உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேச்சு சுதந்திரத்தில் தலையிடுவதற்கு சமம்: சினிமா விமர்சனத்துக்கு தடை கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட் கருத்து

பேச்சு சுதந்திரத்தில் தலையிடுவதற்கு சமம்: சினிமா விமர்சனத்துக்கு தடை கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ஆன்லைன் சினிமா விமர்சனங்களை தடுப்பது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்கு சமம்,'' என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.புதிதாக வெளியாகும் சினிமா படங்கள் குறித்து 3 நாட்கள் ஆன்லைனில் விமர்சனம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம்(Tamil Film Active Producers Association (TFAPA)) சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், புதிதாக வெளியாகும் படங்கள் குறித்து மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை. இதனால், நேர்மறையான விமர்சனங்களை மட்டும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கக்கூடாது. இதனை தடை செய்வது என்பது, பேச்சு சுதந்திரத்துக்கான உரிமையில் தலையிடுவதற்கு சமம் ஆகும்.இதனை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மனுதாரர்கள் கேட்டுள்ள நிவாரணம் ஏற்க முடியாதது. அதனை நீதிமன்றம் வழங்காது.சினிமா தியேட்டர்களுக்கு சவாலாக ஓடிடி தளங்கள் உருவாகி உள்ளதை தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தோதாக மறந்துவிட்டது போல் தெரிகிறது. புதிய படங்களை வீடுகளில் இருந்து தங்கள் வசதிக்கு ஏற்றபடி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து வருகிறது.நீதிபதிகள் குறித்து எதிர்மறையான விமர்சனம் வைக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சமூக வலைதளங்களில் என்னையும்(நீதிபதி) விமர்சனம் செய்வதை பார்க்கலாம். அனைத்தையும் தடுக்க முடியாது. இன்று யாராலும் எதை குறித்தும் விமர்சனம் செய்ய முடியும். இதனை கட்டுப்படுத்த முடியாது.இங்கு ஒருவரை தடுத்து நிறுத்தினால், மற்றொருவர் வெளிநாட்டில் இருந்து செய்வார். அப்போது என்ன செய்வீர்கள்.தயாரிப்பாளர்கள் கோரிக்கைப்படி உத்தரவு போட்டால், அதனை எப்படி செயல்படுத்துவீர்கள். அமல்படுத்த முடியாத உத்தரவை பிறப்பிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்றைய உலகம் சமூக வலைதளங்களின் பிடியில் உள்ளது. சமூக வலைதளங்களில் விமர்சனத்தில் இருந்து தனி நபர்கள்/ அமைப்புகள்/ எந்த நாடும் தப்பிக்க முடியாது.சமூக வலைதள காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஒரே வழி. மக்கள், படங்களை பார்த்த பிறகே அது குறித்து முடிவு செய்ய வேண்டும். படங்கள் குறித்து மற்றவர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்யக்கூடாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Padmasridharan
ஜூன் 27, 2025 12:59

"பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்கு சமம்".. நன்றாக சொன்னார். ஆனால் காவலர்கள் மக்களை ஒருமையில் பேசி அதட்டி மிரட்டி பேசவிடாமல் செய்வதும் கவனிக்க தக்கது. .


Jagan (Proud Sangi )
ஜூன் 27, 2025 18:38

இந்த ஆளை நம்ப வேண்டாம். கஸ்தூரி பேசிய பொதுவான பேச்சுக்கே சிறையில் தள்ளியவர்.


கண்ணன்
ஜூன் 27, 2025 10:49

நல்ல கதையம்சங்களும் மிகைப் படுத்தப்பட்ட காட்சிகள் இல்லாமலும், ஒரே ஒரு மதப் பழக்கவழக்கங்களை மட்டுமே குறி வைப்பதுமில்லாமலும் படங்கள் எடுக்கப் பட்டால் நல்ல விமர்சனங்கள் தானாகவே வருமே!


சாமானியன்
ஜூன் 27, 2025 07:54

இதெண்னடா சத்யத்திற்கு வந்த சோதனை? போலி விமர்சனங்களால் காழ்ப்புணர்ச்சி நல்ல படங்களுக்கு மக்கள் வராமல் பார்த்துக் கொள்வது அதர்மம். போலி யூடிபர்கள் நல்ல நடிகைகளின் சில மோசமான நடவடிக்கைகளை ஓதிப் பெரிதாக்கி காலி செய்யவில்லையா ? நடிகர் மைக் மோகன் வாழ்க்கையில் வதந்தி விளையாடியதால் தயாரிப்பாளர்கள் அவரை ஒதுக்கினர். இப்படியும் நடக்கின்றது.


Kasimani Baskaran
ஜூன் 27, 2025 04:10

சினிமாத்துறை சர்வாதிகாரி போல செயல்பட நினைப்பது படமெடுப்பது பொது மக்களுக்காக இல்லை என்பதை அறுதியிட்டு காட்டுகிறது.


Jagan (Proud Sangi )
ஜூன் 27, 2025 02:22

இந்த ஆள் தானே கஸ்தூரிக்கு பேச்சுரிமை இல்லை என்று சிறையில் தள்ளியது ??? இப்போ மட்டும் என்ன நியாயவாதி மாதிரி அளந்துக்கிட்டு ??? போய்யா


c.mohanraj raj
ஜூன் 26, 2025 23:14

அவனவன் இஷ்டத்திற்கு எடுப்பான் நாம் மட்டும் விமர்சிக்காமல் இருக்க வேண்டுமா தொலையட்டும் சினிமா


Ramesh Sargam
ஜூன் 26, 2025 22:23

சரியான தீர்ப்பு. சினிமாக்காரர்களுக்கு சரியான ஆப்பு.


theruvasagan
ஜூன் 26, 2025 21:59

எத்தனையோ நபர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் வழக்குகள் பல ஆண்டுகளாக நீதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டு இருக்க ,இந்த சினிமாகாரன்கள் சம்பந்தப்பட்ட வெட்டி வழக்குகளுக்கு நீதிமன்றம் இத்தனை அவசரம் காட்டுவதேன்.


crap
ஜூன் 26, 2025 22:35

ரிட் மனு விசாரணைக்கு வரும் முதல் நாளிலேயே அதில் நீதிபதி முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைக்கலாம். அதனால் மற்ற வழக்குகளை கிடப்பில் போட்டு இதை எடுத்ததாக கருத முடியாது.


Jagan (Proud Sangi )
ஜூன் 27, 2025 02:23

வாய்தா வாங்காம வாதாட சொல்லுங்க நிறைய கேஸ் விரைவில் முடியும். வாய்தா/அப்பீல் வைத்து இழுத்தடிப்பதே வக்கீல்கள் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை