உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவு?

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நில அபகரிப்பு புகாரில் முன்ஜாமின் மனு தள்ளுபடி ஆனதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், கரூர் எஸ்பி அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில், ‛ தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தார்' என தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எம்.ஆர். விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிறகு வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.இதனால், விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று( ஜூன் 25) இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் வட மாநிலத்திற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 26, 2024 13:33

குற்றவளியைத்தேடிப்பிடிப்பது சரியே. யாராக இருந்தாலும் சரிதான். ஆனால் இதே முனைப்பை செந்தில் பாலாஜியின் சகோதரர் விஷயத்தில் காவல் துறை காட்ட மறுக்கிறதே ஏன் ?


Muralidharan S
ஜூன் 26, 2024 12:56

லஞ்சம் வாங்குவது, திட்டங்களில் ஊழல் செய்து பணத்தை / சொத்தை குவிப்பது, நிலத்தை அபகரிப்பது, இவை இல்லாமல் அரசியலும், அரசியல்வாதியும் இல்லை என்று ஆகிவிட்டது. குற்றம் புரிந்து கைது ஆவதும், சிறையில் இருப்பதும் கூட இன்று மிக பெரிய சாதனை மாதிரி இருக்கிறது. சாதாரண மக்கள் மனதில் கூட இவை எல்லாம் பெரிய குற்றங்கள் இல்லை என்று நினைக்கும் அளவிற்கு ஆகிவிட்டதுதான் மிகவும் வேதனை படவேண்டிய விஷயம். மக்கள் திரும்ப திரும்ப குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கூட தேர்ந்து எடுக்கிறார்கள். யாருக்கும் வெட்கம் இல்லை.


தங்கராசு
ஜூன் 26, 2024 12:42

உடாதீங்க. அப்பிடியே கைலாசத்துக்கு எஸ்கேப் ஆயிடப்.போறாரு.


raja
ஜூன் 26, 2024 11:14

திருட்டு திராவிட கட்சி என்று இவன் வந்தாலும் அடித்து விரட்டுவோம் தமிழா..தமிழகத்தில் திராவிடர்களையும் திராவிடத்தை யும் அழிக்கவேண்டும்...


Rengaraj
ஜூன் 26, 2024 11:04

இப்படிபட்ட நேர்மையற்ற அரசியல்வாதிகளையும் ஏமாற்றுக்காரர்களையுமா மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும் ?


saravan
ஜூன் 26, 2024 10:49

தூக்கி உள்ள போடுங்க


MADHAVAN
ஜூன் 26, 2024 10:39

1 நம்பர் லாட்டரி சீட்டு கரூர்ல இவரால்தான் வந்தது


MADHAVAN
ஜூன் 26, 2024 10:38

கரூருக்குள்ள இவனுங்க போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல, இவன் கொள்ளை அடிச்சது கரூருக்கு பக்கம் ஆரியூர்ல 700 ஏக்கர் இருக்கு. அண்ணாமலைக்கு நல்ல தெரியும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை