உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (பிப்.,05) காலை 7:00 மணிக்கு துவங்கி மாலையில் நிறைவுபெற்றது. மக்களோடு மக்களாக வரிசையில் நின்று, மாவட்ட கலெக்டர் ராஜகோபால் ஓட்டளித்தார். மாலை 5 மணி நிலவரப்படி 64.02% ஓட்டுப் பதிவாகி உள்ளது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தி.மு.க., வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., பா.ஜ., தேர்தலை புறக்கணித்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o6k33784&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.2,27,237 பேர் ஓட்டளிப்பதற்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சூரம்பட்டி ஓட்டுச்சாவடியில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் ஓட்டளித்தார்.'மக்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்' என தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் அனைத்து வாக்கு சாவடிகளிலும் மக்கள் ஓட்டளித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்படும்.

உ.பி., இடைத்தேர்தல்!

உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதிக்கும் இன்று (பிப்.,05) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கி ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இங்கு மாலை 5மணி நிலவரப்படி 64.02 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kasimani Baskaran
பிப் 05, 2025 22:22

மீதி 35% பணநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். உயரப்பறக்கும் மாநிலம் ஆனால் ஓட்டுப்போட ஆள் இல்லை.


krishna
பிப் 05, 2025 20:27

TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU. KAASU VAANGI KONDU HINDHU VIRODHA DRAVIDA MODEL KUMBALUKKU VOTTU PODUM KEVALANGAL.


மண்ணாந்தை
பிப் 05, 2025 11:28

ஒவ்வொரு மணியும் ஒட்டு பதிவு சதவிகிதம் போடுங்கள். சாவடியில் வாசலில் உள்ள சிசிடிவி யையும் கவனியுங்கள். பத்து, 20, 30 என்று மதியம் 2 மணிவரை இருக்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கெல்லாம் 70, 80 சதவீதம் எட்டிவிடும். வாசலில் உள் சிசிடிவி கேமராவை கவனித்தால் அந்த நேர இடைவெளியில் ஓரிருவர் மட்டுமே வந்திருப்பார்கள். அதுதான் தேர்தல் மேஜிக். தேர்தல் ஃபார்முலா எல்லாம்.


ديفيد رافائيل
பிப் 05, 2025 11:57

CCTV எல்லாரும் check பண்ண மாட்டாங்கன்னனு தைரியத்துல தான் கள்ள ஓட்டு போட்டு கூட கணக்கு காண்பிப்பானுங்க.


ஆரூர் ரங்
பிப் 05, 2025 15:20

அப்போ வாக்குச்சாவடிக்குள் இருக்கும் உங்கள் அபிமான கட்சி பூத் ஏஜெண்ட் தூங்கிக் கொண்டிருந்திருப்பார் அல்லவா? அல்லது விலை போயிருப்பார்?


கல்யாணராமன்
பிப் 05, 2025 16:33

இங்குள்ள போட்டோவை பார்த்தால் சொல்லப்படும் வாக்கு சதவீதம் சரியாகவே இருக்கும் என்று தெரிகிறது.


ديفيد رافائيل
பிப் 05, 2025 20:56

DMK ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்க முக்கிய காரணமே இது தான் கள்ள ஓட்டு போட முடியாது, ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாது.


karthik
பிப் 05, 2025 10:54

200 ருபாய் கும்பல் எல்லாம் வந்து ஓட்டு போடும்.


Ray
பிப் 05, 2025 12:31

தியாகிகளும் வந்து ரொம்ப வலியுறுத்தி கொண்டு வந்த நோட்டா போடலாமே ஓ தேர்தலில் நிற்கவே ஆளில்லையாம் ச்சூ ச்சூ பாவம்னு சொன்னாலே உரிமை மீறலாகிடுமாம்


Kanns
பிப் 05, 2025 10:50

Waste of Time Energy PeoplesMoney for 01 year MLA & As Results already known favouring DMK MegaAlliance As None Cons. Recover Costs from EC Officials& Ruling PartyMen


sundarsvpr
பிப் 05, 2025 09:45

ஆளும் கட்சி வேட்பாளர் ஐம்பது சதவிகிதம் மேல் வாக்குகள் பெற்றால் தேர்ந்துஎடுத்ததாக கருதவேண்டும். இல்லையெனில் அந்த தொகுதியை காலியாய் வைத்துஇருப்பதுதான் சரி. இதுதான் மக்கள் முடிவாய் எடுத்துக்கொள்ளவேண்டும்


Svs Yaadum oore
பிப் 05, 2025 08:34

கோவையில் குண்டு வெடித்தது விடியல் திராவிடனுங்க ஆட்சியில் .... கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றி சொன்னவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...மானமுள்ள தமிழன் இவர்களுக்கு வோட்டு போட மாட்டான்


கல்யாணராமன்
பிப் 05, 2025 16:38

பிறகு 1967ல் இருந்து பக்தி மார்க்கத்தில் உள்ள திமுகவிற்கு ஓட்டு போட வேண்டுமா? அப்படி சொல்லவில்லை என்று சொல்லக்கூடாது. நாதகவுக்கும் ஓட்டு போட கூடாது திமுகவிற்கு ஓட்டு போட கூடாது என்று சொல்லியிருந்தால் பாராட்டலாம்.


பேசும் தமிழன்
பிப் 05, 2025 08:24

ஈரோடு இந்து மக்கள் திமுக கட்சிக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும்.. இந்துக்களுக்கு எதிரான இந்த விடியாத ஆட்சிக்கு ஈரோடு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.


முக்கிய வீடியோ