உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்தார் இபிஎஸ்

திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்தார் இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் (சனிக்கிழமை ) சந்தித்தார். அதிமுக - பாஜ கூட்டணி அமைந்ததும் இரு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1mluaje2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இன்றிரவு தூத்துக்குடி வந்தார். பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை அவர் திறந்து வைத்தார். ஆறு வழிச்சாலைகளையும், ரயில் திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழா முடிந்த பிறகு ,தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை, கவர்னர் ரவி, அமைச்சர் நேரு, ஜி.கே.வாசன், துரை வைகோ உள்ளிட்டோர் வரவேற்றனர்.இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில், பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்தார். அவருடன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சந்தித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இபிஎஸ்-ஐ சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து இருவரும் அதிமுக பாஜ கூட்டணியை அறிவித்தனர். இதன் பிறகு பிரதமர் மோடியை இபிஎஸ் சந்திப்பது இதுவேமுதல்முறையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஜூலை 27, 2025 10:53

கடைசி வார்னிங் கொடுத்து விட்டுப் போய் இருப்பார்!


முருகன்
ஜூலை 26, 2025 23:48

நேற்று இவர் பேசியதை கேட்கவும் இன்று முதல் ஆளாக....


Tamilan
ஜூலை 26, 2025 22:58

சில நூறு கோடி திட்டங்களுக்கு ட்ரில்லியன் டாலர் பிரதமர் திறந்துவைக்கவேண்டுமா?. அந்த தெரு கவுன்சிலர் திறந்துவைத்தால் போதாதா?


Anantharaman Srinivasan
ஜூலை 27, 2025 00:21

இன்னும் பத்து மாதத்தில் எலெக்ஷன் வருதே. இதுமாதிரி சாக்கு வைத்து வந்துபோனால் தானே ஓட்டை பிடிக்க முடியும்.


vivek
ஜூலை 27, 2025 05:38

உண்மை...இல்லையென்றால் உன்னை போல திராவிட சொம்புகளுக்கு ரூபாய் இருநூறு, ஓசி பிரியாணி குடுத்தால் போதுமா அனந்து என்ற ஓவியம்


vivek
ஜூலை 27, 2025 05:39

சாதா மருத்துவமனை போதுமே..... அப்போலோதான் வேணுமா


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 27, 2025 06:17

மத்திய அரசை ஒன்றியம் என்று கூறி அவமானப்படுத்துவது மத்திய அரசு எந்த திட்டம் அறிவித்தாலும் அதில் ஸ்டிக்கர் ஒட்டி திட்டத்தை சரிவர அமல் படுத்தாதது மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பது ஒத்துழைப்பு கொடுக்காதது இப்படி நடந்து கொண்டு இப்போது வயிற்றெரிச்சல் படுவது சரியா. இந்தியாவிலேயே முதன் முதலில் பொது மக்களுக்கு ஆன இன்சூரன்ஸ் திட்டம் ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 4 இலட்சம் ரூபாய் என்று கொண்டு வந்தது ஜெயலலிதா. தற்போது உள்ள மத்திய அரசு அதனை இந்தியா முழுவதும் அமல் படுத்தி உள்ளது. தற்போதைய திமுக அரசு இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதியை கொண்டு தனது திட்டம் போல் மாயயை உருவாக்கி நடத்துகிறது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் முடக்கி விட்டது. நியாயமாக பார்த்தால் தமிழக மக்களுக்கு மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டம் மூலமாக 5 இலட்ச ரூபாய் மாநில அரசின் திட்டம் மூலமாக 4 இலட்ச ரூபாய் மொத்தம் 9 இலட்சம் ரூபாய் கிடைக்க வேண்டும். அது போக மூத்த குடிமக்களுக்கு 70 வயது மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தற்போது கொடுக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் தமிழக அரசு தமிழக மூத்த குடிமக்களுக்கு தர மறுக்கிறது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் பணத்தை பெற்று கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டியாகி விட்டது. இது போன்று இன்னும் பலது கூறலாம். எதிலும் ஆரோக்கியமான போட்டி இருக்கலாம். பொறாமை இருக்க கூடாது. பக்கத்து கேரளா மாநிலம் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அரசை கொண்ட மாநிலம். ஆனால் மத்திய அரசின் அனைத்து திட்டங்கள் மூலமாக தனது மாநில மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் அனைத்தும் பெற்று தருகிறது.


vivek
ஜூலை 27, 2025 10:07

அரசு ஆஸ்பத்திரி இருக்கும் போது எதுக்கு அப்போலோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை