உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் கொள்முதலில் தவறான தகவல் கூறி ஏமாற்றும் தமிழக அரசு; இபிஎஸ் குற்றச்சாட்டு

நெல் கொள்முதலில் தவறான தகவல் கூறி ஏமாற்றும் தமிழக அரசு; இபிஎஸ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சை: நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. அவர்களுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் போனது என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டினார். தஞ்சை மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் கனமழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா பருவ நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொட்டி வைத்து, விவசாயிகள் பல நாட்களாக காத்து கிடக்கின்றனர். மழையில், நனைந்த மூட்டைகளில் இருந்து, நெல்மணிகள் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தஞ்சை அருகே காட்டூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் பேசிய இபிஎஸ், நானும் ஒரு விவசாயி, எனவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசை வலியுறுத்துவேன் என்று உறுதி அளித்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது; நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக திமுக அரசு அறிவித்து இருந்தது. ஆனால், விவசாயிகளிடம் இதுபற்றி கேட்ட போது வெறும் 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக கூறுகின்றனர். தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. எனவே, விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் இருந்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.காட்டூரைத் தொடர்ந்து, மூர்த்தியம்மாள்புரம் , திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

T.sthivinayagam
அக் 22, 2025 20:06

அதிமுக பத்து ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அமைச்சரே முன்னாள் முதல்வரே நீங்கள் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்களை சீர் செய்தீர்கள் ஒன்றுமே இல்லை அதற்கு பதிலாக வறச்சி நிவாரணம் தரேன் என்று சொல்லும் ஒரே முதல்வர் வேட்பாளர் நீங்கள் தான்.


Thangavel Annadurai
அக் 22, 2025 19:52

என்ன சொன்னாலும் திமுக தான் வரப்போகுது ஏன் தேவையில்லாம டைம் வேஸ்ட் பன்றீங்கோ தோழர்களே.....


Pandianpillai Pandi
அக் 22, 2025 18:21

என்ன தவறான தகவல் ன்னு சொல்லுங்க. மத்திய அரசு கொள்முதல் செய்வதற்கு ஈரப்பதம் 18 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி தரவேண்டும் ன்னு தானே கேட்கிறாங்க. 10 வருடமா விவசாயிகளுக்கு என்ன செய்தீங்க. உங்க ஆட்சியில ஒரு தடவையாவது நேரில் சென்று பார்த்தீங்களா? நீங்க காலில் விழுந்து முதலமைச்சரானதிலிருந்து தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் இந்த காலக்கட்டம் வரை ஏமாற்றம் செய்வதே தொழிலாக கொண்டு விளங்கிவரும் தாங்கள் தி மு க அரசை விமர்சனம் செய்ய கூட தகுதியற்றவர். படம் பார்த்து கதை சொல்வதில் உங்களை மிஞ்ச யாராலும் முடியாது. அ தி மு க என்றாலே அண்டப்புளுகு ஆகாசப்புளுகுதான்.


Kadaparai Mani
அக் 22, 2025 18:15

I appreciate the corrective and supportive action of EPS who is the next CM


duruvasar
அக் 22, 2025 17:09

காஸ்டீயும் ரெடி ஆனவுடன் டெல்டா காரர் வருவார்.


RAMAKRISHNAN NATESAN
அக் 22, 2025 13:41

ஏமாத்துனாதான் அதுக்குப்பேரு திமுக ......


திகழ்ஓவியன்
அக் 22, 2025 13:39

அவருடன் பயணித்தால் பிஜேபி கெதி தான் 4 சீட்


kjpkh
அக் 22, 2025 14:08

கனவுலகில் சஞ்சரிக்காமல் வெளியே உலகத்தில் வந்து சஞ்சரியுங்கள். திமுகவுக்கு மக்கள் மத்தியில் என்ன பேர் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். வரும் சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு ஆனதல்ல என்பதும் புரியும்.


வாய்மையே வெல்லும்
அக் 22, 2025 15:09

திருடன் , திருமிசம் , திருடனுக்கு மற்றும் அவனின் திருமிசத்துக்கு அல்லக்கை குடைபிடித்தல் .. கேட்டால் பாஜக உள்ளே வந்துவிடுவார் என ரீல் சுற்றுவது .. இதுதான் தீக்க ஆட்கள் வெவ்வேரு பெயர்களில் முட்டுக்கொடுத்து இங்கே சபையில் உள்ளார்கள் என்பதை சொல்லித்தான் தெரியவேணுமோ ??


திகழ்ஓவியன்
அக் 22, 2025 18:29

மக்கள் யார் கிட்ட சொன்னார்கள் எதிர்ப்பு என்று , 2024 இல் 40 இல் விரட்டி விரட்டி அடிக்க பட்டதை மறந்து விட்டேர்களா 40/40 உங்களுக்கு சுழியம் , admk 7 இடங்களில் டெபாசிட் காலி


Field Marshal
அக் 22, 2025 13:37

நெல் மற்றும் விளை பொருட்களை சேமிக்க சரியான கட்டமைப்புகள் இல்லை ..மதுவகைகள் அதன் மூலப்பொருட்கள் மழையில் நனைந்ததாக சரித்திரம் இல்லை


திகழ்ஓவியன்
அக் 22, 2025 12:52

இது எல்லா ஆட்சியிலும் நடக்கும், எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது


kjpkh
அக் 22, 2025 14:10

தெரியுது இல்ல. அதிமுக ஆட்சியில் அந்த ஆட்டம் போட்டீர்கள்


V Venkatachalam, Chennai -87
அக் 22, 2025 16:11

திருப்தி படுத்த முடியாது ன்னு சொல்லி சொன்னவிங்க திருப்தி பட்டுக்கலாம். இல்லா கட்டி சட்டையை கிழித்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம்.


திகழ்ஓவியன்
அக் 22, 2025 12:51

விஜய் அவர்களே நல்ல அனுபவம் உள்ள எங்களுடன் இனைந்து தேர்தல் என்கிற பரீட்சை எழுதுவார் என்று எண்ணுகிறேன்


V Venkatachalam, Chennai -87
அக் 22, 2025 13:07

அபஜெக்ஷன் யுவர் ஆனர். மிக நல்ல அனுபவம் உள்ளவர்களை உள்ளடக்கியது எங்கள் திருட்டு தீய முக மட்டுமே. 75 வருஷங்களுக்கு மேலாக எவ்வளவோ இடையூறுகள் மற்றும் இன்னல்களை கடந்து ஆலமரம் போல் வியாபித்து தழைத்து நிற்கிறது. தொண்டர்கள் இல்லாவிட்டாலும் கட்சி இன்னும் 100 வருடங்கள் நிலைத்து நிற்கும்.


kjpkh
அக் 22, 2025 13:12

என்னத்த நீங்க முட்டுக் கொடுத்து சமாளித்தாலும் அது உங்களுக்கான திருப்தி தான். ஆனால் என்ன கணக்கு நீங்கள் போட்டாலும் இந்த தேர்தல் திமுகவுக்கு ஆனதல்ல.


Haja Kuthubdeen
அக் 22, 2025 14:10

நல்ல அனுபம்னா சக்கரைய எறும்பு தின்னுடுச்சு..சாக்க கரையான் திண்ணுடுச்சு அதானே ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை