உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,

தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் வரும் பிரதமர் மோடியை அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,ம் தனித்தனியே சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சமீப நாட்களாக அ.தி.மு.க., பா.ஜ., இடையே மீண்டும் கூட்டணி அமைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், இ.பி.எஸ்., டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க., எம்.பி.,க்கள் சிலர் அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bxsxa82n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், வரும் 6 ம் தேதி பாம்பன் ரயில் பாலத்திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார். அப்போது இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மறுநாள் இரவு மதுரை விமான நிலையத்தில் பிரதமரை சந்திக்க இ.பி.எஸ்.,க்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,க்கும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

J.Isaac
ஏப் 04, 2025 08:07

குரங்கு, பால் கட்டியை பூனைகளுக்கு பங்கு வைத்த கதையை சின்ன வயதில் படித்தது ஞாபகம் வருகிறது


Oviya Vijay
ஏப் 03, 2025 23:51

பிஜேபி மோடியை வைத்து தமிழகத்தில் எத்தனை ரோடு ஷோ நடத்திக் காட்டியும் ஒன்றும் எடுபடாமல் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்று திமுக கூட்டணி அள்ளியது தமிழகத்தில் திமுக எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதை பிஜேபி ட்ராமா கம்பெனியும் நன்கு அறியும்...


vivek
ஏப் 04, 2025 09:16

எவளோ சொன்னாலும்.....இல்லை


முதல் தமிழன்
ஏப் 03, 2025 22:42

வெட்கம் இல்லையா? கட்சியை அடகு வைக்க யார் உரிமை கொடுத்தது? புரட்சி தலைவர், புரட்சி தலைவியை பார்க்க முன் அனுமதி கேட்டவர்களிடம், நீங்கள் கை ஏந்தலாமா? கொடுத்து சிவந்த கைகளால் கட்சியை வளர்த்த அவர்கள் எங்கே, நீங்கள் எங்கே?


Oviya Vijay
ஏப் 03, 2025 21:17

MGR மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகளால் கட்டமைக்கப் பட்ட கட்சி தரம் தாழ்ந்து போகின்றதே என ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி மொத்த தமிழக மக்களும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டுள்ளனர்...


D.Rajan
ஏப் 03, 2025 20:20

நீங்கள் கூறுவது உண்மையாகலாம்...


அப்பாவி
ஏப் 03, 2025 19:37

பொழப்ப பாக்க வாணாமா?


Sampath Kumar
ஏப் 03, 2025 18:51

இரண்டும் இல்லை அதன் பெயரில் இதுவும் இது பெயரில் அதுவும் என்று போடும் இரட்டை வேடம்


sankaranarayanan
ஏப் 03, 2025 18:46

துணை முதல்வரும் பிரதமரை சந்திக்க உள்ளாராமே எதற்கு? இருவரும் சேர்ந்து கச்சதீவு சென்று வரவா...


மணி
ஏப் 03, 2025 18:25

மிட்டு கட்டை போடுவாண் திமுகவின் ........?


Gopinathan S
ஏப் 03, 2025 17:59

எப்படி இருந்த கட்சியை இப்படி டெல்லியில் விற்று விட்டார்களே.


முக்கிய வீடியோ