உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு கடலுக்கு செல்லும் உபரி நீர்; புதிய தடுப்பணைகள் அவசியம்

கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு கடலுக்கு செல்லும் உபரி நீர்; புதிய தடுப்பணைகள் அவசியம்

திருச்சி : முக்கொம்பு மேலணைக்கு, 50,899 கனஅடி நீர் வரத்து இருந்தது. இதனால், கல்லணைக்கு 24,000 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 26,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரி நீர், கடலுார் வழியாக, கடலுக்கு சென்று விடும்.மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12ம் தேதி, காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், 14ம் தேதி திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்தது. மறுநாள், கல்லணையில் இருந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், கடலுார் மாவட்டங்களின் டெல்டா பாசனத்துக்கு, முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து, தற்போது, முக்கொம்பு அணைக்கு நீர் வரத்து 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரியில் முக்கொம்பு அணைக்கு வரும் தண்ணீரில், 30 ஆயிரம் கன அடி வரை மட்டுமே கல்லணைக்கு திறக்கப்படும். உபரி நீர், முக்கொம்பில் கட்டப்பட்டுள்ள கதவணை வழியாக, கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும்.அதன்படி, நேற்று முன்தினம், முக்கொம்பு மேலணைக்கு, 46,784 கனஅடி நீர் வரத்தானது. அதில், 24,410 கனஅடி கல்லணைக்கு திறக்கப்பட்டது. 22,374 கனஅடி உபரி நீர் புதிய கதவணை வழியாக, கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது.நேற்று முக்கொம்பு மேலணைக்கு 50,899 கனஅடி நீர் வரத்து இருந்தது. கல்லணைக்கு 24,000 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 26,000 கனஅடி நீரும், கிளை வாய்க்கால்களில் 700 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இது தவிர, கல்லணையில் இருந்தும், 4,000 கனஅடி நீர் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் கடலுார் மாவட்டத்தை கடந்து, கடலுக்கு சென்று கலந்து விடும். இதனால், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி, உபரி நீர் வீணாவதை தடுக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முக்கொம்பில் உள்ள மேலணை மற்றும் கொள்ளிடம் புதிய கதவணை ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரைகளை தொட்டுச் செல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Mohamed Haifan
ஜூலை 05, 2025 00:50

ஆதனுர்~குமாரமங்கலம் டாம் என்ன ஏன் இன்னும் திறப்பு விழா செய்யவில்லை?ஏதேனும் பிரச்னையா?


Gajageswari
ஜூலை 04, 2025 05:32

எனக்கு தமிழகத்திற்கு இரண்டு கண்கள் பார்வை போனாலும் பரவாயில்லை. ஆனால் உனக்கு கர்நாடகவிற்கு ஒரு கண் போக வேண்டும் என்ற எண்ணம் மேகதாது/ராசி மணல் அணைகட்டுகள்


Gajageswari
ஜூலை 04, 2025 05:28

ராசி மணல் அணை கட்டியிருக்க வேண்டும்


V GOPALAN
ஜூலை 03, 2025 16:45

டிவி இது பற்றி விவாதிக்குமா


sekar ng
ஜூலை 03, 2025 14:59

கர்நாடகாவில் மேக்கே தட்டு அணை காட்டினால் தான், நீரும் மண்ணும் கடலுக்கு போகாமல் காக்கபடும். இதனால் தமிழகத்திற்கு மின்சாரமும். பாது காப்பும் ஏற்படும்


Nagarajan D
ஜூலை 03, 2025 09:52

இது என்ன புதுசாவா நடக்குது ஏப்ரல் மே மாதங்களில் விவசாயிகள் கதறுவதும் நம்ம ராமசாமி வாரிசு முதல்வர்கள் கர்நாடகத்தை நிந்திப்பதும் ஜுனில் மழை வந்து விட்டால் கர்நாடக எல்லைக்கு சென்று மலர்தூவி வரவேற்று வந்த நீரை தேக்க துப்பில்லாமல் அப்படியே கடலில் கொண்டு சேர்ப்பதும்.. மானம்கேட்டவன் வழியில் வந்தவனெல்லாம் இப்படித்தான் இருப்பானுங்க இதில் இரண்டு கட்சிகளுமே ஒன்றுதான் admk dmk வித்யாசமே இல்லை


RAAJA
ஜூலை 03, 2025 09:25

உள்ளூர் நதிகளை இணைத்தால் பிரச்சனை இல்லை. கர்நாடகா தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் உபரியாக வரும் நீரை நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்றால் நாம் அவர்களை குறை கூறுவதில் நியாயம் இல்லை.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 03, 2025 08:56

நான்கு ஆண்டுகளில் ஐநூறு சிலைகள், நூறு மணிமண்டபங்கள், கட்டி முடித்தவுடன் தரையைத் தொடும் பள்ளிக்கட்டிடங்கள் ,நீரில் கரையும் ஆற்றுப் பாலங்கள் எல்லாம் கட்டி மாடல் சாதனை செய்துவிட்டோம். தடுப்பணை கட்ட மதவாத ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 03, 2025 08:24

கர்நாடகா மேகதாது அணைகட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது நல்லது. இப்படி நீர் வீணாவது தடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் வனவளம், மழைவளம் பெருகும். நிலத்தடி நீர் மடம் உயரும். விவசாயம் செழிக்கும். குடிநீர் பஞ்சம் இருக்காது. உபரி நீரை கேட்டுப் பெறவும் இயலும். இப்படி இருமாநிலத்திலும் உள்ள மக்கள் யாருக்கும் பயனின்றி காவிரி நீர் வீணாவது தடுக்கப்படும்.


S.V.Srinivasan
ஜூலை 03, 2025 08:24

கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து தண்ணீர் பஞ்சத்தை தவிர்ப்போம் என்றெல்லாம் தோன மாட்டேங்குது இந்த திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு. இதையெல்லாம் எடுத்து சொல்ல அரசு அதிகாரிகளுக்கும் மனமில்லை. எல்லாம் தன்னுடைய வாழ்க்கையை வளம்படுத்துவதிலேயே நேரத்தை விரயம் செய்கிறார்கள். முக்கிய மந்திரி புலம்பி புலம்பியே இந்த 5 வருஷத்தை ஓட்டிட்டாரு.