உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணிக்கணக்குடன் காத்திருக்கும் கொக்கு; வாழ்த்துச் சொல்லி விஜய்க்கு வலை வீசுவதன் பின்னணி!

கூட்டணிக்கணக்குடன் காத்திருக்கும் கொக்கு; வாழ்த்துச் சொல்லி விஜய்க்கு வலை வீசுவதன் பின்னணி!

சென்னை: நடிகர் விஜயின் கட்சி மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து சிக்னல் கொடுத்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதில் சிக்னலுக்காக காத்திருக்கிறார். 'எல்லாம் எதிர்கால தேர்தல் கூட்டணிக் கணக்கு தான்' என்கின்றனர், கட்சியினர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள இப்போதே அணிகள் தயாராகி வருகின்றன.வெற்றிக்கூட்டணி கை நழுவி விடாமல் இருக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பகீரத பிரயத்தனம் செய்கிறார். அவ்வப்போது முரண்டு பிடிக்கும் வி.சி.க., கம்யூ., கட்சிகளை தாஜா செய்தும், தட்டிக் கொடுத்தும் கூட்டணியை தக்க வைக்க முயற்சிக்கிறார்.அதே வேளையில், எப்படியாவது தி.மு.க., கூட்டணியில் இருந்து சில கட்சிகளை தட்டிக் கொண்டு வந்து விட வேண்டும் என்று இ.பி.எஸ்., கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ளார். அவ்வப்போது வி.சி.க., கம்யூ., காங்கிரஸ் கட்சிகளுக்கு நுால் விட்டுப் பார்க்கிறார். இத்தகைய சூழலில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதுக்கட்சி, தமிழக அரசியலில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.முன்னணி நடிகரான விஜய்க்கு, எல்லாத்தரப்பிலும் ரசிகர்கள் அதிகம். அவரால், இரு முக்கிய கூட்டணிகளுக்கும் சேதாரம் ஏற்படும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.அப்பப்பட்ட சூழலில் வரும் 27ம் தேதி கட்சி மாநாட்டை விஜய் நடத்துகிறார். அதற்கான வேலைகளில் கட்சியினர் பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கும் வேளையில் அரசியல் தலைவர்கள் பலரும் விஜய் மாநாடு பற்றிய ஊடகங்களில் தொடர்ந்து பேசி, கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.பல்வேறு கட்சிகளின் ஸ்டார் பிரமுகர்கள், முக்கிய புள்ளிகள் விஜய் அரசியல் பிரவேசம் பற்றி பேசி இருந்தாலும், நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான இ.பி.எஸ்., பேசி இருப்பது தான் இன்றைய தமிழக அரசியலின் ஹைலைட்டாக மாறி இருக்கிறது.சேலத்தில் அவர் பேட்டி அளிக்கையில் வழக்கமான அரசியல் கேள்விகளுக்கு மத்தியில் நிருபர் ஒருவரிடம் இருந்து நடிகர் விஜயின் த.வெ.க., முதல் மாநாடு பற்றிய கேள்வி எழுகிறது. அதற்கு இ.பி.எஸ்., அளித்த பதில் வருமாறு; திரையுலகில் முன்னணி நடிகராக அவர் விளங்கி வருகிறார். அவருக்கு ஒன்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரும் மக்களுக்கு பொது சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். அவரது முதல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். விஜய் பொதுக்கூட்டத்துக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க., போராட்டங்களுக்கும் தி.மு.க., அரசு அனுமதி மறுத்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் அதிருப்தி உள்ளது. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், தற்போது இடதுசாரிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். 2026ம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க., தலைமையில் பலமான கூட்டணி அமையும்.இவ்வாறு இ.பி.எஸ்., கூறி உள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது அரசியல் களத்தில் அடுத்த கட்டத்துக்கான கூட்டணிக் கணக்குகளை உருவாக்கும் முகாந்திரம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இது குறித்து அவர்கள் கூறும் கருத்துகள் வருமாறு; தமிழகத்தில் 2026ம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இப்போதுள்ள தருணத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பது போல் தெரிகிறது. வெளியில் அப்படி தெரிவது போல் காணப்பட்டாலும் அது எத்தனை நாட்கள் அப்படியே இருக்கும் என்று தெரியவில்லை.விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், ஆட்சி மீது அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை தமக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள இ.பி.எஸ்., நினைக்கிறார். தி.மு.க., கூட்டணியில் அதிருப்தியுடன் இருக்கும் கட்சிகளுக்கு, தாம் ஒரு வாய்ப்பாக இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டும்; அதன் மூலம் அங்கு குழப்பம் ஏற்படும்; அ.தி.மு.க.,வை காட்டி, அந்த கட்சிகள் தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று இ.பி.எஸ்., கணக்குப் போடுகிறார். இப்படி ஒரு பக்கம், தி.மு.க., கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கும் இ.பி.எஸ்., இன்னொரு பக்கம், புதிதாக தொடங்கப்பட்டுள்ள விஜய் கட்சியை அரவணைக்கவும் முயற்சிக்கிறார். 'அந்த கணக்கில் தான், விஜய் நல்லவர், வல்லவர், மாநாட்டுக்கு வாழ்த்துகள் என்பது போல் சொல்லி ஆசை வார்த்தை காட்டுகிறார்'என்கின்றனர் கட்சியினர். தி.மு.க.,வை வீழ்த்த, விஜய், சீமான் உள்ளிட்டோர் தங்கள் கூட்டணியில் இருந்தால் வசதியாக இருக்கும் என்பது இ.பி.எஸ்.,ன் கணக்கு. ஆனால், வாழ்த்து சொல்லி வலை வீசி விட்டு, இ.பி.எஸ்., காத்திருக்கிறார் என்பதை விஜய் புரிந்து கொள்ளாதவர் இல்லை; அதனால் தான் அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.மாநாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டே விஜயின் அரசியல் கணக்கு ஆரம்பமாகும். அதன் பின்னரே எதிர்பாராத காட்சிகள் அரங்கேறலாம்; கொக்கு போல காத்திருக்கும் இ.பி.எஸ்., வலையில் விஜய் சிக்குவாரா, இல்லையா என்பதை மாநாட்டில் விஜய் பேசப்போவதை வைத்து ஓரளவு யூகிக்கலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

T.SRINIVASAN
அக் 26, 2024 05:49

கேவலம். முஸ்லிம்கள் ஓட்டிற்காக பாஜகவை கழட்டி விட்டு தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டார் எடப்பாடி. முஸ்லிம்கள் என்றுமே பிரிவினை வாத திமுகவுக்கு மட்டுமே ஒட்டு மொத்தமாக வாக்களிப்பார்கள் என்று எடப்பாடிக்கு தெரியவில்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 21:23

கமலஹாசன் வாக்குவங்கி இல்லாத ஒரு சோ தா என்று புரிந்துவிட்டதால், விசயி சோசப்பு டீம்காவால் களமிறக்கப்பட்டுள்ளார் ........ அதிமுக வலையில் சிக்க மாட்டார் .........


SIVA
அக் 23, 2024 20:56

விஜய் , சீமான் இவர்களிடம் மட்டும் தான் காசு வாங்காமல் வேலை செய்ய ஆட்கள் உள்ளனர் , சீமானுக்கு அதை பயன்படுத்த தெரியவில்லை , வியாஜ்ஜிய என்ன செய்கின்றார் என்று பார்ப்போம் ....


D.Ambujavalli
அக் 23, 2024 18:36

இந்தப் பழனிச்சாமி தனக்கு யார் எப்போது வேண்டாமென்று தோன்றுகிறதோ அப்போது அவர்களைக் கழற்றி விட்டுவிடுவார் பாஜக வேண்டாமென்று கூட்டணியை உடைத்து லோக்சபா தேர்தலில் முட்டை வாங்கியாயிற்று, விஜய் இன்று மாட்டுவாரா அவர் ஓட்டுக்களை கைப்பற்றிக்கொள்ள எண்ணுகிறார் விஜய் சூதானமாக இருக்க வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 21:24

நீங்கள் சொல்வதை உண்மை என்று வைத்துக்கொண்டாலும் அப்படிச் செய்யாத அரசியல் கட்சி எது ????


raja
அக் 23, 2024 18:28

கொக்கோ மக்கோ, ஆக மொத்தம் விசிலடிச்சான் குஞ்சுகள் ஓட்டும் விடியலுக்கு விழும் பிச்சைக்கும் பங்கம் விழுந்து விட்டது....செத்தாண்டா சேகரு.. அது போதும்...


venugopal s
அக் 23, 2024 18:05

உண்மையில் எதிர்க்கட்சிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களைப் பிரித்து பலவீனப்படுத்த நினைப்பது, தமிழக மக்களை பயமுறுத்தியோ அல்லது முட்டாளாக்கியோ திராவிடக் கட்சிகளுக்கு எதிராக திருப்ப நினைப்பது, புதியவர்களான விஜய் போன்ற கட்சிகளை வளைத்துப் போட்டு தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க நினைப்பது ஈ பி எஸ் அல்ல, பாஜக தான்!


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 21:24

அதானே ....... திமுக செய்து வருவதை பாஜக எப்படி செய்ய நினைக்கலாம் ????


Easwar Kamal
அக் 23, 2024 17:37

விஜய் சூசகம நடந்துக்கணும். இந்த பழனிச்சாமி மற்றும் நம்புனா அம்புட்டுதேன். ஆனானப்பட்ட பிஜேபிகே ஆல்வா கொடுத்த ஆளு. சசிகலா /பன்னீர் கதை எல்லாம் தெரியும்தானே. எப்படியும் உடனே மக்கள் ஏத்திக்கிட்டு ஜெயிக்க வச்சுறமாட்டாங்க. விஜயே கஷ்டப்படுத்தன் ஜெயிக்கநும் இல்லாவிட்டால் கமல் மாதிரி கதை கூட ஏற்படலாம். உங்க கூட்டத்துக்கு சொல்லவே வேண்டாம் எல்லாம் தெரிஞ்சு கால வைக்கணும். இது சினிமா கிடையாது.


Rengaraj
அக் 23, 2024 17:26

தி.மு.கவும் அண்ணா தி.மு.கவும் பங்காளி கட்சிகள் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். திரைமறைவில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். டெண்டர் எடுக்கும் விவகாரங்களில் சண்டையெல்லாம் கிடையாது. வெளியில் தான் சண்டைபோடுவதுபோல் நடித்துக்கொண்டுள்ளனர். ஜெ மறைவுக்கு பிறகு அண்ணா தி மு க வில் என்ன நடந்தது எதனால் இத்தனை கோஷ்டி சண்டை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு இன்றுவரை முன்னாள் அமைச்சர்கள் பேரில் ஒரு வழக்குகூட தாக்கலாகவில்லை பேருக்கு ரைடு போகிறார்கள். ஆனால் பிரச்சாரத்தில் ஊழல் ஊழல் என்று சொல்லி ஸ்டாலின் வோட்டு கேட்டார். அதனால்தான் சொல்கிறேன். பேசாமல் தி.மு.கவும் அண்ணா தி.மு.கவும் ஒன்றாக சேர்ந்துவிடலாம். எடப்பாடி சொல்வதுபோல் பலமான கூட்டணி தான்.


sundarsvpr
அக் 23, 2024 16:58

அரசியலில் சாதுர்யம் தேவை. தற்போது கருணாநிதி ஸ்டாலினிடம் உள்ளது. இவர் ஹிந்துமதத்தின் விரோதியாய் இருந்தாலும் ஆனால் தன கட்சியில் ஹிந்துக்கள் பெருபான்மையாய் உள்ளனர் என்பார். மகன் கிருத்துவ மதத்திற்கு மாறினாலும் இவரின் மனைவி ஹிந்து கலாச்சாரப்படி நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டு ஒவ்வொரு திருக்கோயிலாக சென்று வழிபடுவார். இது ஒரு பக்கம். ஆனால் விஜய்க்கு தைரியம் கிடையாது. இந்த நில உலகில் உள்ள வரை விஜய்க்கு முன்னாள் ஜோசப் சொல்லமாட்டேன் என்று கூற ஆந்திர மாநிலத்தில் ராஜ் மோகன் ரெட்டி ஜெகன் மோகன் ரெட்டி போல். .


krishna
அக் 23, 2024 16:54

EDHAI THINNAL PIYHAM THELIUM ENA EDAPADI ALAIVADHU PARIDHAABAM. BJP KOOTANIYAI MURITHADHU HIMALAYA THAVARU.2024 MP ELECTION ADMK BJP ETC KOOTANI POTTI ITTU IRUNDHAAL 15 MP KIDAITHU IRUPPAR.CENTRAL MINISTER ADMK KIDAITHU IRUKKUM.


முக்கிய வீடியோ