்கள். எல்லாம் மக்கள் பணத்தை கொள்ளையடித்து பங்களாக்களும், மாட மாளிகைகளும், சொகுசு கார்களும் கோடிக்கணக்கில் மகன்கள், மகள்களுக்கு சொத்துக்களும் வைத்திருக்கிறரர்கள் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இதுவரை அமலாக்கத்துறை சோதனை செய்து அத்தனை கோடி சொத்துக்களை பிடித்தோம் அதை பிடித்தோம் இதை பிடித்தோம் என்று சொல்லியிருக்கிறார்களே அதன் பிறகு என்ன ஆனது என்று யாருக்காவது தெரியுமா? கணக்கில் காட்டாத சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்த்திருக்கிறார்களா? எல்லாமே ஒரு நாடகம்தான்.


ஆரூர் ரங்
ஆக 16, 2025 15:10

ஆக நமது நாட்டில் ஊழல் ஒழிய வாய்ப்பில்லை.


Mani . V
ஆக 16, 2025 13:45

நூறு நாள் வேலைத் திட்டத்தில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து சேர்த்து வைத்துள்ளதை சோதனை செய்வது சரியல்ல.


ஜெகதீசன்
ஆக 16, 2025 13:20

மணிக்கு ஐந்து லட்சம் பீஸ் வாங்கும் வக்கீலை வைத்து இதை ஒன்றுமில்லாமல் செய்ய தெரிந்தவர்கள். ஒன்றும் செய்ய முடியாது.


Kasimani Baskaran
ஆக 16, 2025 12:58

கடவுள் இல்லை என்று அரசியலுக்காக சொல்லும் கருங்காலிகளுக்கு ஓட்டுப்போட்டால் என்ன ஆகும் என்று தெரிந்தும் திரும்பத்திரும்ப ஓட்டுப்போடுவது - விளக்கை கொளுத்திக்கொண்டு கிணற்றில் விழுவது போலத்தான்.


Tamilan
ஆக 16, 2025 12:53

தோல்வி பயம்


RAAJ68
ஆக 16, 2025 11:38

ஆமாம் அப்படித்தான். நாங்கள் காவடி தூக்குவோம் பால்குடம் சுமப்போம் அலகு குத்திக்கொண்டு கிரேனில் தொங்குவோம் கோயில்களில் பல மணி நேரம் வரிசையில் நின்று சாமி கும்பிடுவோம் தேர் இழுப்போம் எல்லாம் செய்வோம் ஆனால் உங்கள் ஓட்டு திமுகவுக்கு மட்டுமே. இப்ப என்னங்கறீங்க. சாமி கும்பிடும் தமிழர்கள் எல்லோரும் பிஜேபி காரர்கள் அல்ல.


சமீபத்திய செய்தி