உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்., நண்பர் இளங்கோவன் கல்லூரியில் ஐ.டி., ரெய்டு!

இ.பி.எஸ்., நண்பர் இளங்கோவன் கல்லூரியில் ஐ.டி., ரெய்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: இ.பி.எஸ்., நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்கு சொந்தமான தனியார் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்.,யின் நெருங்கிய நண்பர் ஆர்.இளங்கோவன். இவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழக மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தவர். தற்போது சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.,செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக திருச்சி முசிறி அருகே கல்லூர் ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று(அக்.,23) இளங்கோவனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையில் ரெய்டு!

கோவையில் உள்ள இளங்கோவனின் உறவினர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து இளங்கோவன் கூறியதாவது: எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை. கல்லூரியில் கடந்த 3 நாட்களாக வருடாந்திர கணக்கு தணிக்கை நடைபெறுகிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 21:44

பாஜக அதிமுகவை ஃபினிஷ் செய்துவிட்டு திமுகவை மிரட்டி கூட்டணி அமைக்கிறது ...


S Regurathi Pandian
அக் 23, 2024 14:52

கல்லூரியின் பெயர் தெரியவில்லையோ


Raghavan
அக் 23, 2024 14:37

யார் காலில் விழுவது என்று டைம் பார்த்துக்கொண்டு இருக்கிறார். கூடியசீக்கிரம் விழுந்துவிடுவார்.


Ramesh Sargam
அக் 23, 2024 13:04

அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஊழல் எப்படி செய்வது என்று ஒரு தணிவகுப்பு நடந்தாலும் வியப்பில்லை.


Ramesh Sargam
அக் 23, 2024 12:47

அரசியலில் உள்ளவர்கள் 99.99 சதவிகிதத்தினர் ஊழல்வாதிகள்தான். ஆகையால் அவர்களை அரசியல்வாதிகள் என்று குறிப்பிடுவதை தவிர்த்து, ஊழல்வாதிகள் என்றே கூறவேண்டும்.


Dhurvesh
அக் 23, 2024 21:26

எஸ் கேடி பில்லா கேடி ரங்காவையும் தானே சொல்லுகிறீர்


ديفيد رافائيل
அக் 23, 2024 12:18

யாருக்கு தெரியும் பினாமி ஆக கூட இருக்கலாம்.


ராஜவேல்,வத்தலக்குண்டு
அக் 23, 2024 12:25

எடப்பாடி உனக்கு இனிமேத்தான் இருக்கு மூக்கணாங்கயிறு இத்தனை நாளா தறிகெட்டு துள்ளிக்கிட்டு இருந்த இந்தா வந்துட்டானுகள்ள அங்க தொட்டு இங்க தொட்டு இப்ப உன் அடிமடியில கையை வைக்க ஆரம்பிக்க போறானுக இனிமே தனி ஆவர்த்தனம் பண்ணுவியா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை