ராகுல் தொடும் அனைத்தும் பேரழிவு: பா.ஜ.,
சென்னை: லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் அருகில் உள்ள தி.மு.க., - எம்.பி.,க்களின் இருக்கைகளை மாற்றி தருமாறு, சபாநாயகருக்கு தி.மு.க., - எம்.பி., கனிமொழி கடிதம் எழுதி உள்ளார் . இதை சுட்டிக் காட்டி, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் அமித் மால்வியா வெளியிட்ட அறிக்கையில், 'காங்கிரஸ் எம்.பி., ராகுல், காங்கிரசை மட்டுமல்ல, 'இண்டி' கூட்டணியையே முடிவுக்கு கொண்டு வருகிறார். 'அவரின் ஒவ்வொரு தேர்தலும், ஒவ்வொரு பிரசாரமும், ஒவ்வொரு தலையீடும், இந்த வீழ்ச்சியை மேலும் வேகப்படுத்துகிறது. அவர் தொடும் அனைத்தும் அரசியல் பேரழிவாக மாறிவிடுகிறது' என தெரிவித்துள்ளார்.