உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கில் சிக்கியவரும் வெளிநாடு செல்லலாம்; லுக் அவுட் நோட்டீசை நிறுத்த முடியும் என கோர்ட் உத்தரவு

வழக்கில் சிக்கியவரும் வெளிநாடு செல்லலாம்; லுக் அவுட் நோட்டீசை நிறுத்த முடியும் என கோர்ட் உத்தரவு

சென்னை : 'வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் இந்தியா திரும்புவதை உறுதி செய்யும் விதமாக நிபந்தனைகள் விதித்து, 'லுக் அவுட்' நோட்டீசை நிறுத்தி வைக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.போலி நிறுவனங்கள் துவங்க உதவியதாக, நிறுவன ஆலோசகரான பாதன் அப்சர் என்பவருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. துபாய் செல்ல ைஹதராபாத் விமான நிலையம் வந்த போது, அவருக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனால், வெளிநாடு செல்ல முடியவில்லை. தனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பாதன் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, சரவணன் என்ற தொழில் அதிபரும், தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இரண்டு மனுக்களும், நீதிபதி என்.சேஷசாயி முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் ஆஜரானார்.

வாழ்வியல் உரிமை

மனுக்களை விசாரித்த, நீதிபதி என்.சேஷசாயி பிறப்பித்த உத்தரவு: ஒருவரது வளர்ச்சி, வளத்துக்கான உரிமையில், சட்டப்படியான நடைமுறையை பின்பற்றாமல், எந்த தடையும் விதிக்க முடியாது. வாழ்வியல் உரிமையில் வளர்ச்சியும், வளமும் இருக்கும் போது, வெளிநாடு செல்லும் உரிமையும் உள்ளது. ஒருவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கும் போது, விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அலுவலகம் வரை அவர் செல்லலாம்; விமானத்தில் ஏற முடியாது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், புலன் விசாரணையின் போதோ அல்லது வழக்கு விசாரணையின் போதோ, குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டால் தண்டனையை அனுபவிக்கவோ, அவர் இங்கு இருக்க வேண்டும். அதற்காக, வெளிநாடு செல்வதற்கான உரிமையை கட்டுப்படுத்துவதில், எந்த அர்த்தமும் இல்லை. வெளிநாடு செல்வதை எப்படி நிறுத்துவது என்று இல்லாமல், அவர் வெளிநாட்டில் இருந்து திரும்புவதை உறுதி செய்யும் விதமாக இருக்க வேண்டும்.எனவே, சட்டத்தில் உள்ள நடைமுறையை பின்பற்றி, குற்றம் சாட்டப்பட்டவரின் வெளிநாட்டு பயண உரிமையில் நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். லுக் அவுட் நோட்டீசுக்கு மாற்றாக இறுதி வடிவம் கிடைக்கும் வரை, தனி நபரின் பயண உரிமையை பாதிக்காத வகையில், அது நீடிக்கலாம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால், லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைக்கக்கோரி, விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.

சொத்து உத்தரவாதம்

இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், குறிப்பிட்ட தொகையை அல்லது அதற்கு ஈடாக சொத்துக்களை, 'டிபாசிட்' செய்ய நிபந்தனை விதிக்கலாம். உறவினர் அல்லது பங்குதாரர்களின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிடலாம். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில், நோட்டீசை நிறுத்தி வைக்கலாம்.மனுதாரர்களின் மனுக்களை பொறுத்தவரை, தலா, 10 லட்சம் ரூபாய்க்கு சொந்த உத்தரவாதமும், இரு நபர் உத்தரவாதமும் அளிக்க வேண்டும். நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில், லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Venkatesan Srinivasan
டிச 11, 2024 18:53

வழக்கு, விசாரணை, தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில். பிஜேபி கோர்ட்டில் இல்லை. சுருக்கமாக சொன்னால் தும்பை விட்டு வாலை பிடிக்க சொல்கிறார்கள். லுக் அவுட் நோட்டீஸ் பெறும் அளவு சமுக சேவை செய்யும் கண்ணியவான்கள் பாடு கொண்டாட்டம்.


N Sundarrajan
டிச 10, 2024 17:40

மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே


Ramesh
டிச 10, 2024 09:33

இதுக்கு இவ்வளவு கஷ்டப்படனுமா? கொள்ளை அல்லது கொலை செய்யும் போதே வெளிநாட்டுக்கு விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்து அந்த நாட்டில் குடியுரிமையும் பெற்று கொடுத்தால் அவர்கள் வாழ்வுரிமையும் காப்பாற்றப்படும் நீதியரசர்களுக்கு நோபல் பரிசும் கிடைக்கும்.


Balamurugan nithyanandam
டிச 09, 2024 16:45

அடடா என்ன தீர்ப்பு பிறகு நீரவ் ராடியா அல்லது விஜய மல்லையா போல வெளிநாட்டில்........ ???


N.Purushothaman
டிச 09, 2024 12:18

போலி சொத்துக்களை அடமானம் வச்சிட்டு கம்பி நீட்டிட்டா போகுது ....குடும்பத்தில் உள்ள மற்றவர்களே தங்களின் கடவு சீட்டை அடமானம் வைக்க ஒப்பு கொள்ள மாட்டார்கள் ....


Rajarajan
டிச 09, 2024 12:16

படு சுத்தம். நடத்துங்க, நல்லா நடத்துங்க. யாரையோ காப்பாத்தபோறீங்கன்னு நல்லா தெரியுது.


Mohan
டிச 09, 2024 11:06

நல்லா விளங்கும்டா இந்த நாடு ...எங்கிருந்துயா நீங்க எல்லாம் வருவீங்க ஒ திடல் தற்குறிகள் ,டி ஸ்டாக் அப்டித்தான் தீர்ப்பு எழுதுவாங்க


Sampath Kumar
டிச 09, 2024 10:49

பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நீதி மன்றங்களின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிகிறது அது தீர்ப்புகளில் பிரதிபலிக்கிறது இந்த கேஸ் தீர்ப்பு யாருக்கோ உதவ வேண்டும் என்ற உள்ள நோக்கமே மிகுந்து உள்ளது அது யாரு என்று இந்திய மட்டும் ள்ள உலகத்துக்கே தெய்ரயும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது நீதி மன்றம்


Balamurugan nithyanandam
டிச 09, 2024 16:47

???? எப்படி ஐயா 7ங்களால் இப்படி ஒன்னு மோடி ஒழிக சொல்லணும் இல்லை அதானி ஒழிக சொல்லணும் அதான ??


nv
டிச 09, 2024 09:23

சில சமயங்களில் நம்முடைய நீதிமன்றங்களில் என்ன நடக்குது என்று தெரியவில்லை!! வெளியே போனால் திரும்பி வருவான்? கொஞ்சம் அறிவுடன் யோசிக்க வேண்டும்??


sridhar
டிச 09, 2024 10:07

ஒரு குறிப்பிட்ட மதத்து ஆட்கள் மேல் இங்கே பரவி இருக்கும் பாசம் தான் காரணம் .


Barakat Ali
டிச 09, 2024 09:20

வருங்காலத்தில் - Near future - யாரைக்காப்பற்ற இந்த அட்வான்ஸ் உத்தரவு ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை