உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு; ஜனநாயக படுகொலை என இ.பி.எஸ்., காட்டம்

சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு; ஜனநாயக படுகொலை என இ.பி.எஸ்., காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சட்டசபையில், இன்றைய தினம் சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்டதை ஜனநாயக படுகொலையாக தான் பார்க்கிறோம்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறி, சட்டசபையில் விவாதம் நடத்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: மானிய கோரிக்கை விவாதத்தில் பேசுபவர்கள் பெயரை எதிர்க்கட்சியிடம் கேட்டு உள்ளோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aaaefzwh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீங்கள் 2 பேர் பெயரை கொடுத்துள்ளீர்கள். அ.தி.மு.க., உறுப்பினர்கள் 2 பேர் இன்று விவாதத்தில் பேச இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு அனுமதி கொடுக்க முடியாது என தெரிவித்தார்.

வெளிநடப்பு

சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மக்கள் பிரச்னையை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சியினர் பேச அனுமதி கொடுக்க முடியாது என திட்டவட்டமாக சபாநாயகர் மறுத்துவிட்டார். டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் அறிக்கை குறித்து தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும். டாஸ்மாக்கில் நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி ஊழல் நடக்கிறது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்வதால், ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடக்கிறது. மக்களுடைய பிரச்னையை பேசுவதற்கு தான் சட்டசபை.

ஜனநாயக படுகொலை

பிரதான எதிர்க்கட்சியான நாங்கள், மக்கள் பிரச்னை, நாட்டில் நடக்கும் ஊழல் குறித்து சட்டசபையில் முறையாக சொல்வது எங்களுடைய கடமை. இதற்கு பதில் சொல்வது அரசின் கடமை. இன்றைய தினம் சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்டதை ஜனநாயக படுகொலையாக தான் பார்க்கிறோம். சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி கொடுக்கவில்லை. துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, 10 நிமிடத்தில் எப்படி பேசி முடிக்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''பா.ம.க., உறுப்பினர்கள் கூடத்தான் என்னை சந்தித்துப் பேசுகிறார்கள்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Vasan
ஏப் 22, 2025 20:52

Yes, what Thiru. Edappadi Palanisami Ayya says is absolutely true. When ADMK was in power, the then speakers never refused chance for the opposite party members to raise their question.


Jawaharlu Naidu
ஏப் 22, 2025 19:39

பாராளுமன்றத்தில் நடப்பது என்ன வகை கொலை முன்னாள் முதல்வரே...,


Kovandakurichy Govindaraj
ஏப் 22, 2025 15:55

பேச வாய்ப்பு வழங்கி இருந்தால் அப்படியே அறுத்து தள்ளி விட்டு தான் மறுவேலை பார்த்து இருப்பார் கூவத்தூர் கோமாளி


P. SRINIVASAN
ஏப் 22, 2025 14:27

அப்படியே வாய்ப்பு தந்தாலும் இவர் கிகித்துவிடுவார்.. அட போங்க பாஸ். நீங்க வெறும் புஸ்ஸ்ஸ் வானம்


Kjp
ஏப் 22, 2025 14:04

இப்படியே தேர்தல் வரை கனவு காணுங்கள்.ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்குகளையும் பாஜக வாக்குகளையும் கூட்டினால் பதினேழு பாராளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கும்.திமுகவின் வாக்கு சதவீதம் மூன்று சதவீதம் குறைந்து விட்டது.அதனால்தான் அதிமுக பிஜேபி கூட்டணி வைத்தவுடன் திமுகவினர் புலம்ப ஆரம்பித்து விட்டனர்


Barakat Ali
ஏப் 22, 2025 13:53

சட்டசபையில் முதல்வரைப் புகழ்ந்து அதிமுக எம் எல் ஏ க்களும் பேசணும், இல்ல பாடணும்.. அதுவும் ஆளுங்கட்சி எம் எல் ஏ க்கள் கூடக் கூசும் அளவுக்குப் பாடணும்.. அப்பத்தான் சபா மேனேஜர் அனுமதி கொடுப்பார் ...


GMM
ஏப் 22, 2025 13:41

டாஸ்மாக் வழக்கு நிலுவை. பிஜேபி மாநில தலைவர் எடப்பாடியை சந்தித்து பேசுவதும் பாட்டாளி உறுப்பினர்கள் பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு. மிக ஆணவதில் பேச முயற்சி. கோவை தவிர எங்கும் எடப்பாடி செல்வாக்கு இருக்காது. அண்ணா திமுக மாநில, தேசிய தனி செல்வாக்கு இல்லை. செங்கோட்டையன் பொறுப்புக்கு, கூட்டணி இணைப்பிற்கு தகுதி பெற்று விடுவார். ?


Oviya Vijay
ஏப் 22, 2025 13:21

2026 எலெக்ஷன் ரிசல்ட் வந்ததும் சட்டசபைல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு பத்து பேர் கூட இருக்க மாட்டீங்களே. அப்போ இந்த மாதிரி வெளிநடப்பு பண்ண வேண்டிய அவசியம் கூட இருக்காது. உங்களுக்கு ஜாலி தான். வீட்டுல உக்காந்துகிட்டே சட்டசபை நிகழ்ச்சிகள பாப்கார்ன் கொறிச்சுகிட்டே டிவியில பார்க்கலாம். வாழ்த்துக்கள்...


Venkatesan Srinivasan
ஏப் 22, 2025 15:55

எப்படி? செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது ஒரு சில எதிர்கட்சி உறுப்பினர் அவை வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டு விட்டு வீட்டிலிருந்தே சபை நடஙவடிக்கைகளை வேடிக்கை பார்த்தது போலா? ஜெயலலிதா அவர்கள் கூட அந்த உறுப்பினரை கேள்வி ஏதும் கேட்பதாக இருந்தால் அவையில் வந்து கேட்கவும் வெளியே இருந்து கொண்டு அறிக்கை விடுவதை தவிர்க்கவும் வலியுறுத்தினார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை