உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் அமெரிக்க நூலக கண்காட்சி

கோவையில் அமெரிக்க நூலக கண்காட்சி

கோவை: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் சார்பில், கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் 'அமெரிக்கன் லைப்ரரி' கண்காட்சி துவக்க விழா நடந்தது. காருண்யா பல்கலை பதிவாளர் ஆனி மேரி பெர்னான்டஸ், இந்த இரண்டு நாள் நூலகத்தை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சவரியம்மாள் உட்பட பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கண்காட்சி குறித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கலாசார விவகாரங்கள் அலுவலர் கரீனா ஒய்பரா அர்னால்டு கூறியதாவது:அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளின் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சுமார் 15 ஆயிரம் புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கல்வி, கலாசாரம், மனித உரிமைகள், குழந்தைகளின் உரிமைகள், அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த உலகளாவிய விவகாரங்கள், சர்வதேச உறவுகள், இலக்கியம், வரலாறு உட்பட ஏராளமான தலைப்புகளில் இப்புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இக்கல்லூரியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் மட்டுமல்லாமல், மீதமுள்ள புத்தகங்கள், கட்டுரைகளை, நூலகத்தின் சந்தாதாரர் ஆகி பயன்படுத்தலாம். ஓராண்டு சந்தா ரூ.400. கோவையில் நடைபெறும் இரண்டு நாள் கண்காட்சியில் ரூ.200 மட்டும் செலுத்தி உறுப்பினராகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை