உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலாவுக்கே சென்றாலும் ஜாதியை கொண்டு செல்வார்கள்: ஐகோர்ட் கருத்து

நிலாவுக்கே சென்றாலும் ஜாதியை கொண்டு செல்வார்கள்: ஐகோர்ட் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' நிலாவுக்கே சென்றாலும் ஜாதியை கொண்டு செல்வார்கள்,'' என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.சங்கம் ஒன்றுக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூறியதாவது: நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் ஜாதியை தூக்கிப் பிடிப்பார்கள். அதனை கைவிட மாட்டார்கள். நிலாவுக்கே சென்றாலும் ஜாதியை கொண்டு செல்வார்கள். படிப்படியாக மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது.ஜாதிகள் இல்லையபடி பாப்பா என படித்த பாடங்களின் அடிப்படையில் நிற்க வேண்டாமா? இந்த விவகாரத்தில் அரசு ஒரு முடிவு எடுத்தால், வரலாறு அதனை நினைவில் கொள்ளும். கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயரை நீக்குவது, ஜாதி சங்கங்கள் பெயரை பதிவு செய்வதில் அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியதுடன், இதில் அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

skrisnagmailcom
மார் 07, 2025 16:36

இது பெரியார் மண் இங்கு சாதி சங்கங்கள்தாம் அரசியலை நிர்ணயம் செய்கின்றன இது பெரியார் மண் ஆணவ கொலைகள் நடப்பதும் இங்குதான் சாதி தலைவர்களின் சிலைகளுக்கு மாலை மரியாதை. அருமை பெரியார் மண்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 07, 2025 09:36

ஆமாம் மூவர் ஆனர். இவர்கள் செவ்வாய் மண்டலத்திற்கு சென்றாலும் ஜாதியை உடன் தூக்கி கொண்டு தான் செல்வார்கள் யுவர் ஆனர். எல்லா இட ஒதுக்கீடுகளும் ஜாதி அடிப்படையில் கோர்ட் உத்தரவு படி தான் தொடர்கின்றது யுவர் ஆனர். ஐம்பது சதவீதம் இட ஒதுக்கீடு என்றால் அதை அறுபத்து எட்டு சதவீதம் அளவிற்கு கொண்டு சென்றது கோர்ட் உத்தரவு படி தான் யுவர் ஆனர். பள்ளிகளில் எல் கே ஜி சேர்க்கும் போது யுவர் ஆனர் முதலில் அப்பா அம்மா பெயர் கேட்பதில்லை யுவர் ஆனர் என்ன ஜாதி என்ன மதம் என்று தான் கேட்கிறார்கள் யுவர் ஆனர். ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு கல்லூரி முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை யுவர் ஆனர் ஜாதி என்ன மதம் என்ன என்று கேட்கிறார்கள் யுவர் ஆனர்.மேல் படிப்பு சென்றாலும் யுவர் ஆனர் மார்க் எல்லாம் இரண்டாம் பட்சம் யுவர் ஆனர் ஜாதி தான் முதல். கல்வி உதவித் தொகை வேண்டுமா உடனே ஜாதி என்ன மதம் என்ன என்று கேட்கிறார்கள் யுவர் ஆனர். சரி வேலைக்கு போலாம்னு யுவர் ஆனர் அப்ளிகேஷன்ஸ் போட்டால் யுவர் ஆனர் அங்கேயும் ஜாதி என்ன மதம் என்ன என்று கேட்டு ஜாதிக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள் யுவர் ஆனர் மார்க் திறமை எல்லாம் இரண்டாம் பட்சம் யுவர் ஆனர். சரி எப்படியோ அப்படிக்கா இப்படிக்கா வேலையில் சேர்ந்தால் யுவர் ஆனர் அங்க தான் கிளைமேக்ஸ் யுவர் ஆனர் அங்கேயும் பிரமோஷன் ஜாதி என்ன மதம் என்ன என்று கேட்கிறார்கள் யுவர் ஆனர். ஜாதி அடிப்படையில் யுவர் ஆனர் ஜூனியர் சீனியர் ஆகி விடுவார் யுவர் ஆனர். அங்க இன்னொரு டிவிஸ்ட் யுவர் ஆனர் ஜூனியர் சீனியர் ஆகும் போது உண்மையான சீனியர் சம்பளம் குறைவாக பெறுவார் அல்லவா யுவர் ஆனர் ஆனால் அப்படி இல்லை யுவர் ஆனர் அந்த சீனியருக்கும் சீனியரை ஓவர் லேப் செய்த ஜூனியருக்கும் ஒரே சம்பளம் போட்டு போஸ்டிங் மட்டும் ஜூனியர் ஆக இருந்து சீனியர் ஆனவருக்கு கொடுத்துருவாங்க யுவர் ஆனர். அப்புறம் அந்த சீனியர் வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாக எப்போ இந்த ஜூனியர் ஆக இருந்தவர் சீனியர் ஆனவர் மாற்றல் ஆகி வெளியே போவார் என்று பார்த்து கொண்டு இருப்பது தான் அந்த சீனியர் வேலை. அதுவரை இந்த ஒரிஜினல் சீனியர் வேலை செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டு ஓய்வு ஊதியம் கேட்டு இன்ன பிற சலுகைகள் கேட்டு மீட்டிங் போட்டு கொண்டு இருப்பார் யுவர் ஆனர். இப்படி இருந்தா எப்படி யுவர் ஆனர் ஜாதியை ஒழிக்க முடியும்.


Muthu Kumar
மார் 06, 2025 23:29

நீதிபதி கூறியது வருத்தம் அளிக்கிறது. நமது அரசியலமைப்பு சட்டமே அவ்வாறுதானே உள்ளது. ஒரு சில சட்டங்களை அரசியல்வாதிகள் அவர்களின் சுய லாபத்திற்காக மாற்றாமல் நீட்டித்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் அரசியல்வாதிகளே காரணம். எல்லாவற்றிற்கும் அவர்கள் அனுமதி கொடுத்து விட்டு, ஜாதிகள் பெயரில், சோசியல் மீடியா சுதந்திரம் போன்ற பல அப்புறம் கிடந்து மக்கள் மீது பழி போடுவது சரி இல்லை. அது போல் கோர்ட்களும் விரைந்து தீர்மானம் எடுக்க வேண்டும். தவறு செய்பவர்கள் பயப்படும் வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும். மொத்தத்தில் அரசியல் & ஜனநாயகம் இதுவே நமது சாபக்கேடு.


sampath, k
மார் 06, 2025 21:55

Courts may consider prevailing conditions of the Country before commending his own views


கோபால்
மார் 06, 2025 21:47

எத்தனை வருஷம் தான் ஜாதி ஒதுக்கீடு இருக்கும் ???? நாலாவது, அஞ்சாவது தலைமுறை எல்லாம்‌ ஜாதி ஒதிக்கெட்ல படிச்சிட்டு அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று இருக்காங்க. ஆயிரம் வருஷத்துக்கு அப்புறமா இருக்கும் சாதி ஒதுக்கீடு. நீங்க தான் ஜாதி வெச்சு பிழைக்கிறீங்க...


Kasimani Baskaran
மார் 06, 2025 21:28

பரம்பரை பரம்பரையாக இட ஒதுக்கீடும் வேண்டும் - ஆனால் ஜாதி வேறுபாடு இருக்கக்கூடாது. சங்கம் கூடாது. இது ஒரு வகை அடக்குமுறை...


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 06, 2025 21:09

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் கூட சொல்லவில்லையே


Ranganathan
மார் 06, 2025 20:25

அருமையான பதிவு


Venkataraman
மார் 06, 2025 20:18

இதை நீதிபதிதான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. Bar Council வக்கீல்களே சொல்கிறார்கள் சாதி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று. சாதிகளை யாராலும் எப்போதும் ஒழிக்க முடியாது என்று தெரிவதால்தான் அவ்வாறு இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்.


Anbuselvan
மார் 06, 2025 20:18

நீதி துறைதான் அதுவும் உச்ச நீதிமன்றம்தான் ஏதாவது செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை