உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு தீர்வு; சொல்கிறார் இபிஎஸ்!

பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு தீர்வு; சொல்கிறார் இபிஎஸ்!

திருச்சி: ''விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தோம். பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.திருச்சி விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதாவது: சிபில் ஸ்கோரால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பயிர் கடன் வழங்க சிபில் ஸ்கோர் கேட்கக்கூடாது. விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தோம். பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர்ட் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=glynorfi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பயிர் கடனுக்காக விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் பார்க்கும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயிர் கடன் வழங்குவதில் பழைய நடைமுறையை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு முடிந்து போன விஷயம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. எதுனாலும் நடக்கலாம்.நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும். யூகங்கள் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்தந்த கட்சிகள் அந்த நிலைப்பாட்டின் தான் முடிவு செய்வார்கள். எங்கள் கூட்டணியில் பாஜ உள்ளது. பாஜவில் பல கட்சிகள் இருக்கின்றன. இன்னும் 8 மாதம் காலம் இருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, கூட்டணியில் யார்,யார் இருக்கிறார்கள் என்று பத்திரிகையையும், ஊடகத்தையையும் வைத்து தெளிவாக நான் குறிப்பிடுகிறேன், நன்றி வணக்கம். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
ஜூலை 29, 2025 14:51

இவர் பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததற்கு இது கூட செய்ய மாட்டாரா என்ன?


vivek
ஜூலை 29, 2025 15:17

இப்படிக்கு .....வாழ்நாள் கொத்தடிமை .....இது எப்படி இருக்கு..ஹி.... ஹி....


Perumal Pillai
ஜூலை 29, 2025 13:22

ஒரே நாளில் ஓடியவனுடன் என்ன பேச்சு வேண்டி கிடக்குது . விவஸ்தை இல்லாத அரசியல்வாதிகள்.


mohana sundaram
ஜூலை 29, 2025 13:02

இவன் ஒரு துரோகி. இவனிடம் பிஜேபி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஈ என்றுபல்லை காட்டிக் கொண்டு பேசும் இவனை ஒருக்காலும் நம்ப கூடாது.


V.Mohan
ஜூலை 29, 2025 12:38

விடியல் ₹200 அடிவருடிகள் கருத்து வாந்தியை கண்டு வெறுப்புத்தான் வருகிறது. பிரசுரிக்கப்பட்ட செய்திக்கு அடிப்படையாக உள்ள நிகழ்வுகள் குறித்துதான் கருத்துக்கள் தெரிவிக்கப்பட வேண்டும் வேலை மெனக்கெட்டு எல்லா செய்திகளிலும், பாஜகவையும், அதிமுகவையும் அடிமட்டத்தனமாக, தனிப்பட்ட வெறுப்பு விமரிசனம் செய்வது விடியல் கட்சிக்கு எதிராகத்தான் போகும். ஆட்சிக்கு யாரும் சாசுவத உரிமையாளர் இல்லை என்பதை புரிந்து கொள்வது அறிவுடைமை


Arul Narayanan
ஜூலை 29, 2025 12:32

பதில்களை கேள்விகளோடு சேர்த்து பிரசுரிக்கவும். எதற்காக சம்மந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகின்றனர் என்று நினைக்க தோன்றுகிறது.


Indian
ஜூலை 29, 2025 12:08

ஒன்னும் நடக்க போறதில்லை . கனவு மட்டும் தான் காணனும் ..


ديفيد رافائيل
ஜூலை 29, 2025 12:27

நடக்கப்போறதில்லை அது தெரியும். இந்த விஷயத்தை யாராவது ஒருத்தராவது மத்திய அரசிடம் சொல்லனும். அது தான் முக்கியம்


Pandi Muni
ஜூலை 29, 2025 13:27

இது ஒன்றும் தி.மு.கவின் திருட்டு தேர்தல் அறிக்கை இல்லை


M Ramachandran
ஜூலை 29, 2025 11:50

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் நீங்களும் ஒத்த கருத்துடைய வராக இருக்கீக.


மணி
ஜூலை 29, 2025 11:33

அடுத்த ஆட்சி. இரு இலை


திகழ்ஓவியன்
ஜூலை 29, 2025 11:32

இன்னும் அண்ணாமலை மீது புகார் , அந்த ஆளை பிஜேபி விட்டே துரதுங்க என் கண்ணில் பட கூடாது ன்று சொல்லி இருக்கிறாராம் , பாவம் அண்ணாமலை ங்கு போவார் , இவர் காலை அவர் வார , அவரை காலோடு துரத்த எடப்பாடி இதில் வெற்றி எப்படி


vivek
ஜூலை 29, 2025 12:38

பாவம் திகழ் புலி கர்ஜிக்கிறது....


Pandi Muni
ஜூலை 29, 2025 13:29

கர்ஜிக்கிறதா? ஊளையிடுகிறது


புதிய வீடியோ