உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த சோதனையில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

சோதனை

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனமானது, மது ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லரை மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pb909jqn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு மேலாக மது பானங்கள் விற்பனையாகின்றன. டாஸ்மாக் சார்பில், ஏழு ஆலைகளில் இருந்து பீர், 11 ஆலைகளில் இருந்து மற்ற மதுபானங்கள் கொள்முதலாகின்றன. இந்த மது ஆலைகளை, தி.மு.க., முக்கிய புள்ளிகளும், அவர்களுக்கு வேண்டியவர்களுமே நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில், பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதாகவும், மத்திய அரசின் அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன. அதனால், கடந்த 6 ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனை நடந்த இடங்கள்

சென்னை பாண்டிபஜார், திலக் தெருவில் உள்ள, தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும், 'அக்கார்டு டிஸ்லரிஸ் அண்டு பிரிவரீஸ்' மது ஆலை அலுவலகம்.சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தி.மு.க., மேலிடத்திற்கு மிகவும் வேண்டியவர் என்று கூறப்படும் எஸ்.என்.ஜெயமுருகனின் எஸ்.என்.ஜே., மதுபான குழுமத்தின் தலைமை அலுவலகம். தி.மு.க.,வை சேர்ந்த மிக முக்கிய புள்ளி ஒருவரின் நெருங்கிய நண்பர் வாசுதேவனின் கால்ஸ் குழுமத்தின் சென்னை தி.நகரில் உள்ள தலைமை அலுவலகம்.சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம்.எம்.ஜி.எம்., என்ற மதுபான ஆலை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடந்துள்ளது. இந்த சோதனையின் போது முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

முறைகேடு

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ​​பணியிட மாற்றம், போக்குவரத்து டெண்டர், பார் லைசென்ஸ் டெண்டர் ஆகியன சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமாக வழங்கப்பட்டது. டாஸ்மாக் அதிகாரிகள் உதவியுடன் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பான தரவுகள், அதில் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கு உண்டான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ரூ.100 கோடி

டாஸ்மாக்கின் போக்குவரத்து டெண்டர் ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்பதாரர்களின் கேஒய்சி விவரங்கள் மற்றும் அவர்கள் அளித்த டிடி விவரங்கள் சரியாக பொருந்தவில்லை. இதற்கான இறுதி ஏலத்தில் ஒரே ஒரு விண்ணப்பதாரர் மட்டுமே இருந்தபோதிலும் அவருக்கே டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்திற்காக டாஸ்மாக் ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்கிறது.டாஸ்மாக் பார் லைசென்ஸ் டெண்டர்கள் ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது.ஜிஎஸ்டி, பான் எண் இல்லாதவர்களுக்கும், முறையான கேஒய்சி ஆவணங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நேரடி தொடர்பு

ஒப்பந்தத்தை பெறுவது தொடர்பாக மதுபான நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்ளை இந்த சோதனையின்போது கிடைத்துள்ள ஆவணங்கள் உறுதி செய்கின்றன. எஸ்என்ஜெ, கல்ஸ், அக்கார்ட், SAIFL மற்றும் சிவா ஆகிய மதுபான நிறுவனங்களும், தேவி பாட்டில்ஸ், கிரிஸ்டல் பாட்டில்ஸ் மற்றும் ஜிஎல்ஆர் ஹோல்டிங் ஆகிய பாட்டில் நிறுவனங்கள் அதிகளவு நிதி மோசடியில் ஈடுபட்டு உள்ளதையும், சட்டவிரோத கட்டணங்கள், கணக்கில் வராத வகையில் நிதி பரிமாற்றம் நடந்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.இதன் மூலம், அரசு கணக்கில் சேராமல் ரூ.1,000 கோடி ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளது.

கூட்டு

திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை சார்ந்த புள்ளிவிவரங்களை உயர்த்தியும் இந்த முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. இந்த மோசடியில் பாட்டில் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. நிதி ஆவணங்கள் மற்றும் திட்டமிட்ட வரி ஏய்ப்பு மூலம் மதுபான நிறுவனங்களும், பாட்டில் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து பணியாற்றி உள்ளன. மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், மற்றும் பிற முக்கிய கூட்டாளிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.பா.ஜ. போராட்டம் இது தொடர்பாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டாஸ்மாக், மதுபான அமைச்சர் மற்றும் தமிழகத்தில் மதுபான விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றில் நடந்த அமலாக்கத் துறை சோதனையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முதல்வர் ஸ்டாலின் அச்சங்களைப் பரப்பி வருகிறார். கணக்கில் வராத ரூ.1000 கோடி பணம் லஞ்சமாக வழங்கப்பட்டது தொடர்பான மதுபான ஆலைகளிலிருந்து ஆவணங்களை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.மோசடி செய்வதன் மூலம் தங்கள் கட்சியின் கஜானாவை நிரப்புவதற்காக பொது மக்களை தி.மு.க.‍‍ ஏமாற்றி வருகிறது, மேலும் இந்த லஞ்சத்தைப் பெற்ற மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய முதல்வர் கடமைப்பட்டுள்ளார். தமிழக முதல்வராகத் தொடர தனக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்றும் அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, பா.ஜ.மார்ச் 17 அன்று சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மல்லிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஊழல் நிறைந்த திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் பெருமளவில் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

venugopal s
மார் 14, 2025 13:12

அமலாக்கத்துறை நடவடிக்கைகள் அண்ணாமலையின் தி மு க ஃபைல்ஸ் என்னும் நகைச்சுவை படம் பார்ப்பது போல் தமாஷாக உள்ளது. நன்றாக பொழுது போகின்றது!


Ramaswamy Jayaraman
மார் 14, 2025 11:54

கெஜ்ரிவால் இன்னும் சிக்கவில்லை. மாபெரும் சாராய ஊழல் மன்னன்.


orange தமிழன்
மார் 14, 2025 08:25

இந்த கொள்ளை பணம் அனைத்தும் ஏழை எளிய மக்களை சுரண்டி எடுத்தது..இதை செய்தவர்களின் குடும்பம் நாசமாகி அழியட்டும்.. மக்களே இன்னுமா இந்த அரசாங்கம் நமக்கு வேண்டும்??....சிந்தித்து வாக்களியுங்கள்......


V RAMASWAMY
மார் 14, 2025 07:53

நாங்கள் லஞ்ச் டின்னெரெல்லாம் பார்த்திருக்கோம். இதெல்லாம் சும்மா ஒரு வெத்திலை பாக்கு மாதிரி ஜுஜுபி.


N Sasikumar Yadhav
மார் 14, 2025 05:54

கண்டுபிடிக்கப்பட்டது பிசாத்து 1000 கோடி ரூபாய் . ஆனால் கண்டுபிடிக்காமல் கோட்டைவிட்டது லட்சக்கணக்கான கோடிகள் . விஞ்ஞானரீதியாக திருடி PHD டிகிரி வாங்கியவர்கள் திருட்டு திராவிட மாடல் கட்சியினர் . இந்த 1000 கோடி மட்டும் எப்படி சிக்கியது என்பதை கண்டுபிடிக்க அமிச்சர் ரகுபேதி தலிமையில் குழு அமைத்து திராவிட மாடல் தலிவரு உத்தரவிட்டிருக்கிறாராம்


J.V. Iyer
மார் 14, 2025 04:32

இதுவரை கண்டுபிடித்த ஊழல்களின் முடிவு என்னவாயிற்று? எவ்வளவு பேருக்கு தண்டனை வாங்கிக்கொடுத்தீர்கள்? எவ்வளவு பணம் மீட்டீர்கள்? 2G ஊழல் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தபோது ஏன் கோட்டைவிட்டீர்கள்? பிறகு உங்கள்மீது எப்படி நம்பகத்தன்மை வரும்? உண்மையாக செயல்படுங்கள். கடைசிவரை போராடி தண்டனை வாங்கிக்கூடுத்து, இழந்த பணத்தை மீட்டால் உங்கள்மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.


Iyer
மார் 14, 2025 07:22

இதுவரை எல்லா ஊழல் வழக்குகளிலும், மோதி அரசு குற்றப்பத்திரிகை CHARGE SHEET தாக்கல் செய்துவிட்டது. அதன்பிறகு மொத்த வழக்கும் நீதித்துறையின் கையில். இந்தியாவின் நீதித்துறை சோம்பேறித்தனம் & ஊழல் என்ற இரு பெரும் வ்யாதிகளால் பீடிக்கப்பட்டுள்ளது. மோதி அவ்வளவு எளிதில் நீதித்துறையில் கைவைத்துவிடமுடியாது. ஆனால் மோதி நீதித்துறையையும் சீர்திருத்த தீவிர முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்.


தமிழன்
மார் 14, 2025 01:20

இது காலம்காலமாக நடந்துவரும் ஊழல் 1000 கோடி என்பது குறைவு பல லட்சம் கோடி இருக்கும் ஏனென்றால் இது திருட்டு முன்னேற்ற கழகம் மட்டுமே செய்யவில்லை அனைத்து திருட்டு முன்னேற்ற கழகத்திற்கும் இதில் பங்கு உள்ளது 2ம் திருட்டு களவாணிகள்


C.SRIRAM
மார் 14, 2025 00:14

அதெல்லாம் சரி . எப்போது தண்டனை கிடைக்கும் . எப்போது கொள்ளை அடித்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படும் . இந்த அமைப்புகளுக்கெல்லாம் குறிப்பிட்ட நேர வரைமுறை கிடையாதா ?. மக்களுக்கு நம்பிக்கை வர இவையெல்லாம் கட்டாயம்


Karthik
மார் 13, 2025 23:50

ED நல்லா ஆடிட்டிங் பண்ணி அமௌன்ட்- அ கம்மியா காமிக்குது


மதிவதனன்
மார் 13, 2025 23:09

சிரிப்பு தான் நேற்று வரை 100000 கோடி என்று திட்டமிட்ட கூட்டம் இப்போ 999 கோடி அதாவது 1000 கோடி என்று சுருங்கி விட்டது, சரி அந்த 1000 கோடி எங்கு போனது, சரி இது ADMK காலத்தில் நடக்கவில்லையா என்கிற விவரம் எல்லாம் சொல்லணும் இல்லை, அப்போ தங்கமணி அடிக்கடி டெல்லி சென்று ப்யூஸ் கோயல் சந்திப்பு மாதம் ஒரு முறை இதற்கு த்தானோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை