உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி திடீர் மாற்றம்! புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம்

ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி திடீர் மாற்றம்! புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம்

ஈரோடு; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 5ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்துவிட்டது. பா.ஜ., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பிரதான தேர்தல் களத்தில் உள்ளன. மொத்தம் 46 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. தேர்தல் தேதி நெருங்குவதால் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி இருவரும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.இந் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மனீஷ் மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய தேர்தல் அதிகாரியாக ஸ்ரீகாந்த் நேற்று (ஜன.21) இரவு பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சென்னை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர்.முன்னதாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. முதலில் 47 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களில் பத்மாவதி என்ற பெண் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.அவருக்கு கர்நாடகாவில் ஓட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய மற்ற போட்டியாளர்கள் வேட்பு மனுவை ஏற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அதன் காரணமாக முதலில் 47 வேட்பு மனுக்கள் ஏற்பு என்று அறிவிக்கப்பட்டு பின்னர் 46 ஆக மாற்றி அறிவிக்கப்பட்டது.வேட்பு மனு பரிசீலனை, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஆகிய குழப்பங்கள் எதிரொலியாக தேர்தல் அதிகாரி மனீஷ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

M.COM.N.K.K.
ஜன 22, 2025 16:46

தேர்தல் என்று அறிவித்துவிட்டால் அங்கு ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டுவரவேண்டும் அப்போதுதான் தேர்தல் நியாயமாக நடக்கும்.தேர்தல் நடந்து முடிவு அறிவிக்கும் வரை ஜனாதிபதி மேற்பார்வையில் இருக்கவேண்டும் இதுதான் சரியானதாக இருக்கும் ஆனால் இதற்கு எந்த கட்சியும் முயற்சி எடுப்பதில்லை காரணம் தில்லுமுள்ளுக்கு வழியில்லாமல் போய்விடும் அதனால் எந்த கட்சியும் இதை ஆதரிப்பதில்லை.இந்த கருத்தை ஏற்கனவே நான் பதிவுசெய்திருக்கிறேன்


jayvee
ஜன 22, 2025 13:28

மாநில தலைமை தேர்தல் அதிகாரியை உடனே மாற்றவேண்டும்.. இல்லயென்றால் 2026 தேர்தல் நேர்மையாக நடைபெறாது .. மத்தியிலும் சரி மாநிலங்களிலும் சரி பொது தேர்தல் அறிவித்தவுடன் ஆட்சி ஜனாதிபதி மாறும் கவனர்கிளிடம் ஒப்படைக்கப்படவேண்டும் .. இவ்வாறு செய்தால்தான் தேர்தல் நேர்மையாக நடைபெறும் .. இல்லயென்றால் அமெரிக்காவில் நடக்கும் கூத்தை போல, அமெரிக்க ஜனாதிபதி தோற்றபின்னும் இரண்டு மாதங்கள் ஆட்சியில் இருக்கும் பொது பல மோசமான சட்டங்கள் நிறைவேற்றப்படும் ..


Bala
ஜன 22, 2025 14:57

Jayvee உங்கள் கருத்து ஏற்புடையதுதான்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 22, 2025 09:36

இந்த தேர்தல் முடிவு வெளியானபின், பங்களூர் பத்மா கோர்ட்டுக்கு போனா, தேர்தல் முடிவு ரத்தாகும் ஒருவேளை அவங்க வேட்பு மனுவை தள்ளுபடி செய்யறதுக்காகத்தான் கழக தலைமை முன்னாடி ஒருத்தரை தேர்தல் அதிகாரியா அனுப்பினாங்க போல இருக்கு


M Ramachandran
ஜன 22, 2025 09:09

அட்ரா சகைய்ய பயங்கர கவனிப்பு வெட்டு வெட்டிவிட்டார் போல


Ray
ஜன 22, 2025 08:36

அண்ணாமலையின் குசும்பு தோற்கடிக்கப் பட்டு விட்டது


Murugesan
ஜன 22, 2025 13:22

திமுக கொத்தடிமை


Dharmavaan
ஜன 22, 2025 08:34

ஸ்ரீகாந்த் திருட்டு திமுக கொத்தடிமையாக இருப்பார் தில்லு முள்ளு செய்ய வசதியாக இவர் நீயமனம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை