உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க., நாடகம் வெட்ட வெளிச்சம்: இ.பி.எஸ்.,

டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க., நாடகம் வெட்ட வெளிச்சம்: இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், தி.மு.க., அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; 03.10.2023 அன்று தி.மு.க., அரசின் நீர்வளத்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல், மாறாக, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடும் உரிமை மாநில அரசுக்கே வழங்கவேண்டும் என கோரியுள்ளதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு நாயக்கர்பட்டி சுரங்கத்திற்கான நில தரவுகளை அனுப்பிய தி.மு.க., அரசு, ஏலம் நடத்த எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், '2024 பிப்ரவரியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் தொடங்கியது முதல் 07.11.2024 அன்று ஏல முடிவு அறிவிக்கும் வரை மாநில அரசிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை' என்று மீண்டும் ஒரு முறை மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு இடைப்பட்ட 10 மாதங்களில் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? இதைத் தான் சட்டமன்றத்திலும், ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து நான் சுட்டிக்காட்டி '10 மாதங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அரசாங்கம் தானே நடத்துறீங்க?' என்று விடியா தி.மு.க., அரசை நோக்கி கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால், இதுவரை எந்த பதிலையும் சொல்லாமல், சட்டமன்றத்தில் ஆ, ஊ என்று அமைச்சர் பதற்றத்தில் பேசியும் ,முதல்வர் மடைமாற்ற அரசியலும் மட்டுமே செய்து வந்தனர். தூங்குபவர்களை எழுப்பலாம்; கும்பகர்ணன் போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது. உண்மை மீண்டும் அம்பலப்பட்டு இருக்கிறது. மேலூர் மக்களுக்கு தி.மு.க., அரசு இழைத்துள்ள இந்த மாபெரும் துரோகத்திற்கு எனது கடும் கண்டனம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

PARTHASARATHI J S
டிச 26, 2024 07:19

அறிவாலய அரசியல்வாதிகள் தங்களது வார்த்தை ஜாலத்தால் மக்களை திரும்ப திரும்ப ஏமாற்றுகின்றனர். இவர்களது கட்சிக்குள்ளேயே குடுமிப்பிடி சண்டை வரும். அதனால் எவ்வளவு நல்லவர்களாக வேட்பாளர்கள் இருந்தாலும் 26 தேர்தலில் திமுகவை புறக்கணிக்கவும். இவர்களால் எந்த நல்லதும் நடக்காது. ஸ்டாலின் அரசியல் ஆலோசகர்கள் சரியில்லை. மிகமிக மோசமான ஆட்சி.


chandrasekaran,k.i.
டிச 25, 2024 21:04

திராவிட அரசியல் என்பது பொய் சொல்வதுதன்


T.sthivinayagam
டிச 25, 2024 18:50

அம்பு எய்த பாஜகாவை தட்டி கேட்க வேண்டியதை விட்டு விட்டு தேவையில்லாத்தை பேசி என்ன பிரயோஜனம்


என்றும் இந்தியன்
டிச 25, 2024 18:28

டங்ஸ்டன் வேண்டாம் தாமிரம் sterlite வேண்டாம் என்றால் டாஸ்மாக்கினாட்டில் மின்சார விளக்குக்கு பதிலாக அகல் விளக்கு தான் உபயோகிக்க வேண்டும் வெளிச்சத்திற்காக, பிரயாணத்திற்கு மாட்டு வண்டி குதிரை வண்டி தான் உபயோகிக்க வேண்டும் ......என்ன திருட்டு திராவிட அறிவிலி மடியலரசே ஓகேயா


karutthu kandhasamy
டிச 25, 2024 16:57

மிஸ்டர் சங்கர நாராயணன் உங்கள் வீட்டிற்கு ஆட்டோ வந்தாலும் வரலாம் அடக்கி வாசியுங்கள் உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்


raja
டிச 25, 2024 15:54

இவனுவிலுக்கு இதே போலப்பா போச்சு.. இப்படித்தான் தான் திருடியதை மறைக்க கட்டுஸ் கட்ச்ச தீவு விசயத்தில் தமிழக மீனவர்களுக்கு த்ரோகம் இழைத்தது இப்போ அது என்னவோ பிஜேபி குற்றம் செய்தது போலவும்...காவேரி முல்லை பெரியாறு அணைகள் மற்றும் நீர் பங்கீட்டில் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த தையும்....நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் கூட்டணி யில் இருத்த திமுகவின் அமைச்சர் என்பதை மறைத்து அதில் விலக்கு வாங்கி தந்த செல்வி ஜெயலலிதாவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி தமிழகத்திலும் நீட் தேர்வு வேண்டும் என்று வெற்றி பெற்று கொண்டு வந்தது ஊழலின் கிங் பின் என்று உச்ச நீதி மன்றத்தால் அழைக்கப்பட்ட ப சி யின் மனைவி என்பதை மறைத்து பிஜேபி யால் தான் வந்தது என்றும் இப்போ இந்த டங்ஸ்டன் விசயத்தில் இவனுவிலுக்கு ஒண்ணுமே தெரியாது போலவும் பிஜேபி தான் கொண்டு வருகிறது என்று கூப்பாடு போடுவதை டாஸ்மாக் அடிமைகள் வேண்டுமானால் நம்பலாம்... என்னை போன்ற உண்மை தமிழன், தமிழகம் சிறக்க வேண்டும் என்று எண்னும் தமிழன் ஒருபோதும் இந்த திருட்டு திராவிடர்களை கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்தை நம்ப மாட்டான்...


Saai Sundharamurthy AVK
டிச 25, 2024 14:11

இங்கு ஊழல், கமிஷன், கொள்ளை என்று அடித்து விட்டு, சீனாவில் கொண்டு போய் திமுக - காங்கிரஸ் கட்சிகள் போட்ட முதலீடுகளை அந்த நாடு தற்போது முடக்கி விட்டது. இதற்கு காரணம் மத்திய மோடி அரசு என்று நினைக்கிறது திமுக !! அதனால் ஏற்பட்ட காண்டு தான் இதெல்லாம்....!அதானியை வைத்து பார்லிமெண்ட்டில் ரகளை செய்தவர்கள் பிறகு மடை மாற்றி அம்பேத்காரை இழுத்து விட்டு போராட்டம், கூச்சல், குழப்பம், பாஜக எம்.பி மீது தாக்குதல் போன்றவைகளை செய்ததும் அதன் காரணமாகத் தான்!!! இப்போது சீனா மீது உள்ள கோபத்தினால், மெல்ல மெல்ல ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என்கிற போராட்டத்தை மறைமுகமாக துவக்கியிருக் கிறார்கள்.....!


திகழ்ஓவியன்
டிச 25, 2024 13:32

அப்போ தம்பி துறை பார்லிமென்ட் ல் பேசியது ஆதரித்தது உண்மையில்லையா


ஆரூர் ரங்
டிச 25, 2024 13:40

பங்காளிக்கு உதவும் வகையில் பேசக்கூடாதா? ஆனா கனிமவளம்ன்னா திராவிஷ ஆட்களுக்கு எச்சில்ஊறுமே.


sankaranarayanan
டிச 25, 2024 13:21

டங்ஸ்டன் எடுக்க சுரங்கம் வேண்டாம் எட்டுவழிச்சாலை அமைக்க வேண்டாம் மித்தேன் எடுக்க வேண்டாம் பெட்ரோல் எடுக்க வேண்டாம் நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் வேண்டாம் கப்பல்கட்டும் தொழில் விரிவாக்கம் வேண்டாம் காப்பர் தொழிற்சாலை விரிவாக்கம் வேண்டாம் எண்ணூரு போர்டு விரிவாக்கம் வேண்டாம் அனல் மின்சாரம் விரிவாக்கம் வேண்டாம் மும்மொழி கொள்கை வேண்டாம் ஹிந்தி வேண்டாம் மத்திய பள்ளிமுறை வேண்டாம் சாராயத்தொழிற்சாலைகள் விரிவாக்கம் வேண்டும் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரிக்க வேண்டும் சட்டம் ஒழுங்கு சீரழிய வேண்டும் கூலிப்படைகள் நடமாட்டம் அதிகரிக்க வேண்டும் மத்திய கல்வித்தரம் வேண்டாம் அமைச்சர்களைப்பற்றி பேசினால் கைது இன்னும் பல பல இன்னல்கள் இவைகள் தான் திராவிட மாடலின் சிறப்பு அம்சங்கள்


veera
டிச 25, 2024 14:27

சிறப்பான .....அடி பதில்


Kasimani Baskaran
டிச 25, 2024 13:07

மனித வளம் விலைமதிப்பில்லாதது. சாராயம் விற்கிறேன் பேர்வழி என்று அதை முழுவதுமாக நாசம் செய்து விட்டு என்ன வளங்களை பாதுகாத்தாலும் ஒரு பயனும் இல்லை.


திகழ்ஓவியன்
டிச 25, 2024 13:34

உங்களை நினைத்தால் சிப்பு தான் வருது , இந்தியாவில் குடிப்பவர்கள் மாநிலம் 13 இல் உள்ள TN க்கு உள்ள கரிசனம் முதல் பத்து இடங்கள் உள்ள பீசப்பி ஆளும் மாநிலங்கள் மீது வரவில்லையே


raja
டிச 25, 2024 13:57

அட திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற திருட்டு குடும்ப பரம்பரை கொத்தடிமையே தமிழன் தமிழகத்தை பட்ரிதானடா கவலை பட முடியும்..


Kasimani Baskaran
டிச 25, 2024 14:00

ஒரு பக்கம் முதன்மை மாநிலம் என்பது - அடுத்த பக்கம் இப்படி மடை மாற்றி உருட்டுவது... வெட்கமே இல்லையா


புதிய வீடியோ