உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தால் கூட மிரட்டலும், கொலையும் தான் பதிலா? தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி

ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தால் கூட மிரட்டலும், கொலையும் தான் பதிலா? தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி

சென்னை: 'தமிழ்நாட்டில் ஒரு ஏ.டி.ஜி.பி.,யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், தி.மு.க., ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் ஐ.பி.எஸ் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.'சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்' என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது.தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது. இந்த செயலுக்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் ஒரு ஏ.டி.ஜி.பி.,யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா? இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? ஏ.டி.ஜி.பி., உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது முதல்வர் ஸ்டாலின், தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி! இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு தி.மு.க., அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை தி.மு.க., அரசு உறுதி செய்ய வேண்டும். உடனடியாக ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக்கின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

S.L.Narasimman
பிப் 03, 2025 17:26

தமிழக பொருளாதர, தொழில்முன்னேற்றம், அதற்கான திட்டங்கள், கொடுத்த பொய் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றி கொடுத்தல், சட்டம் ஒழுங்கை காப்பாற்றுதல் விலைவாசி கட்டுபடுத்தல் என்ற செயல்களை செய்யாமல் ஊழல் செய்வதே சாதனை என்று விடியல் அரசு காலத்தை கடத்துவது தான் நடக்கிறது.


என்றும் இந்தியன்
பிப் 03, 2025 17:14

நீ ஏண்டா அவனை கொலை செய்தாய்???பதில்- ஏன் அதோ அங்கே நிற்கும் அவனும் தான் ஆட்டை கொலை செய்து அதையே சாப்பிடுகின்றானே அதை கேட்காமல் நான் என் அவனை கொலைசெய்தாய் என்று கேட்கின்றாய் என்று சொல்வது போல இருக்கின்றது இந்த ரூ 200 உபிஸ் முட்டு கொடுப்பது


Barakat Ali
பிப் 03, 2025 15:55

பயனற்ற அரசு மட்டுமல்ல ..... மக்கள் விரோத அரசும் கூட ......


தமிழ் மைந்தன்
பிப் 03, 2025 15:00

உன்னை போல இருநூறு உப்ஸ் உள்ளவரை தமிழ்நாடு ??????


V வைகுண்டேஸ்வரன்
பிப் 03, 2025 14:46

இ பி எஸ் முதல்வரா இருந்த போது, 23 பேரை போலீஸ் சுட்டுக் கொன்றது கூடத் தெரியாமல் மிக்சர் மென்று கொண்டிருந்து விட்டு டி வி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன நீரெல்லாம் இப்படி பேசும் அருகதையை அப்போதே இழந்து விட்டவர்.


K.J.P
பிப் 03, 2025 15:18

வைகுண்டன் சார் பழனிச்சாமியை அதனால் தான் மக்கள் இறக்கி விட்டு விட்டார்கள்.இப்படி எல்லாம் குடுகாதீர்கள.இதற்கு அவர்களே பரவாயில்லை என்று உங்களை இறக்கி விடுவார்கள்.


Barakat Ali
பிப் 03, 2025 15:58

அதிமுக அரசு சரியில்லை என்று கருத்தித்தானே ஆட்சிப்பொறுப்பை திமுகவிடம் கொடுத்தார்கள் மக்கள் ???? பிறகு அவர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு மகிழ்வீர்கள் என்றால் திமுக அரசினால் என்ன பயன் ????


GMM
பிப் 03, 2025 14:10

எடப்பாடி தமிழக குற்றங்களை பட்டியலிட்டு ஆட்சி கலைக்க தானும், தலைமை செயலர், மாநில தேர்தல் ஆணையர், மாநில உயர் நீதிபதி கருத்து பெற்று கவர்னர் வழியாக மத்திய உள்த்துறை செயலருக்கு கடிதம் அனுப்ப வேண்டும். மத்திய அரசு உச்ச நீதிமன்றம் உத்தரவு பெற்று, தேர்தல் ஆணையம் கட்சியை ரத்து செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் ஆட்சி டிஸ்மிஸ் செய்ய முடியும். இவ்வாறு முடியாது என்றால், திமுக வீழும் வரை அதனை எதிர்க்கும் கட்சிக்கு பதவி ஆசை துறந்து ஆதரவு தர வேண்டும். கேள்வி, அறிக்கை, ஆவேசத்திற்கு அஞ்சாது திராவிடம்.


Kadaparai Mani
பிப் 03, 2025 16:25

அதிமுகத்தான் தமிழக்தின் பெரிய கட்சி .உண்மையாக திமுகவை எதிர்க்கும் கட்சி .நீங்கள் ஆதரிக்கும் கட்சி திமுக குடும்பத்திற்கு வேண்டப்பட்ட கட்சி தலைநகரில் ,அங்குதான் கனிமொழி ஆதரவு உள்ளது


தமிழ் மைந்தன்
பிப் 03, 2025 13:15

பைலை கண்கொத்தி பாம்பாக ஸ்டாலின் பாத்துக் கொண்டிருக்கிறார். நல்ல காமடி


ராமகிருஷ்ணன்
பிப் 03, 2025 13:08

இதான்டா திராவிட மாடல் என்று அடிக்கடி சொல்வது தெரியல்லையா


Amar Akbar Antony
பிப் 03, 2025 12:47

இந்த குற்றத்தையே பயன்படுத்தி ஈரோட்டில் சீமானுக்கு ஆதரவாக பேசி வாக்கு சேகரியுங்கள் தி மு க விற்கு எதிராக. புன்னியமாகப் போகும்


Laddoo
பிப் 03, 2025 12:08

மிஸ்டர் பெர்மனென்ட் பத்துத் தோல்வி அதிகமாக கூவாதிங்க. உங்க கோடநாடு விவகார பைலை கண்கொத்தி பாம்பாக ஸ்டாலின் பாத்துக் கொண்டிருக்கிறார். ஒங்க சேப்டி தான் ஒங்களுக்கு முக்கியம். அதிமுக எக்கேடு கெட்டா ஒங்களுக்கு என்ன.


புதிய வீடியோ