உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!

ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!

சென்னை: ''ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த முதல்வருக்கு துளியும் இல்லை'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பா.ம.க., இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11ம் தேதி அன்று பைக்கில் தவறி விழுந்து உயிரிழந்ததாக, தி.மு.க., அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழகத்தை பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம். இதே ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த தி.மு.க., கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன்.https://x.com/EPSTamilNadu/status/1934452806997758206ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை! ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த முதல்வருக்கு துளியும் இல்லை. பா.ம.க., மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்; தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

madhesh varan
ஜூன் 16, 2025 12:03

அடிமை சமூகம் நீங்க என்ன பண்ணுனீங்க ?


S.L.Narasimman
ஜூன் 16, 2025 12:00

நாட்டிற்க்கான எந்த வித பொருளாதார தொழில் முன்னேற்ற திட்டமில்லாமல் வெட்டி வாய்பேச்சில் கடந்த நாலரை வருடங்கள் கழித்த மிக மோசமான அரசு இந்த விடியல் அரசுதான்


madhesh varan
ஜூன் 16, 2025 12:01

அடிமை சமூகம் என்ன பண்ணுனீங்க ? ? காலில் விழுவது, காட்டிகொடுப்பது இதுதானே உமது வேலை,


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 16, 2025 11:02

தமிழக முதல்வர் அவருக்கு தெரிந்ததை செய்கிறார் ..சட்டம் ஓழுங்கை நிர்வகிக்க , மக்களைக் காகாக்க அவருக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் செய்திருப்பார் ... வீணாக அவர்மேல் குற்றம் சொல்லாதீர்கள் ..


P. SRINIVASAN
ஜூன் 16, 2025 11:25

இது மோடிக்கும் பொருந்தும்


Oviya Vijay
ஜூன் 16, 2025 10:56

ஆர்ட்டிஸ்ட் விஜய் இப்போ வன்ம கருத்து சொல்லும் பாரு...


சமீபத்திய செய்தி