உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.வெ.ரா., தான் வேண்டும் என்றால் நா.த.க.,விலிருந்து வெளியேறலாம்: சீமான்

ஈ.வெ.ரா., தான் வேண்டும் என்றால் நா.த.க.,விலிருந்து வெளியேறலாம்: சீமான்

திருச்சி: ''ஈ.வெ.ரா.,வை யார் ஏற்றாலும், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஈ.வெ.ரா., தான் வேண்டும் என்றால், நா.த.க.,வில் இருந்து வெளியேறலாம்,'' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இது குறித்து அவர் நேற்று திருச்சியில் அளித்த பேட்டி:

ஈரோடு இடைத்தேர்தலில் நா.த.க.,வுக்கு, பா.ஜ.,வின் ஓட்டுகள் கிடைத்தன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் வாங்கிய அனைத்து ஓட்டுகளும், எங்கள் கட்சிக்காக மக்கள் அளித்த ஓட்டுகள். ஒரு ரூபாய் செலவு செய்யாமல் பெற்ற ஓட்டுகள் அவை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8q50dd1z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விரைவில் தெரியும்

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பலரும் டிபாசிட் இழந்த வரலாறு உண்டு. நுாறு ஓட்டுகளுக்குள்ளான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தலைவர்களும் உள்ளனர். பிரபாகரன் உள்ளிட்ட உலகத்தில் யார் ஏற்றுக் கொண்டாலும், ஈ.வெ.ரா.,வை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பிரபாகரனே வந்து சொன்னாலும், இந்த விஷயத்தில் பின்வாங்கப் போவதில்லை. எவ்வளவோ பெரியார்கள் இருக்கும்போது, நான் ஏன் ஈ.வெ.ரா.,வை ஏற்க வேண்டும்? ஈ.வெ.ரா., குறித்து கொஞ்சம் ஓவராக பேசி விட்டதாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இப்போது தான் துவங்கி உள்ளேன்; இன்னும் போகப் போக நிறைய உள்ளது. இந்த விஷயத்தில் என் வேகம் என்ன என்பது விரைவில் தெரியும்.இந்த தேர்தல் மூலம், கட்சி கட்டமைப்பை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம். புலி தனியாகத் தான் வேட்டையாடும். நான் தனியாகத் தான் நிற்கிறேன். கோழைகள் கூட்டத்துடன் ஏன் நிற்கணும்? தனித்து நிற்க வீரமும், துணிவும் வேண்டும். நான் பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர் என்பது யூகத்தில் சொல்வது. என் கோட்பாடு, இந்திய கட்சிகளுக்கு, திராவிட கட்சிகளுக்கு எதிரானது. உலகில் ஊழல் இல்லாத நாடாக டென்மார்க் உள்ளது. அப்படியொரு நாட்டைத் தான் கட்டமைக்க விரும்புகிறேன். 'தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி; முட்டாள்களின் மொழி; அந்த சனியனை விட்டு ஒழி' என்று சொன்ன, அந்த சனியனை எதிர்ப்பது தான் என் இலக்கு.

எதையும் செய்யவில்லை

ஒரு மொழியை இழிவாக பேசிவிட்டு, அந்த மொழி சார்ந்துள்ள இனத்துக்கு எப்படி ஒருவன் தலைவனாக இருக்க முடியும். தமிழகத்தின் அனைத்து எம்.பி.,க்களும் தமிழகத்துக்காக எதுவும் உருப்படியாக பேசவில்லை; செய்யவில்லை.இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

GoK
பிப் 18, 2025 12:14

ஈ வீ ராமசாமி நாயக்கன் பெரியானில்லை, பித்தலாட்டக்காரன். அவனுக்கு மற்றவர் வணங்கும் சிலைகளை செருப்பால் அடிக்க உரிமை இருந்ததென்றால் அவன் சிலையை மலத்தில் முக்கிய செருப்பால் அடிக்க மக்களுக்கு அதிகாரம் உண்டு. அதை எதிர்ப்பவனுங்களையும் அந்த செருப்பாலேயே அடிக்கவும் செய்வோம்.


uma jayaraman
பிப் 12, 2025 20:59

தமிழ் நாட்டிற்கு இவரை போன்று உண்மையை உடைத்து பித்தலாட்டங்களை விளக்கும் அரசியல் தலைவர் தேவை.


ஆரூர் ரங்
பிப் 11, 2025 14:58

ஆலய நுழைவு ராமானுஜர் காலத்திலேயே துவங்கி விட்டது. இடையில் தெலுங்கு கன்னடர் ஆட்சியில்தான் மீண்டும் தடங்கல் ஏற்பட்டது. பிறகு ராஜாஜிதான் அனைவருக்கும் ஆலய நுழைவு உரிமையை அளிக்கும் சட்டத்தை இயற்றினார். அதில் ஈவேரா வுக்கு எவ்வித பங்கும் இல்லை. பொய் கூறியே பிழைத்த நபர் அவர்.


Pandi Muni
பிப் 11, 2025 13:59

இறந்தும் இழிபிறவிகளாகிப்போன அந்த துர்சக்திகளை வைத்து தமிழனை ஏமாற்றி பிழைக்கும் பதர்களும் இழிபிறவிகளே


Pandi Muni
பிப் 11, 2025 13:56

தமிழனின் தலைவன் சீமான்தான் அப்ரண்டீஸ்களா


venugopal s
பிப் 11, 2025 13:17

பாஜகவிடம் வாங்கிய காசுக்கு மேல் நேர்மையாக கூவிக் கொண்டு இருக்கிறார் சீமான்!


Anand
பிப் 11, 2025 13:31

உன்னோட கேடுகெட்ட இழிபிறவி தலைவர்களை போல் என நினைத்துக்கொண்டாய் போல..


Anbu Raj
பிப் 11, 2025 13:35

நீயெல்லாம் என்ன பிறவி பதில் இல்லனா அவதூறு பரப்புவது திராவிட அடிமைகளின் வேலை, பாஜக காரனிடம் கருணாநிதி ஊம்.... மறந்துடாதே சீமானை மாரி ஒரு மாசான தலைவர் வேற யாரு??


Harindra Prasad R
பிப் 11, 2025 12:50

பெரியார் ஒரு துரோகி.. இந்து மத துரோகி ஏனென்றால் இந்து கடவுள் மட்டும் தான் யில்லை என்று சொன்னார். மற்ற மத கடவுளை இல்லை என்று சொல்லியிருந்தால் அவரை மற்ற மதித்தினார்கள் விட்டு வைத்திருந்திருக்க மாட்டார்கள் காலி செய்திருப்பார்க்கள். நாம் சகிப்புத்தன்மை கொண்டதாலும் நம் இனத்திலேயே பல திராவிட திருட்டு கும்பல் கருப்பு ஆடுகள் பணத்திற்க ஜால்ரா போட்டதாலும் அவர் பல வருடங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பு கிடைத்தது. இதை உரக்க சொல்ல ஒரு சிங்கம் அரசியல்வாதி இன்று கிடைத்து விட்டான்..


ramesh
பிப் 11, 2025 12:43

பிஜேபி இல் பதுங்கி இருக்கும் ஆரியன், திராவிடர்களின் விரலை கொண்டே திராவிடர்களின் கண்ணை குத்த முயற்சிக்கிறான் என்பதே உண்மை


Suppan
பிப் 11, 2025 13:29

ஆர்யன் திராவிடன் என்பதே ஒரு புருடா என்றார் ஆம்பேட்கர். மதம் மாற்ற வந்த கால்டுவெல் ஜி யு போப் வகையறாக்கள் அடித்து விட்ட உருட்டு. அதையும் நம்புகிறார்கள் இந்த திராவிடம் என்று சொல்லிக்கொள்ளும் அறிவிலிகள். இதை எப்பொழுதாவது அடிவருடிகள் பேசியிருக்கிறார்களா?


ramesh
பிப் 11, 2025 12:41

50 ஆண்டுகளாக பெரியார் மீது இல்லாத எதிர்ப்பு கடந்த 2 ஆண்டுகளுக்குள் வந்து இருக்கிறது என்றால் பிஜேபி பெயரில் பதுங்கி கொண்டு தங்களின் 70 ஆண்டு பகையை தீர்த்து கொள்ள துடிக்கும் குறிப்பிட்ட கூட்டம் என்பது நன்றாக தெரிகிறது .


Anbu Raj
பிப் 11, 2025 13:38

உன் உருதெல்லாம் பலிக்காது


Venkatesan Srinivasan
பிப் 12, 2025 16:57

பெரியார் என்பது முழு இந்து விரோத, தேசப்பிரிவினை ஊக்குவிப்புக்கான கட்டமைப்பு. இந்தி எதிர்ப்பு பிராமணர்கள் எதிர்ப்பு வடக்கத்திய எதிர்ப்பு இந்து அல்லாதோர் மட்டுமே தோழமை திராவிட சித்தாந்தம் என்பதும் செயல் திட்டம். இவற்றின் மூலம் தமிழக மக்களை தேசத்தின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தி பிரித்து ஆள்வது. சில வஞ்சக அரசியல் சக்திகளின் சதி. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்த சதிகளுக்கு , சகதிகளுக்கு வெளியே மக்களை வழி நடத்தினர்.


ramesh
பிப் 11, 2025 12:37

52 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஈ வே ரா இன்னும் உங்களை எல்லாம் புலம்ப வைத்து கொண்டு இருக்கிறார் என்றால் இறந்தும் வாழ்கிறார் என்பதே சரி .


Suppan
பிப் 11, 2025 13:32

இறந்த பின்னும் ராம் சாமியின் அறிவிலித்தனமான கருத்துக்களைத் தூக்கிப்பிடிக்கும் ஆசாமிகளை என்னவென்று சொல்ல? பகுத்தறிவை உபயோகப்படுத்தியிருந்தால் என்றோ அவற்றை உதாசீனம் செய்திருப்பார்கள் .


Anand
பிப் 11, 2025 13:35

இடி அமீனை / கோயபல்சை / முசோலினியை கூட கழுவி கழுவி ஊத்துகிறார்கள், அப்படியானால் அவனுவ எல்லாம் இறந்தும் வாழ்கிறார்களா? அல்ல இறந்தும் இழிபிறவிகளாகவே கருதுகிறார்கள்... அதுபோல தான்....


Anbu Raj
பிப் 11, 2025 13:41

பொறுத்திருந்து பார்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 11, 2025 13:48

52 ஆண்டுகளாக ஒருத்தன் வாங்குகிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட பிறவி என்பது தெள்ள தெளிவாகிறது....!!!


SUBRAMANIAN P
பிப் 11, 2025 13:59

எதையும் நல்ல தீர படித்து ஆராய்ந்து தெளிவு பெறுக.


புதிய வீடியோ