உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் உரையை திட்டமிட்டே முடக்கும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

கவர்னர் உரையை திட்டமிட்டே முடக்கும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'உரையை கவர்னர் புறக்கணித்து செல்லவில்லை. திட்டமிட்டு, கவர்னர் உரை நிகழ்த்தக் கூடாது என்பதற்காக இதுபோன்று செய்துள்ளார்கள்' என்று எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டியுள்ளார். அண்ணா பல்கலை சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் அப்பாவு உத்தரவுப்படி குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். யார் அந்த சார் என்ற சட்டையை அணிந்தபடி வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், பதாகைகளுடன் சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dd9sou4x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர், செய்தியாளர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: கஞ்சா போதையினால் இன்று இளம் வயதினர் கடுமையாக பாதிக்கின்றனர். இந்த கஞ்சா போதையினால் தான் சிறுமிகள், பெண்கள், வயதான பாட்டிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இது மிக மிகவும் கேவலமானது, வெட்கக்கேடானது. இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், கவர்னர் உரை மாறிப்போய், சபாநாயகர் உரையாக மாறி விட்டது. இந்த உரையானது பார்ப்பதற்கு காற்றடித்த பலூனைப் போல் பெரிதாக இருக்கிறதே தவிர, உள்ளே ஏதும் இல்லை. இந்த உரையில் தி.மு.க., அரசு சுய விளம்பரத்தை தேடிக் கொள்கிறது. அண்ணா பல்கலை சம்பவம் போன்று இனியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், நாங்கள் பதாகைகளை எடுத்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். யார் அந்த சார், ஏன் இந்த அரசு பதற்றப்படுகிறது. யார் அந்த சார் என்று கேட்டால், இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. இன்றைக்கு பாலியல் வன்கொடுமைக்கு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி, தண்டனைப் பெற்றுத் தர வேண்டும் என்பது தான் இந்த அரசின் கடமை. ஆனால், யாரையோ காப்பாற்ற இந்த அரசு முயற்சிக்கிறது என்பது தான் மக்களின் சந்தேகம். அதனால் தான், ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலேயே யார் அந்த சார் என்று கேட்கும் அளவுக்கு மக்களின் குரல் ஒலித்துக் கொண்டு வருகிறது. உரையை கவர்னர் புறக்கணித்து செல்லவில்லை. திட்டமிட்டு, கவர்னர் உரை நிகழ்த்தக் கூடாது என்பதற்காக இதுபோன்று செய்துள்ளார்கள். தேசிய கீதம் இசைக்கப்படுவதில், வழக்கமான நடைமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க., அரசின் அவலங்களை கவர்னரிடம் மனு கொடுத்தோம். அதன் மீதே இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்ணா பல்கலை மாணவி வழக்கை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணையை எடுக்கவில்லை. அ.தி.மு.க., பெண் நிர்வாகி தாக்கல் செய்த ரிட் மனுவின் காரணமாக, குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி தான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இந்த அரசை நம்பி பலன் இல்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

KumaR
ஜன 06, 2025 15:48

இனிமேல் கவர்னர் அறிக்கையை அவரே எழுதி வந்து வாசிக்குற மாதிரி மத்திய அரசு மாற்றம் கொண்டு வரணும்.. மாநில அரசு அவன் இஷ்டத்துக்கு பொய் சொல்லுற அறிக்கையை கவர்னர் உரை னு சொல்ல கூடாது.. கட்சி அலுவலகத்துல வசிக்குற பொய் பித்தலாட்ட அறிக்கையை சட்டசபைல வாசிச்சு சபை கண்ணியம் கேட்டு போக கூடாது..


Apposthalan samlin
ஜன 06, 2025 18:07

கவர்னர் எதற்கு தேவையே இல்லை மத்திய அரசு சட்ட திருத்தும் கொண்டு வர வேண்டும்


முருகன்
ஜன 06, 2025 19:13

அப்படியே கவர்னர் பதவிக்கு தேர்தல் நடந்த வேண்டும் என சொல்லவும்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 15:16

ஆளுநர் வந்ததும், போலீஸ் band தேசிய கீதம் தான் வாசிக்கப்பட்டது. அப்புறம் என்ன அவமதிப்பு??


பேசும் தமிழன்
ஜன 06, 2025 19:08

வைகுண்டம்..... 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு... இதே கருத்தை போட்டு... எத்தனை இடங்களில் முட்டு கொடுப்பீர்கள் ???


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
ஜன 06, 2025 14:01

கோடநாடு எஸ்டேட்டுல சிசிடிவியை ஆஃப் செய்ய சொன்ன அந்த சார் யாரு? APPOLLO HOSPITAL ல சிசிடிவியை ஆஃப் செய்ய சொன்ன அந்த சார் யாரு?


பேசும் தமிழன்
ஜன 06, 2025 19:11

யார் அந்த சார்.... இவர்கள் பதற்றப்படுவதை பார்த்தால் .... ஏதோ பெரிய புள்ளி ....அந்த சாராக இருப்பார் போல் தெரிகிறது.


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
ஜன 06, 2025 12:30

இவன் எடப்பாடி ஆட்சிக் காலத்தில் இருந்தே சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதை மறக்க வேண்டாம். துப்பாக்கி வைத்து தொழில் அதிபரை மிரட்டிய வழக்கில் கைதான பிராடு இவர். யாரு அந்த சார் என்று எடப்பாடி போடும் நாடகத்திற்கு அளவே இல்லையா??


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
ஜன 06, 2025 12:28

குறிப்பாக, படிக்கவும், வேலை பார்க்கவும், வெளியூரில் இருந்து வரும் பெண்கள், ஆண் நண்பர்களை, நம்பி பாதுகாப்பில்லாத இடங்களில், தேவை இல்லாத நேரத்தில் தனியாக, ஆபத்துக்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது. தற்காப்பு கலைகளை கற்று கொள்ளுதல், பெப்பர் ஸ்பிரே கைவசம் வைத்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கம், கொஞ்சம் நல்லபழக்கங்கள், ஆபாசம் இல்லாத உடை என்று தமிழப்பெண்களின் கலாசாரத்தையு ம் பின்பற்றினால் நல்லது.


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
ஜன 06, 2025 12:26

சட்டப் பேரவைக்கு உள்ளே சென்று யார் அந்த சார் என்று கேள்வி கேட்க தைரியம் இல்லாத எடப்பாடி பழனிச்சாமி.....வழக்கம் போல பம்மி விட்டார். யார் அந்த கொடநாடு கொள்ளையன் என்று ஃபிளாஷ் நியூஸ் வருமா?? .எல்லாமே நாடகம் தான்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 12:18

கவர்னர் உரையை முடக்குவது என்றால் என்ன என்றே தெரியாமல் உளறுகிறார். கவர்னர் உரையைப் படிக்கும் போது, கோஷம் போடறது, உரையின் காப்பியை கிழித்து போடுவது - என்று ஏதாவது செய்வதற்கு பெயர் தான் முடக்குவது. இங்கே தான் அந்த ஆள் உரையைப் படிக்கவே இல்லையே யாரு, என்னத்த முடக்கினாங்க?? சும்மா லேகியம் வித்துக்கிட்டு.....


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
ஜன 06, 2025 12:18

உண்மையில் தவிழ்ந்த பாடி வீரர் என்றால் இந்நேரம் அந்த சார் யார் என்று துருவி விசாரித்து வெளியே சொல்லி இருக்கவேண்டாமா


vijai
ஜன 06, 2025 12:51

யாரு சார் அந்த சார்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 06, 2025 17:27

டேய் ........ நீயிதானே அந்த சார் ????


Samy Chinnathambi
ஜன 06, 2025 12:17

யார் அந்த சார்?


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 12:15

யாரு பதட்டப் படுகிறார்கள்? நீங்கள் தான் நாலு நாளா, யாரு அந்த சார் னு கூவிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போலவே பொழப்பத்த சில கட்சிகளும் கூவுகின்றன. எப்படி ஒரு கிரிமினல் சொன்ன வார்த்தை உண்மை என்று நம்புகிறீர்கள்? அவன் என்ன அரிச்சந்திரனா? உண்மை தான் பேசியிருப்பானா??


KumaR
ஜன 06, 2025 15:42

போன ஆட்சில உங்க துண்டு சீட்டு பொழப்பு இல்லாம தான் எதுக்கு எடுத்தாலும் போராட்டம் பண்ணுனரா.. அரசியல் பண்ணாம அவியல் ல பண்ணுவாங்க னு சொல்லும் போது மட்டும் அவர்க்கும் அவரோட கொத்தடிமைக்கும் இனிச்சுதோ.. இப்ப மட்டும் கசக்குதா.. பொழப்பு இல்லாம தான் சட்டசபைல இருந்து சட்டையை கிழிச்சிட்டு வந்தாரு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை