உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஜி எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு; சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

மாஜி எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு; சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை; மாஜி எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழக சட்டசபையில் அவர் இன்று (ஏப்.26) பேசியதாவது: சட்டசபை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.30,000த்தில் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படும்.சட்டசபை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.15,000ல் இருந்து, ரூ.17,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ.75,000 என்பது ரூ.1.லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். ஏற்கனவே இந்த ஆண்டின் மருத்துவப்படி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள ரூ.25,000 விதிகள் திருத்தம் செய்யப்பட்டு வழங்கப்படும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Matt P
ஏப் 26, 2025 23:50

வயதானாலும் ஒய்வு பெறவே விருப்பம் இல்லாமல் காலத்தை ஓட்டுகிறார்களே. சட்டசபை உறுப்பினர் மந்திரிகளுக்கு கட்டாய ஒய்வு கொடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வயது நிர்ணயம் செய்ய வேண்டும் தேர்தலில் நிற்பதற்கு. முப்பத்தைந்தாயிரம் பற்றாது ஏன் யானை வாய்க்கு என்பதால் மந்திரி பதவியை தொடர்கிறார்களோ.


Matt P
ஏப் 26, 2025 23:46

துரை முருகனுக்கு 86 வயது ஆகிறது. அவரெல்லாம் எப்போ பென்ஷன் வாங்குவாங்க. 110 வயசிலயா ? நாட்டில அதுவும் திமுகவில் இளைஞ்சர்களுக்கு தட்டுப்பாடு மாதிரி ஏன்பா பதவியை கெட்டியா பிடிச்சிட்டு இருக்கீங்க. சாகிற வயசில சங்கரா சங்கரா என்பது மாதிரி சட்டசபையில் கருணாநிதி கருணாகதி என்று கத்தவா? எல்லோருக்கும் வயசாக தான் போவுது. வயசானவர்களை கேலி செய்யும் எண்ணம் இல்லை. வயசானவர்கள் இளைஞ்சர்களுக்கு வழிவிட்டு, வீட்டில் ஒய்வு என்பதும் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய ஓன்று தான் என்று உணர வேண்டும்.


Sundaran
ஏப் 26, 2025 22:46

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வக்கில்லை...மாஜிக்களுக்கு சம்பள உயர்வா?


Venkateswaran Rajaram
ஏப் 26, 2025 22:24

எம்.எல்.ஏ.,வாக இருக்கும்போது கொள்ளை அடிச்சீங்க... சாகுற வரைக்கும் கொள்ளை அடிங்க...


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 26, 2025 20:51

கலைஞருக்கான குடும்ப பென்சன் மாதம் ஒன்றரை இலட்சம் யாருக்கு போகிறது?


VIDYASAGAR SHENOY
ஏப் 26, 2025 20:46

கஷ்டப்படும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை ஓய்வு ஊதியம் இல்லை பணிக்கொடை தரவில்லை.


Matt P
ஏப் 26, 2025 23:54

பெண்கள் அனைவருக்கும் இலவசம் பயணம் கொடுத்தால் போக்குவரத்து துறைக்கு எப்படி வருமானம் வரும்?. வருமானம் இருந்தால் தானே வண்டியை சரி பண்ண முடியும். ஓட்டை ஒடிசல் இல்லாத பஸ்கள் ஓடும். வருமானம் இருந்தால் தானே சம்பளம் கொடுக்க முடியும். ஏற்கெனவே போக்குவரத்து துறை வருமானம் இல்லாமல் ஓடுது என்றார்கள். பொருளாதார நிபுனர் சாப்ளின் ஆட்சியில் இருக்கும் அவரை அனுபவித்து தான் ஆக வேண்டும்.


ராமகிருஷ்ணன்
ஏப் 26, 2025 16:38

சரி சரி, தேர்தலில் தோற்ற பின்பு திமுகவின்ர்தான் பயன் பெறும் வகையில் உயர்த்தி உள்ளார்.


RAMESH
ஏப் 26, 2025 15:55

இவர்களுக்கு கொடுத்த உயர்வில 4 பள்ளிகூடம் கட்டலாம்... ஜோதிகா மைண்ட் வாய்ஸ்


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 26, 2025 15:06

ஒருவர் ஐந்து முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்திருந்தால் அவருக்கு பென்சன் 1.75 லட்சம். அவர் மனைவிக்கு மாதம் சுமார் 90 ஆயிரம் .


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 26, 2025 15:02

என்ன கொடுமை சரவணா ?