உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உறவுமுறை குறித்து ஈ.வெ.ரா., பேசியது அறிவுபூர்வமானது: சொல்கிறார் திருமாவளவன்

உறவுமுறை குறித்து ஈ.வெ.ரா., பேசியது அறிவுபூர்வமானது: சொல்கிறார் திருமாவளவன்

சென்னை: ''உறவுமுறை குறித்து, ஈ.வெ.ரா., பேசியது உண்மை தான்; அதை அறிவியல்பூர்வமாக பார்க்க வேண்டும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.அவர் அளித்த பேட்டி:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உண்மையாகவே தமிழ் தேசியத்தை உயர்த்தி பிடித்தால், இதுபோன்ற முரண்பாடுகளின் பிடியில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை.திராவிட எதிர்ப்பு தான், தமிழ் தேசியம் என முடிவு செய்ததுடன், அவ்வாறு இருப்பவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.சீமானுக்கு, ஈ.வெ.ரா., அம்பேத்கர் இயக்கங்கள் தான் அடித்தளம் அமைத்து கொடுத்தன. அவரை அடையாளப்படுத்தி கைதுாக்கி விட்டன. ஆரம்ப காலங்களில், சமூக நீதி தான் சீமான் பேசிய அரசியல்.இன்று, முன்னுக்கு பின் முரணாக பேசி, தமிழ் தேசியத்தை இனவாதமாக மாற்ற நினைக்கிறார். இனவாதத்தை விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், எங்கேயும் உயர்த்தி பிடிக்கவில்லை. பிற மொழி, இன வெறுப்பில் பிரபாகரன் ஈடுபட்டது இல்லை. பிரபாகரனின் பெயரை, சீமான் தன் நிலைப்பாட்டுக்கு பயன்படுத்துவது ஏற்புடையது இல்லை.

உறவுமுறை மாற்றம்

உறவுமுறை குறித்து, ஈ.வெ.ரா., பேசியது உண்மை தான். அதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். வெறுப்பு அணுகுமுறை கொண்டு கவனிக்கும்போது அதை புரிந்துகொள்ள முடியாது. உறவுமுறை உலகம் முழுதும் எப்படி இருந்தது; இருக்கிறது என்ற அடிப்படையில் பேசியுள்ளார்.இனத்திற்கு இனம், மதத்திற்கு மதம், தேசத்திற்கு தேசம் உறவுமுறை மாறும் என்பதை தான் சுட்டிக்காட்டினார்.உறவு முறையில் ஹிந்து மதம் சில புனிதத்தை கற்பிக்கிறது. அந்த கற்பிதத்தை அம்பலப்படுத்துவதற்காக, உறவுமுறை குறித்து ஈ.வெ.ரா., சொல்கிறார்; ஒழுங்கீனத்தை ஊக்கப்படுத்துவதற்காக சொல்லவில்லை. ஹிந்து மதத்தில், உறவு முறையில் புனிதம் ஏற்றப்பட்டுள்ளது; அதுதான் ஈ.வெ.ரா.,வின் பார்வை.எந்த இடத்திலும் இன்றைக்கு, நடைமுறையில் உள்ள ஒழுக்கங்களுக்கு எதிராக பேசவில்லை; எல்லாரும் வரம்பை மீறி செயல்பட வேண்டும் எனவும் அவர் வழிகாட்டவில்லை. அதனால், சீமான் ஆதாரமில்லாமல் பேசுவது கண்டனத்துக்குரியது. அதை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ் தேசம் என்பது ஹிந்துத்துவ தேசம், மதவழி தேசியத்திற்கு எதிரானதே தவிர, தெலுங்கு மொழி உட்பட, பிற மொழி எதிர்ப்பில் இல்லை.

தனிப்பட்ட அரசியல்

பாரதிதாசன் உள்ளிட்ட தலைவர்களை பிரபாகரன் துணைக்கு அழைத்தவர். அதனால், அவர்கள் அவ்வாறு செயல்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.தி.மு.க., எதிர்ப்பு என்பது, சீமானுடைய தனிப்பட்ட அரசியல். தி.மு.க.,வை எதிர்க்கிறோம் என, திராவிட இயக்கங்களையும், ஈ.வெ.ரா.,வையும் எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது. சீமான் மீது எனக்கு மதிப்பு உண்டு. அவரது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஈ.வெ.ரா., மீதான நன்மதிப்பை சீர்குலைப்பதில் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. அது சனாதன சக்திக்கு துணை போவதற்கு மட்டும் தான் பயன்படும். சீமானின் கருத்தை முதலில் ஆதரித்து இருப்பது, சனாதன பாசறையில் வேகமாக வளர்ந்த அண்ணாமலை தான். இதிலிருந்து, நாம் பேசுகிற அரசியல் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று சீமான் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 79 )

V RAMASWAMY
ஜன 18, 2025 09:36

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.


Sankare Eswar
ஜன 17, 2025 06:54

சிறுத்தை குட்டிக்கு கருத்துன்னா காமம், சரக்கு மிடுக்கு இதுல மட்டும் கூடுதல் அறிவு ராமசாமிகிட்டேர்ந்து பாஸாயிருக்கும் போல. இந்த அறிவு அறிவியல் வச்சி ஒரு எல்லோ புத்தகம் ஒன்னு போட்டா கட்சிக்கு நிதி கிடைக்கும். சிரத்தை குட்டிகள் அக்கப்போர் இன்னும் அதிகமாயிடும்.


Sampath
ஜன 16, 2025 22:47

பாவம் இந்த ஆளையும் மனுஷ்ஷ ஜென்மன்னு நம்புவர் பாவம்...


ponssasi
ஜன 16, 2025 18:04

மக்கள் இன்னம் எழுத படிக்க தெரியாதவர்கள் என திருமா நினைக்கிறாரா? பழ கருப்பையா உரை ஒன்று கேட்டேன் அதில் அந்தக்காலத்தில் படித்தவர்கள் அறிவாளிகள் எல்லாம் பேசினார்கள் மக்கள் படிக்காதவர்கள் ஏழைகள் விவசாயிகள் அவர்கள் பேச்சை கேட்டார்கள் அவர்கள் அறிவாளிகளை ஆட்சி கட்டிலில் உட்கார வைத்தார்கள். ஆனால் இன்று கேட்ட்பவர்கள் எல்லாம் படித்தவர்கள் அறிவாளிகள் ஆனால் தலைவர்கள் எல்லாம் படிக்காதவர்கள் சுயநலவாதிகள் என்றார். தன் பெயருக்கு பின்னால் வரும் எழுத்துக்கள் மட்டுமல்ல படிப்பு தனது பேச்சிலும் வேண்டும் திருமா அவர்களே.


P.M.E.Raj
ஜன 15, 2025 16:40

அறிவுபூர்வமாக நீயே விளக்கம் கொடு. எந்தளவிற்கு கீழ்த்தரமான மற்றும் கேவலமான அரசியல் செய்யணும் என்பதற்கு இவனே சாட்சி. தமிழக மக்களின் அறியாமை தனத்தினால் இவர்களை போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளின் பேச்சை கேட்கவேண்டி உள்ளது.


K V Ramadoss
ஜன 13, 2025 21:12

அறிவுப்பூர்வமாக இ வே ரா உறவுமுறையில் சொன்னதைத்தான் , திருமாவளவன் சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரா ?


Nagarajan S
ஜன 13, 2025 18:57

திராவிட ஜால்றா எப்படி பேசுவார்?


Pandi Muni
ஜன 13, 2025 15:08

ராமசாமியின் முட்டுகள் தங்கள் பிறப்பை சரிபார்க்கவும்.


Sankare Eswar
ஜன 13, 2025 07:10

இவருக்கு அறிவுபூர்வமானது குறித்த சிந்தனைகள்


SELLIAH Ravichandran
ஜன 12, 2025 14:16

Who want your documentary.I don't want recharge about bleedys.i want recharge future technology


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை