உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசின் அலட்சியத்தால் அணிவகுப்பு ஊர்தி இடம்பெறவில்லை; இ.பி.எஸ். குற்றச்சாட்டு

தமிழக அரசின் அலட்சியத்தால் அணிவகுப்பு ஊர்தி இடம்பெறவில்லை; இ.பி.எஸ். குற்றச்சாட்டு

சென்னை; குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்தி இடம்பெறாததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அ.தி.மு.க., ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.ஆனால் விடியா தி.மு.க., அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன். தமிழக அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ