உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் அமைச்சர்  உறவினர் வீடுகளில்  தொடர்ந்து சோதனை 

முன்னாள் அமைச்சர்  உறவினர் வீடுகளில்  தொடர்ந்து சோதனை 

கோவை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் நான்காவது நாளாக நேற்றும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அ.தி.மு.க., முன்னாள்அமைச்சர் வைத்திலிங்கம்,2011 - 2016 காலகட்டத்தில், தனியார் நிறுவனத்துக்கு குடியிருப்பு கட்ட அனுமதி வழங்க, 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, புகார் உள்ளது. வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், வருவாய் துறையினர் கோவை உட்பட தமிழகம் முழுக்க சோதனை மேற்கொண்டனர்.நான்காம் நாளாக நேற்றும், கோவையிலுள்ள அவரது உறவினர் மற்றும் தொடர்புடையவர்களது வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவை துடியலுார் வி.கே.எல்.நகர், ராவத்துார் பிரிவு, செலக்கரிச்சல், கவுண்டம்பாளையம், பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பாளையம், சிந்தாமணிபுதுார், காங்கேயம்பாளையம் பகுதிகளிலுள்ள உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இச்சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை