தினகரன் கட்சியிலிருந்து நிர்வாகி விலகல்
காரைக்குடி: அ.ம.மு.க., சிவகங்கை மாவட்ட பொருளாளர் லாரன்ஸ், பதவி விலகினார். கட்சி பொதுச் செயலர் தினகரனுக்கு, லாரன்ஸ் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்கள் என நம்பியிருந்தோம்; ஆனால் அமைக்கவில்லை. உங்கள் முடிவு சரியாக இருக்கும் என்று நம்பினோம். வி ஜய் சிறுபான்மையினர் என்பதால் தங்கள் மனம் ஏற்று கொள்ளவில்லையா? கூட்டணிக் கட்சியின் மதவாதம் தங்களுக்கும் தொற்றிக் கொண்டதாக கருதுகிறேன். எனவே, அ.ம.மு.க.,வின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறே ன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.